(Reading time: 11 - 22 minutes)

 " யோசித்துச் சொல்லு!"

 " என்னடா பொடிவச்சுப் பேசறே! இரு இரு, ஒரு நிமிஷம்!.......

 ஆங்! நீ கேட்பது புரிஞ்சிடுச்சி! தொகுதியிலே நூறு வாக்காளர்கள் இருந்தா, அதிலே எழுபதுபேர்தான் வாக்களிக்கிறாங்க!

 அந்த எழுபதுபேர் வாக்கை, போட்டியிடுகிற மூணு, நாலுபேர் பிரிச்சிக்கிறாங்க, அந்த நாலுபேரிலே யார் அதிக வாக்குகளை பெறுகிறாரோ, அவர்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்..."

 " தாத்தா! உதாரணமா, நூறு வாக்காளர் இருந்தால், எழுபதுபேர் வாக்களிக்கிறாங்க, அந்த எழுபது வாக்குகளை, நாலு வேட்பாளர்கள் பிரிச்சுக்கிறாங்க, 25, 20, 13, 12வாக்கா பிரிச்சிக்கிறாங்க!

 இதிலே 25 வாக்கு வாங்கினவரை தேர்ந்தெடுக்கப்பட்டவரா அறிவிக்கிறாங்க, அப்படி அறிவிக்கப்பட்டவங்க ஒண்ணா கூடி ஆட்சி நடத்தறாங்க, சரியா, தாத்தா?"

 " ஆமாம்டா, கண்ணு!"

 " ஒவ்வொரு தொகுதியிலேயும், நாலில் ஒரு பங்கு வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்,

அதிலும் ஆளுங்கட்சியினரால் இந்த நாட்டின் ஆட்சி நடக்கிறது, சரிதானே தாத்தா?"

 " ஆமாம்டா!"

 " அதாவது, தாத்தா! பெருவாரியான மக்களால், நிராகரிக்கப்பட்டவர்கள் நடத்தற ஆட்சி!"

 " அதெப்படிடா?"

 " எழுபதுபேர் வாக்களித்ததிலே, வெற்றிபெற்றவர் பெற்ற வாக்கு, 25ன்னா, மீதி 45 பேர் அவரை ஆதரிக்கலைன்னுதானே பொருள்!

 எல்லா தொகுதிகளிலும் இப்படி வெற்றி பெற்றவங்க நடத்தற ஆட்சி, மக்களாட்சியா, மக்கள்விரோத ஆட்சியா, தாத்தா?"

 'மடக்கிட்டானே, பேரன்!' என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டே, தாத்தா எழுந்தார்.

 " தாத்தா! விசாரணை தொடங்கியிருக்கு, இன்னும் முடியலே, 'இன்றுபோய் நாளை வா!' நாளை மீண்டும் தொடரும்."

 காலம் அதன் பணியை தொடர்ந்து செய்துவருவதால், தாத்தாவினால், மறுநாள் புலருவதை தாமதப்படுத்தவோ, தடுத்து நிறுத்தவோ இயலவில்லை!

 பேரன் சமத்துவன் உறங்கி எழுந்ததும், எதிரில் வந்து நிற்பானே, கேள்வி கேட்பானே, என்று முதியவர் யோசனையில் ஆழ்ந்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.