பென்ஷனுமா சில லட்சங்கள் சம்பாதிச்சிருப்பேன். செலவெல்லாம் போக ஒரு லட்ச ரூபாயாவது மிச்சப் படுத்தியிருப்பேன். பார்க்கப்போனா, அந்த ஒரு லட்ச ரூபாயை சீதனமாகக் கொடுத்துத்தான் இவளை கலியாணம் பண்ணிக்கிட்டிருக்கேன், இலவசமா இல்லே. நான் ஏன் விவாகரத்து பண்ணிக்கணும்? விட்டுட்டுப் போகணும்? விதி எங்களை ஒண்ணாப் பிணைச்சிருக்கு."
சட்டென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது. "அது சரி, அவ உனக்கு ஒரு லட்ச ரூபாய் தந்தா நீ அவளை விட்டுடுவியா?" என்று கேட்டேன்.
அவன் திடுக்கிட்டான். சற்ற நேரம் என்னைப் பார்த்து மலங்க மலங்க விழித்தான். "கேலி செய்யறியா?" என்று கேட்டான்.
"இல்லே, சீரியஸாத்தான் சொல்றேன், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு இது ஒண்ணுதான்!" என்றேன்.
"நீ அவகிட்டே இதைச் சொன்னா, அவ உடனே ஒரு லட்ச ரூபாயை உன்கிட்டே விட்டெறிவா. நான் அவளோட அடிமை யாயிடுவேன் - ராணி பசந்த்!"
சூரஜ்பான் தனக்கு எசமானியாவதை அவன் விரும்ப வில்லை. தானே அவளுக்கு எசமானனாக இருக்க விரும்பினான்.
அத்துடன் அவள் அழகான யுவதியாக இருக்கக் கூடாது, அவலட்சண மனைவியாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அவன் கவலையில்லாமலிருக்கலாம். ஆனால் இவ்வாறு வெளிப் படையாக அவளிடம் சொல்ல முடியாதே!
நான் காஜா சாயபுவின் தர்காவில் பிரார்த்தனை செலுத்திவிட்டு அஜ்மீரிலிருந்து திரும்பினேன். அதற்குச் சில நாட்களுக்குப்பின் திடீரென்று ஒருநாள் சூரஜ்பானின் வீட்டில் விளக்குகள் பிரகாசமாக எரிவதைக் கண்டு வியப்பு ஏற்பட்டது. என்ன விஷயம்..? ராணி திரும்பி வந்து விட்டாள்..! கூட யாராவது வந்திருக்கிறார்களா..? இல்லை, வேறு யாரும் வரவில்லை..
🌼🌸❀✿🌷