(Reading time: 11 - 22 minutes)

 இந்த ஒருவருக்காக, பெருவாரியான நல்லவர்களை சந்தேகிப்பது, எந்த அளவுக்கு விவேகம், தர்மம், நியாயம்?

 வறுமையில் வாடும்போது, ஏழைகளிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியுமா?

 ஏழ்மையை ஒழிக்க நாடு சுதந்திரம் பெற்ற இந்த எழுபது ஆண்டுகளில் நாம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளோம்?

 வெளியே சொன்னால் வெட்கக்கேடு! பாராளுமன்றத்திலும் சட்டசபைகளிலும் உள்ள உறுப்பினர்களில் பெருவாரியானவர்கள்தான் கோடீஸ்வரன்கள்! கிரிமினல் வழக்கில் சிக்கியவர்கள்!

 ஏழைகளின் அதிகரிப்பு, கோடீஸ்வரன்கள் அதிகரிப்பைவிட ஆயிரம் மடங்கு!

 இப்படி ஏதேதோ எண்ணங்களில் சிக்கி நரேன் உறக்கம் இழந்தார்!

 அவரை அறியாமல், உடல் களைப்பிலே, விடியற்காலையில் அயர்ந்து தூங்கிவிட்டார்.

 எழுந்திருக்கும்போது, காலை மணி எட்டு!

 " நிர்மல்! மணி எட்டாகிவிட்டதே, என்னை எழுப்பியிருக்க கூடாதா?"

 " நீங்க அயர்ந்து தூங்கினீர்கள். ஒருமுறை உங்களை எழுப்ப, நெருங்கி வந்தேன். நீங்க தூக்கத்திலே ஏதோ உளறினீங்க! எனக்கு புரியலே!

 பரவாயில்லே, நீங்க ரிடையராயிட்டீங்க, ஆபீஸ் போகிற அவசரம் எதுவுமில்லே, இனிமே உங்க இஷ்டத்துக்கு தூங்கலாம், எந்த நேரத்திலும் சாப்பிடலாம், எப்ப வேணும்னாலும் வெளியில் போய்வரலாம்.........."

 " இரு இரு, அடுக்கிண்டே போகாதே! ரிலாக்ஸ்டா இருக்கலாம், ஒத்துக்கறேன், அதற்காக குறைந்த பட்ச டிசிப்ளினை விடமுடியாதே!"

 அவசர அவசரமாக காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, செய்தித்தாளை கையில் எடுத்தார்.

 " ஏங்க! புதுசா தூக்கத்திலே உளர்ற பழக்கம் வந்திருக்கு, மனசிலே ஏதாவது போராட்டமா, குழப்பமா, கவலையா, பொண்ணு இப்பத்தான் பத்தாவது படிக்கிறா, அவ கல்யாணத்தைப் பற்றி கவலைப்பட இன்னும் நிறைய வருஷம் இருக்கு.....பிள்ளை இப்பத்தான் எட்டாம் கிளாஸ்! அவனை காலேஜிலே சேர்க்கிற கவலைப்பட நாலு வருஷமிருக்கு.....வேறென்ன கவலை? கடவுள் புண்ணியத்திலே, பணக் கஷ்டம் ஒண்ணுமில்லே, சொந்த வீடு! உங்க அப்பா, அம்மா ஊரிலே சௌக்கியமா இருக்காங்க.....என்ன கவலை?"

 நரேன் தன் மனப் போராட்டத்தை அதற்குள் அவளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.