(Reading time: 11 - 22 minutes)

 " அது உண்மைதான்!அப்பா! உங்களைப் பார்த்தா, பாவமாயிருக்குப்பா!"

 என்று சொல்லிக்கொண்டே நடையைக் கட்டினாள், தர்மராணி!

 வாசல்புறத்தில், தொப்பென சத்தம் கேட்டதும், காமேஸ்வரன் ஓடிப்போய், அன்றைய நியூஸ்பேப்பரை கையில் எடுத்து கண்ணோட்டம் விட்டுக்கொண்டே அங்கே வந்தான்.

 " காமேஸ்வரா! என்னை காப்பாத்தமாட்டியாடா?"

 " முதலை வாயிலே மாட்டிண்ட பக்தன், பரமனை அழைத்தாமாதிரி, கூப்பிடறியே, என்ன ஆபத்து?"

 "ஏன்டா, நேத்து உன் புள்ளெ என்னைக் கேட்ட கேள்வியை மறந்துட்டியா? இன்னிக்கி, அவனுக்கு பதில் சொல்லணுமேடா........"

 " அப்பா! கவலைப்படாதே! அந்தக் காலத்திலே, நீ சட்டக் கல்லூரியிலே படிக்கிறப்ப, புத்தகத்திலே படிச்சிருப்பியே, அதாம்ப்பா, நீதியிலே எத்தனை வகை இருக்கு, காலத்துக்கு காலம் அது எப்படி மாறுது, சாக்ரடீஸ், பிளேடோ, என்ன சொல்லியிருக்கான், நம்ம மத ஆசாரியர்கள் சொல்லியிருக்கிறதென்ன, இந்த சொற்கள் எப்படி இடம், பொருள், ஏவலுக்கேற்ப வெவ்வேறு அர்த்தம் தருதுன்னு சொல்ல ஆரம்பிச்சேன்னா, ஒண்ணு அவன் தூங்கிப் போயிடுவான், இல்லேன்னா தான் கேள்வி கேட்டதையே மறந்துடுவான், ........எப்படி என் ஐடியா?"

 " சூப்பர்ரா! வேற வழியில்லே, வரட்டும் உன்புள்ளெ, ஆரம்பிச்சுடறேன் பிரசங்கத்தை!"

 " தாத்தா!"

குரல் கேட்டதும், காமேஸ்வரனை காணோம், தாத்தாவிடம் பிறந்த துணிவையும்தான்!

 " குட் மார்னிங், தாத்தா! காபி குடிச்சிட்டியா?"

 " சமத்துவா! இப்படி அன்பா என்னை விசாரிக்க, இந்த வீட்டிலே வேற யாருடா இருக்கா?......"

 உள்ளேயிருந்து கனைப்பு சத்தம் வந்தது!

 "........உங்கம்மாவைத் தவிர! காலையிலே கொடுத்தாடா, நானும் குடிச்சேன்........ஆமாம், நீ குடிச்சியா?"

 " தாத்தா! கொரோனா தொற்றுநோய் வந்ததிலிருந்து, ஆளாளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எச்சரிக்கை தந்துண்டே இருக்காங்க, அதிலே ஒண்ணு, காபி குடிக்கக்கூடாது! அதனாலே, நிறுத்திட்டேன்......."

 " ஆமாம்டா கண்ணு! நாம ரொம்ப கவனமா இருக்கணும், தினமும் நிறையபேர் செத்துண்டிருக்கா!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.