(Reading time: 11 - 22 minutes)

 நல்லவேளையாக, நிர்மலாவுக்கும் எனக்கும் இடையே இருந்த இடைவெளி அதிகமில்லை!

 என்னை பார்த்ததும், ஓடிவந்து, ரஞ்சனி "வாட் எ சர்பிரைஸ்! மேடம்! உங்களை இங்கே மீட் பண்ணுவேன்னு நினைக்கவேயில்லை, எப்படி இருக்கீங்க, மேம்?"

 என்னை லட்சியமே செய்யாமல், ரஞ்சனி, நிர்மலாவிடம் பேச்சுக் கொடுத்தவுடனே, நரேன் தப்பித்தேன், பிழைத்தேன்னு வேகமாக முன்னே நடந்தார்!

 " நீங்க நடந்துண்டிருங்க! நான் பேசிட்டு வரேன்."

 ஒருபக்கம் நிம்மதியாக இருந்தாலும், மறுபக்கம், இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்களோ, இருவரும் முன்னமேயே பரிச்சயம் உள்ளதுபோல் தெரிகிறதே, ரஞ்சனி தன்னைப்பற்றி என்ன சொல்லித் தொலைக்கிறாளோ எனும் பயம் தொற்றிக்கொள்ள, நரேனுக்கு வியர்த்துக் கொட்டியது.

 முகத்தை துடைத்துக்கொண்டே, நடையின் வேகத்தை குறைத்து, முதல் சுற்று முடிந்து புறப்பட்ட இடத்தை அடைவதை தள்ளிப்போட முயற்சித்தார்.

 காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. டிக், டிக், டிக்.........

 இன்னும் பத்தடிதான் மீதி! தலைதூக்கி, இருவரையும் பார்த்தார்.

 இருவரும், கலகல சிரிப்புடன், கட்டித் தழுவி, மிக நெருக்கமாக அமர்ந்து, தங்களையும் சுற்றத்தையும் மறந்து பேசிக் கொண்டிருந்தனர்.

 அவர்களிடம் பேசாமலே, அவர்களை கடந்து சென்றுவிடலாம் என நரேனுக்கு தைரியம் பிறந்தது!

 அப்படியே செய்தார்.

ஆனால், விதி வலியது!

 " என்னங்க! கொஞ்சம் நில்லுங்க! இன்னிக்கி உங்களுடன் நான் 'வாக்கிங்' வந்தது, நல்லதாப் போச்சு! இவங்க பேர், ரஞ்சனி! நம்ம ரெண்டு பிள்ளைங்களுக்கும் இவங்கதான், மாண்டிசோரி பள்ளியிலே மூணு வருஷமும் டீச்சர்! எனக்கு இவங்களை அப்பவே தெரியும்......"

 நரேன் ஓரக்கண்ணால் ரஞ்சனியை பார்த்தார். அவள் கண்சிமிட்டி சமிக்ஞை மூலம், தான் அவரை காட்டிக் கொடுக்கவில்லை, என்பதை தெரிவித்தாள்.

 பெருமூச்சு விட்டார், நரேன்.

 " பாவம்! இவங்க இப்ப வேலை இல்லாம கஷ்டப்படறாங்க! நம்மால் முடிந்தது, ஒருவேளை சாப்பாட்டுக்காவது உதவுமேன்னு, அவங்களுக்கு தினமும் நூறு ரூபாய் சம்பளம் தரேன்னு சொல்லிட்டேன், எதுக்குன்னா, நீங்க இங்கே 'வாக்கிங்' வர நேரத்திலே இவங்க எனக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.