சூள்கொட்டினார் கான் பகதூர். அவருடைய அனுதாபம் அந்தப் பெண்ணிடந்தான் என்று தோன்றியது. காதுகளிலிருந்து கைகளைச் சற்று நகர்த்திக் கொண்டேன்.
ஆனால் என் எண்ணம் தவறு.
நன்றாக இருட்டிக் கொண்டு வந்தது. நாங்கள் போக வேண்டிய இடம் வந்து சேர வெகுநேரமாகும். இரவுச் சாப்பாட் டுக்கும் நேரமாகும். கதை முடிந்து போய் விட்டால் சாப்பாட்டு நேரம் வரையில் நாங்கள் என்ன செய்வது?
நான் கைகளைக் காதுகளிலிருந்து எடுத்துக் கொண்டேன்.
கான் பகதூர் சொன்னார்," நடந்த வரையிலே நல்லதுதான். சூரஜ்பான் நல்ல வேளையாகத் தப்பிச்சுட்டா. இது மாதிரி எத்தனையோ பார்த்து விட்டேன். மேகர்பான் அவளைக் கொன்னிருக்கலாமே! அழகிகள் மனம் சபலப் படறது இயற்கை தான். என்னிக்காவது ஒரு நாள் அவளுக்குச் சபலமேற்பட்டா அவன் அவளைக் கொன்று போட்டிருப்பான். அவ பொழைச்சு வந்தது பெரிய காரியம். அமிலம்பட்டு அவ அழகு கொஞ்சம் கெட்டுப் போச்சேன்னா, அது அவளோட பாவங்களுக்கான தண்டனைன்னு வச்சுக்கலாம்."
நான் பதில் சொல்லவில்லை. பாவ தத்துவத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. தவிர, ஒரு பாவிக்கு இன்னொரு பாவி தண்டனை கொடுப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேகர்பானும் பாவிதானே!
"யோசிச்சுப் பாருங்க!" கான் பகதூர் சொன்னார். "கடைசியிலே அந்தப் பொண்ணுக்கு என்ன பெரிய நஷ்டம் ஏற்படுது, சொல்லுங்க? நஷ்டப்பட்டவன் அவன்தான்! அவனோட நஷ்டத்துக்கு அந்த நகைகள் ஈடாகாது. வேலையிலே இருந்திருந்தா அவன் ஐ.ஜி. ஆகாட்டியும் டி.ஐ.ஜி. ஆகவாவது ஆயிருப்பான். விதி! விதிப்படிதான் எல்லாம் நடக்கும். அந்த ரயில்வே உத்தியோகமும் நிலைக்கலே அவனுக்கு. லட்சரூபாய் நகை கிடைச்சதும் அவன் மூளை கெட்டுப் போச்சு. அந்த நகை களை சீதனமாக் கொடுத்து ஒரு கௌரவமான ராஜபுத்திரக் குடும்பத்திலே கலியாணம் பண்ணிக்கிட்டான். அவங்க அவனை இங்கிலீஷ்காரன்கிட்டே