(Reading time: 12 - 24 minutes)

 பத்மா, வீடு திரும்பியதும், முதல் வேலையாக, பெற்றோரிடம் தான் சுயமாக எடுத்த முதல் முடிவை, மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டாள்.

 " அம்மா! அப்பா! உங்க இஷ்டப்படி நான் சுயமாக இன்று, முதல் முடிவு எடுத்திருக்கேன், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்......."

 " எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம், பத்மா! சரி, என்ன முடிவு எடுத்திருக்கே?"

 " அடுத்தவாரம் இதே நாளில், என் தோழிகளுடன் நான் ஊட்டிக்குப் போய், அங்கே ஒரு வாரம் தங்கி, என் எதிர்காலத்துக்கு அவசியமான முடிவுகளை எடுக்கப் போறேன்......."

 " என்ன சொன்னே? இன்னிக்கி தேதி பத்து, பதினேழாந்தேதி கிளம்பி, இருபத்துநான்காம் தேதிவரை ஊட்டியில் இருந்துவிட்டு மறுநாள் இங்கிருப்பாய்......."

 " ஆமாம்ப்பா!"

 " அது சரி, ஊட்டியை ஏன் தேர்ந்தெடுத்தீங்க?"

 " அப்பா! ஊட்டி குளுகுளுன்னு குளிர்ச்சியா இருக்குமில்லே, அதை ரசிக்கத்தான்......"

 " மறுபடியும் ஒரு தடவை தேதிகளையும் போகப்போகிற இடத்தையும் அம்மாவிடம் சொல்லு! அவ ஏதோ நினைப்பிலே, நீ சொன்னதை காதிலே வாங்கிக்கலே......"

 " ஆமாம், பத்மா! அடுப்பிலே தண்ணீர் சுட வைச்சிருக்கேன், அதிகமா சூடாகி, சுண்டிப்போயிடுமோன்னு கவலை......."

 " பதினேழாம் தேதி கிளம்பி, ஊட்டியிலே ஒருவாரம் தங்கிவிட்டு, திரும்புகிறோம், இருபத்தைந்தாம் தேதி!"

 "ஏங்க, பத்மாவுக்கு டாக்டர் சொன்ன மருந்தை வாங்கிட்டீங்களா, உடனே கொடுங்க, அவளிடம்! வேளாவேளைக்கு சாப்பிட்டால்தான், பத்மாவை படுத்தி எடுக்கிற வீசிங், மூச்சு இழுப்பு குறையும்னு டாக்டர் சொன்னாரில்லே, பாவம்! அவளுக்கு குழந்தையா இருந்ததிலிருந்தே இந்த சைனஸ் வியாதி, அவளை பாடா படுத்துது!"

 " சரோஜா! இருபதாம் தேதியன்று, அவளை ஞாபகப்படுத்தும்படி ஏதோ சொன்னா போலிருக்கே...?"

 அப்பாவும் அம்மாவும் ஏன் இப்படி மாற்றி மாற்றி ஏதேதோ சொல்கிறார்கள் என புரியாமல் பத்மா விழித்தாள்.

 " பத்மா! உனக்கு முடிவு எடுக்கிற பக்குவம் வந்துவிட்டது, ரொம்ப சந்தோஷமாயிருக்கு, எங்களுக்கு! அதுவும் உடனே ஓடிவந்து எங்களுக்கு தெரிவித்தது, உன்னுடைய புத்திகூர்மையை சொல்லுது.."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.