(Reading time: 28 - 56 minutes)
சிறுகதை - நாளைக்கு - ரெ.கார்த்திகேசு
சிறுகதை - நாளைக்கு - ரெ.கார்த்திகேசு

   

"அப்ப நீ செய்றது திமிர்தான?"

   

கேத்தல் நீண்ட விசில் அடித்தது. அவள் அடுப்பை அணைத்து கொதிநீரை எடுத்து கோப்பையில் ஊற்றினாள்.

   

"சொல்லுடி, திமிர்தான!"

   

"இல்லிங்க!"

   

"என்ன இல்ல? நானும் அம்மாவும் இவ்வளவு சொல்லியும் எங்க பேச்ச கேக்காம நீ பாட்டுக்கு உன் விருப்பம் போலச் செய்றதுன்னா, அது திமிர் இல்லியா?"

   

"இல்லைங்க அதுக்குப் பேரு மனிதாபிமானம்!" தேத்துகள் பை கொதி நீரில் ஊறிக் கொண்டிருந்தது.

   

"எதுடி மனிதாபிமானம்? ஒரு கொலைகாரியைக் கொண்டு வீட்ல வச்சிக்கிறது மனிதாபிமானமா?"

   

"அவ கொலைகாரி இல்ல. இதுக்கு முன்னால ஒரு புழுவைக் கூட அவ வேணுமின்னு கொன்னதில்ல. அவ பச்சப் பிள்ள!"

   

கோப்பையிருந்து தேத்துகள் பையை அகற்றி பால் விட்டுக் கலக்கினாள். சீனி போட்டுக் கொள்ளவில்லை.

   

"ஓஹோ! பச்சப் பிள்ளதான் அரிவாள எடுத்து கொத்து கொத்துன்னு கொத்தினாளோ?"

   

"அவள அப்படி கொத்த வச்சதினால கொத்தினா! அவளோட மனச அந்த அளவுக்குக் கொடுமைப் படுத்தினதினால அடக்க முடியாம....!"

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.