பத்மா "ஓ"வென்று அழுதாள். ராஜியின் ரத்தம் கொதித்தது. பத்மாவை அங்கேயே விட்டுவிட்டுத் தன்னறைக்கு வந்து கணவனை உலுக்கினாள். "என்ன சொன்னான் கேட்டிங்களா உங்க தம்பி?"
"என்னா?" என்றான்.
"செய்றத செஞ்சிட்டு என் தங்கச்சிய தேவடியாங்கிறாங்க!"
வெளியே யாரோ அலறினார்கள். ராஜியும் சேகரனும் ஓடி வந்த போது பாஸ்கரனின் அறை திறந்து கிடந்தது. பத்மா உள்ளே இருந்தாள். அவள் கையில் தேங்காய் உரிக்கும் அரிவாள் இருந்தது. அதை ஓங்கி ஓங்கிக் கொத்திக் கொண்டிருந்தாள். சேகரனின் மண்டையிலும் நெஞ்சிலும் கைகளிலும் வெட்டிப் பிளந்த காயங்களிலிருந்து ரத்தம் பீய்ச்சியடித்தது. அவன் கீழே விழுந்து கிடந்தான்.
*** **** ****
போலிசும் ஆம்புலன்சும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வந்தன. ஆம்புலன்சில் வந்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார். பாஸ்கரன் செத்துவிட்டிருந்தான்.
போலீசில் வாக்கு மூலம் எடுத்தார்கள். இரத்தத்தின் மாதிரியும் விந்துவின் மாதிரியும் எடுத்துக் கொண்டார்கள். உடலை சவப் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு போனார்கள். பத்மாவை போலிஸ் காரில் ஏற்றி நிலையத்தில் தடுத்து வைத்தார்கள். சேகரன் வர மறுத்து விட ராஜி மட்டும் உடன் போய் அவளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு வந்தாள்.
சேகரன் கொதித்தான். "கொலைகாரி, குடும்பத்தை அழித்த நாசகாரி" என்று இரவு முழுக்கக் கத்தினான். அவனோடு அவன் அம்மாவும் சேர்ந்து கொண்டு கத்தினாள். பாஸ்கரன் என்ன செய்தான் என்பது பற்றி இருவரும் பேசவில்லை. ராஜி பிள்ளைகளை அணைத்துக் கொண்டு இரவு முழுக்க ஒடுங்கிப் போயிருந்தாள். போலிஸ் லாக்கப்பில் நடுங்கிச் சுருண்டுப் போயிருக்கும் அந்தப் பனிரெண்டு வயது சஉஆத்