பத்மாவைத் தற்காக்க ஒப்புக்கொண்டு உடனடியாக பத்மாவைப் போய்ப் பார்த்து விட்டும் வந்தார்.
பத்மாவை தற்காலிகமாக இளங் குற்றவாளிகள் நிலையத்தில் இருக்க வைத்தார்கள். வழக்கு நடக்கும் நாட்களில் மட்டும் ராஜி அவளைப் பார்க்க முடிந்தது.
ராஜி தற்காப்பு சாட்சியாக வரவேண்டும் என பத்மாவின் வழக்கறிஞர் கேட்டபோது அவள் ஒப்புக் கொண்டாள். ஆனால் சேகரன் கடுமையாக எதிர்த்தான். "அவதான் என் குடும்பத்த அழிச்சான்னா நீயும் சேர்ந்து எங்களுக்கு அவமானத்தப் பூசப் போறியா? நான் என் தம்பிக்கு சார்பா சாட்சியம் சொல்லப் போறேன், நீ எனக்கு எதிரா சாட்சியம் சொல்லப் போறியா? ஒனக்கு ஒன் தங்கச்சி முக்கியமா புருஷன் முக்கியமா?" என்று கேட்டான்.
"புருஷன் முக்கியந்தாங்க. ஆனா அவள இப்படி அனாதரவா விட்டுட்றதா? அவளுக்குள்ள ஒரே பந்தம் நான்தானே!"
"முடியாது. நீ அவளுக்கு சாதகமா சாட்சியம் சொல்றதுன்னா நமக்குள்ள உறவு அத்துப் போயிடும் பாத்துக்க!"
இரவு முழுவதும் அழுதிருந்துவிட்டு சாட்சி சொல்லும் காலை வேளையில் தெளிவானாள் ராஜி. அன்று வழக்குக்கு அனைவரும் போனார்கள். அவர்கள் வீட்டுக்கு மூன்று வீடுகள் தள்ளி பார்வதி அத்தை என்ற ஒரு நடுவயது விதவை தன் மகனுடன் வாடகை வீட்டில் குடியிருந்தாள். அவளிடம் குழந்தைகளை விட்டுவிட்டுப் போனார்கள்.
சேகரன் தன் தம்பியின் கொலை பற்றி சாட்சியம் சொன்னான். பத்மா எப்போதும் பைத்தியம் போல் நடந்து கொள்வாள் என்றும் பாஸ்கரனை எப்போதுமே வெறுத்தாள் என்றும், வேறு யாராலோ கற்பழிக்கப்பட்டு அதிலிருந்து தப்ப பாஸ்கரன் மேல் பழிபோட்டு அவன் அதை மறுக்க வெறி பிடித்துக் கொலை செய்தாள் என்றும் அவன் சாட்சியம் இருந்தது.
ராஜி கூண்டிலேறி உண்மையைச் சொன்னாள். சேகரனின் முறைக்கும் விழிகளைச் சந்திக்காமல் தவிர்த்துப் பேசினாள். பாஸ்கரன் மேல் ஏற்கனவே உள்ள ஒழுங்கீனங்களைப் பற்றிச் சொன்னாள். தற்காப்பு வழக்கறிஞர் பாஸ்கரனின் ஒழுங்கீனம் பற்றி சாதிக்க இன்னும்