Page 16 of 22
கலப்பதற்காக சமையலறைக்குள் நுழைந்த போது பின்னாலேயே வந்தான்.
அவள் கேத்தலில் நீர் நிரப்பி கேஸ் அடுப்பின் மீது வைத்தாள்.
"ஸ்டோர் ரூமை ஒழிச்சி வச்சிருக்கியாமே!" என்று கேட்டான். மாமியார் ஓதியிருக்கிறாள் எனத் தெரிந்தது.
அடுப்பின் விசையைத் தட்டினாள். அடுப்பு "குப்" என்று பற்றியது. "ஆமா!" என்றாள்.
"ஏன்?"
"ரொம்ப அழுக்கா கிடந்திச்சி!"
"படுக்கையெல்லாம் போட்டிருக்கியாமில்ல!"
"ஆமா!"
"ஏன்?"
ஒரு கோப்பையை எடுத்து தேத்துகள் பையைப் போட்டாள். கொஞ்சம் மௌனித்துச் சொன்னாள்: "நாளைக்கு பத்மாவ போய் அழச்சிக்கிட்டு வரப் போறேங்க!"
அவன் கோபத்தில் மூச்சிரைத்தான். "இதப்பத்தி ஒங்கிட்ட முன்னமே நான் சொல்லியிருக்கேன்ல?"
"ஆமா!"
"என்ன ஆமா?"
"ஆமா, சொல்லியிருக்கீங்க!"