(Reading time: 18 - 36 minutes)

புடிங்க சார் என்று ஒப்படைக்கவும் மயக்கதின் பிடியில் வீழ்ந்தேன்.

சகி.....சகி.....என்ன ஆச்சு?கண்ணதிற சகி?நான் பேசுறது கேக்குதா?தொலைவில் இருந்து பயணிக்கும் ஒலியாக அவரது குரல் என் காதுகளை விட்டு விலகிக்கொண்டிருந்தது.

புயலின் சுழலில் சிக்கிய சிறு பறவையொன்று மேகப்பொதிகளில் வீழ்ந்ததுபோல தேவதை கரங்களில் அடைக்கலம் அடைந்த ஒரு உணர்வில் தரையில் இருந்து உயர்ந்தது என்னுடல்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு.......

ஏதோவொரு சத்தம் என் இதயத் துடிப்போடு இசைந்து ஒலிக்கிறது.பசைபோட்டு ஒட்டியது போன்ற இமைகளைப் பிராயத்தனப்பட்டு திறந்தேன்.உடலின் பாகங்கள் கழட்டிவைத்த உணர்வில் இருந்தது.

கீறல் விழுந்த கண்ணாடியை போன்ற பழுதாக தெரிந்த பார்வை சிரமப்பட்டு சிமிட்ட தெளிய ஆரம்பித்தது.சுற்றிலும் பார்த்தேன்.மருத்துவ உபகரணங்கள் புடைசூழ அறையின் நடுவில் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தேன்.

அதுவொரு மருத்துவமனை என்பதை ஊகிக்க நேரமாகவில்லை.சுவாசம் தந்த குழாயை மெல்ல விலகிக் சுவாசித்தேன்.உள்ளே வந்த செவிலி என்னை சோதனை செய்துவிட்டு மருத்துவரை அழைத்து வந்தார்.

அதன்பிறகு சிலர் வந்து என்னை சோதனை செய்தனர்.ஆனால் நான் காண விரும்பிய முகம் அதை காணவில்லை.பின்னர் செவிலி என்னை கவனித்துக் கொண்டார்.

வெறுமனே மூடிய கண்களுக்குள் கருவிழி அலைபாய்ந்தது.ஏதோ ஒரு அரவம்.விழி திறந்து அலைபாயும் கண்களுக்குள் விழுந்தது அந்த உருவம்.நான் தேடிய முகம்.

சகி.....

அதே அழைப்பு அதே குரல் என்னருகில் வந்து நின்றது.

சகி எப்படி இருக்க?

இருக்கேன்.

சீக்கிரம் சரி ஆகிடும்.

ம்ம்ம்.....

சார் என்ன நடந்தது சார்?

எதிரில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினார்.

அதில்......

முக்கிய செய்திகள் ஆந்திரா மற்றும் தமிழக எல்லையில் பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இது சம்பந்தமாக கடந்த ஆறுமாத காலமாக அசிஸ்டெண்ட் கமிஷனர் மற்றும் அவரது குழு ரகசிய போலிஸ்

6 comments

• [quote name="madhumathi9"]wow arumaiyaana theerppu :hatsoff: (y) :clap: :thnkx: & :GL:[/quote]
Thanks madhu
• பதினைந்து நிமிடத்திற்கொரு கற்பழிப்பு நடக்கிற இந்த நாளில் இந்த நாட்டில், பெண்கள் ஆயுதம் தாங்கி ஆண்களை அடக்க
வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பொறுத்தது போதும், பொங்கி எழு, தாய்க்குலமே!
• Pengalukku yen indha aniti :angry:
:hatsoff: to saki's bravery 👏👏👏👏 her struggle to defend herself with so much of pain is simply superb 👌

Nambikai-in karam nittum mithran dev, :hatsoff: to his timely, assuring, supportive and motivating words. Ivargalai pole Nala ulangal vazhga!!👍 Let everyone be like this.

Lastly immediate action towards those demons was perfect end 3:)

With the increasing number of cases self defence is the best option but that alone is not enough. It is already too late to take the right measures in protecting our society from this evil act.
Every individual has the responsibility in building a better tomorrow...

You have nailed it ma'am :hatsoff: 👏👏👏👏 certain phrases are power packed. Great job

Thank you and best wishes.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.