(Reading time: 12 - 24 minutes)

 அதற்குள் அப்பா உள்ளே போய், பத்மாவுக்காக வாங்கிவந்த மருந்தை அவளிடம் கொடுத்தார்.

 " பத்மா! இந்த சிரப்பை வேளாவேளைக்கு தவறாம குடிச்சா, ராத்திரியிலே மூச்சுத் திணறல் இல்லாம, நிம்மதியா தூங்குவே.........!"

 " ஆமாம்மா! டாக்டர் சொன்னார், சைனஸ் வியாதி உள்ளவங்களுக்கு கோடைகாலம்தான் நல்லது, குளிர்காலத்திலே வீசிங் அதிகமா படுத்துமாம்!"

 பத்மாவுக்கு இப்போது ஓரளவுக்கு புரிந்தது! தனக்கு ஊட்டி ஒத்துக்கொள்ளாது, மூச்சுத் திணறல் அதிகமாயிடும்னு மறைமுகமா ஞாபகப்படுத்தறாங்க!

 மை காட்! எப்படி நான் இதை மறந்தேன்!

 தோழிகளோடு மகிழ்ச்சியா பேசிக்கொண்டிருந்த நேரத்திலே, இந்தக் கசப்பான விஷயம் மறந்துவிட்டது!

 அது சரி, ஏதோ இருபதாம்தேதின்னு அப்பா சொன்னாரே, அதென்ன?

 ஓ, மை காட்! மறந்தே போச்சே! அன்றைக்கு மறுநாள், அப்பா-அம்மாவின் சில்வர் ஜூபிலி இருபத்தைந்தாவது திருமண நாளாயிற்றே!

 அதை சிறப்பாக கொண்டாட, ஒருநாள் முன்னதாக நினைவுபடுத்த, அம்மாவிடம் நான்தானே சொன்னேன்! அந்த புனிதநாளில் அவர்களை பிரிந்து நான் எப்படி ஊட்டியில் சந்தோஷமாக இருக்கமுடியும்? அவர்கள்தான், நான் இல்லாமல் அந்த நாளை எப்படி கொண்டாடுவார்கள்?

 ச்சே! ஐ ஆம் எ ஸ்டுபிட்கேர்ல்!

 எப்படி நான் இத்தனை முக்கியமான விஷயங்களை மறந்து தவறான முடிவு எடுத்தேன்.

 " அப்பா! அம்மா!

ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி!

இப்பவே கல்பனாவுக்கு போன் பண்ணி நான் வரலைன்னு சொல்லிடறேன், எனக்கு உங்க திருமணநாள் கொண்டாட்டம்தான் முக்கியம். அன்றைய தினம் உங்களை பிரியமாட்டேன். இரண்டாவது, சைனஸ் வியாதியினால் இரவெல்லாம் கஷ்டப்படுவது நான், அதை நான் மறந்துவிட்டேன், நீங்கள் நினைவுபடுத்துகிறீர்கள்! அப்பா! அம்மா! நான் இன்னும் முடிவு எடுக்க பக்குவப்படவில்லை, அதனால் இன்னும் இரண்டு வருஷம் உங்கள் பாதுகாப்பிலே, வழிகாட்டுதலிலேயே இருக்கிறேன்......"

 "பத்மா! பயப்படாதே! முதல் முறை செய்யும்போது, எதுவும் கொஞ்சம் பிழையாகத்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.