(Reading time: 26 - 51 minutes)

சில வேளைகளில், மேலிருந்து கீழே குதிக்க விரும்புபவர்களுக்கு பயமாக இருக்கும்போதும், பதின்ம வயதினர் குதிக்கும்போதும், அங்கு பணிபுரிபவர்களும் சேர்ந்தே குதிக்க வேண்டும். சரித்திரன் இன்னமும் அந்த வேலையை விடாமல் இருப்பதற்கு இதுதான் காரணம். ஒவ்வொரு முறை அவன்  மேலிருந்து குதிக்கும்போதும், அவனுக்கு அவளை விட்டு தூரம் போவது போல இருக்கும். இந்த உலகத்தை விட்டே எங்கோ பறப்பது போல இருக்கும். சரித்திரனைப் பொறுத்தவரை இதுவும் ஒருவித போதை தான்!

ஆனால் இதில் ஆபத்துகளும் அதிகம்! உடலோடு இணைக்கப்பட்ட அந்த பட்டை திடமாக இருத்தல் வேண்டும், காற்றழுத்தம் சரியான அளவில் இருக்க வேண்டும், வானிலையும் சாதகமாய் இருந்தால்தான் குதிக்க முடியும். இவற்றையெல்லாம் தாண்டி, மேலிருந்து கீழே குதிக்கும்போது அவன் உடல் எடை ஏற்படுத்தும் வேகமானது, மலைகள் நோக்கியோ பாறைகளை நோக்கியோ பாய்ந்திட்டால், பலத்த காயங்கள் ஏற்படும், உயிருக்கு கூட ஆபத்து உண்டு! இதெல்லாம் அறியாதவன் அல்ல சரித்திரன். மூன்று வருடங்களுக்கு முன், இது போல ஆபத்தை சந்தித்தவன்தான் அவனும்! எனினும் இதை விட்டுவிடும் எண்ணம் மட்டும் அவனுக்கு எழவே இல்லை. தன் அன்னைக்கு பதில் கடிதம் எழுதினான் சரித்திரன்.

அம்மா,

கவலை வேண்டாம். நான் சாக மாட்டேன்! அவ ஏன் என்னை விட்டுட்டு போனாள்அதை அவ கிட்ட கேட்கணும்! அவளைப் பார்க்காமல் எனக்கு மரணம் வராது. ஒருவேளை உங்கள் மகன் உயிரோடு இருக்கணும்னு தான் அவ இன்னும் வரவில்லை போல.

அதை விடுங்க.. உங்களுக்கு இன்னொரு செய்தியும் சொல்லனும், இங்கே 200 அடி உயரத்திற்கு மேலிருந்து குதிக்கிற மாதிரி ஏற்பாடுகள் செஞ்சிருக்காங்க. வழக்கம்போலவே, முதலில் நான்தான் குதிக்க போறேன். ஃபோன்ல இதை சொன்னால் நீங்க பயப்படுவீங்க.. இந்த லெட்டர் உங்க கைல கிடைக்கிற முன்னாடியே நான் குதிச்சி பிழைச்சிருப்பேன். கவலையே படாதீங்க.. ரெண்டு நாள் இருக்கு! இந்த ரெண்டு நாளில் அவ வந்துட்டால், நான் குதிக்கும்போது எனக்கு ஏதும் ஆகலாம். ஆனால் அஞ்சு வருஷமா வராதவள், இனிமேலா வர போறா?”

மன்னிக்கவும்,

சரித்திரன்.

அறிந்திருக்கவில்லை அவன்! சரித்திரன் தேடும் அந்த அவள், அவன் தங்கியிருக்கும் அதே உயரக ஹோட்டலில் அமர்ந்திருக்கிறாள் என்று!

துக்கு கல்யாணத்துக்கு ஓகே சொன்ன?” கடுமையான குரலில் கேட்டான் ஆகாஷ். தன்னெதிரில் இருந்தவனின் கோபத்திற்கு சம்பந்தமே இல்லாதவள் போல ஐஸ் க்ரீமை விழுங்கி கொண்டிருந்தாள் ஆதர்ஷினி.

“ தர்ஷினி, நான் உன்னைத்தான் கேட்கிறேன்..”

“ப்ச்ச் உனகென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அஞ்சு வருஷமா ஏன் கல்யாணத்துக்கு சரி சொல்லலன்னு நச்சரிச்ச நீ.. இப்போ சரின்னு சொன்னதும் ஏன் சரி சொல்லுறேன்னு கேட்குற?” என்று அவள் கேட்கவும் மீண்டும் அவளை முறைத்தான் ஆகாஷ்.

“ உன்னை கல்யாணம் பண்ணிக்கோ வற்புறுத்தியதின் காரணம் நீ அவனை மறக்கணும்ன்னு தான்!”

“எவனை?” என்று புரியாமல் கேட்டாள் ஆதர்ஷினி.

“ஓஹோ, இப்படி கேள்வி கேட்டால் நீ அவனை மறந்திட்டதா அர்த்தமா?”

“ ப்ச்ச் நீ எவனை பத்தி பேசுறன்னு எனக்கு புரியலப்பா” என்று விழிகளை உருட்டியவளைப் பார்த்து பொறுமையிழந்தான் ஆகாஷ்.

“சரித்திரன். உன் முதல் காதல் ! உன்னை மனசுல இன்னமும் வாழுறவன்.. போதுமா?” ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து கூறியவனைப்  பார்த்து இலகுவாய் பேசினாள் ஆதர்ஷினி.

“ ஆகாஷ்.. சரித்திரன் என்னுடைய ப்ரண்ட்.. எனக்கும் மட்டுமா? உனக்கும் தானே ப்ரண்ட்? ஒரே காலேஜ் ப்ரண்ட்.. அவ்வளவுதான்.. முதல் காதல் அது இதுன்னு உளறாதே ! அவனை மறந்துட்டேனான்னு இனி கேட்காதே! நான் எப்போ அவனை நினைச்சேன், இப்போ மறக்கறதுக்கு?” என்று ஒரே போடாய் போட்டாள் ஆதர்ஷினி. “ என்ன காந்தி செத்துட்டாரா?” என்று கேட்பதுபோல கேட்டு வைத்தவளுக்கு ஆஸ்கார் அவார்ட் கொடுக்கும் எண்ணமில்லாமல் முறைத்தான் ஆகாஷ். சரியான அழுத்தக்காரி! என்று மனதில் அழுத்தமாய் சொல்லிக் கொண்டான். அதே நேரம் அந்த உரையாடலில் இருந்து பின்வாங்கும் எண்ணம் இல்லாமல் கேள்வி கணைகளை தொடுக்க ஆரம்பித்தான் அவன்.

“ நாம எல்லாரும் ஒரே காலேஜ்ல படிச்சிருக்கலாம். மூணு பேருக்கு நடுவிலும் அழகான நட்பு இருந்திருக்கலாம்! ஆனா அவன் மீது வந்த காதலும், நேசமும் உனக்கு என்மேல வந்ததுண்டா தர்ஷினி?”

“..”. மௌனம்! அவளது மௌனத்தை சாதகமாக்கிக் கொண்டு அடுத்த கேள்வியைக் கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.