(Reading time: 11 - 22 minutes)

 " நடக்கும்போது களைப்பு தெரியாமலிருக்க, நான் உங்களுடன் பேசிக்கொண்டே வருகிறேனே......."

 " உனக்கென்ன, என்னிடமிருந்து நூறு ரூபாய் வேண்டும், அவ்வளவுதானே! இந்தா, வைத்துக்கொள்! இனி என்னை அழைக்காதே! நடக்கும்போது, நான் எனக்குள்ளேயே என் மனதுடன் பேசிக்கொண்டே நடப்பேன், அதை இனி நீ தடுக்காமல் இருக்கத்தான் இந்தப் பணம்!"

 " நான் கௌரவமாக தொழில் செய்பவள், பிச்சைக்காரி அல்ல! பணம் எனக்கு தேவைதான், அதற்காக உழைக்காமல், பிச்சை எடுப்பதை வெறுப்பவள்! உங்கள் பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்! ஒரே ஒரு உதவி செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கு என்னைப்பற்றி சொல்லுங்கள்! நான் தினமும் இங்கே வருவேன், சரியா?"

 " ரஞ்சனி! உன்னால் எப்படி எல்லா ஆண்களும் உன்னிடம் ஒழுங்குமீறி நடக்கமாட்டார்கள் என நம்பமுடிகிறது?"

 "உங்கள் கேள்வி ரொம்ப கரெக்ட்! பெண்களை கடத்திக் கொண்டுபோய் சீரழித்துவிட்டு கொலையும் செய்கிற இன்றைய சமூகத்திலே, எப்படி என்னால் முன்பின் அறிமுகமில்லாத ஆணை நம்ப முடிகிறது என நீங்கள் வியப்பது, சரிதான்!

 உங்களை எப்படி நம்பினேன் என யோசியுங்கள்! உங்கள் களங்கமற்ற முகம் எனக்கு பளிச்சென உங்களை நம்பலாம் என்கிற நம்பிக்கை தருகிறது, அதுபோல இந்த சமூகத்திலே ஒரு லட்சம் நல்லவர்களிலே ஒரே ஒரு கயவன், அல்லது கறுப்பாடு எனும் விகிதாசாரத்திலேதான் நாம் பார்க்கவேண்டும் சமூகத்தை! அதைத்தான் ஆங்கிலத்திலே 'பாசிடிவ் அப்ரோச்' எனச் சொல்கிறார்கள்......"

 " ரஞ்சனி! உன் வயதுக்கு மீறிய மனப் பக்குவத்தையும் பேசும் திறனையும் காண்கிறேன். உன்னுடன் பேசிக்கொண்டிருந்ததிலே, நேரம் போனதே தெரியவில்லை, இந்தா! இந்தப் பணத்தை மறுக்காதே! உன்னுடன் பேசியதற்கான சம்பளம்தான் இந்தப் பணம்! பிச்சையல்ல!"

 " என் நம்பிக்கை வீண் போகவில்லை! ஐயா! இந்த நூறு ரூபாயில்தான் எனக்கும் என் குடும்பத்துக்கும் இன்றிரவு பசியாறப் போகிறது, கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்!"

 நரேன் மனநிறைவுடன் கிளம்பினார்.

 " ஐயா! தங்கள் நண்பர்களுக்கு 'வாடகை தோழி' யைப் பற்றி சொல்லுங்கள், நானும் பிழைக்கவேண்டுமே!"

 நரேன் தலையாட்டிவிட்டு வீடு திரும்பினார்.

 அவர் மனதில் போராட்டம்! ரஞ்சனி ஒரு நல்ல பெண்ணா, கெட்டவளா?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.