(Reading time: 26 - 51 minutes)

வன் உன்னோடவே இருந்தப்போது நீ அவனைத்தான் காதலிச்ச, சரி ஓகே! அவன் வேணாம்னு நீயேதானே விலகி வந்த? இந்த அஞ்சு வருஷம் நான் உன்கூடவே இருந்துருக்கேன். அவனை விட உன்மேல அக்கறை காட்டுறேன். அவன் மாதிரி விளையாட்டுக்குக் கூட உன்னை நான் அழ வெச்சது இல்லை. “டீ” போட்டு பேசினது இல்லை..  உன்னை எப்பவும் அவாய்ட் பண்ணது இல்லை! ஆனால், உனக்கு ஏன் என்மேல லவ் வரல?”

“..”

“அவனை மறந்துட்டன்னு சொன்னீயே, போன வாரம் உன் அண்ணா மகனுக்கு பேரு வைக்கும்போது ரிதுஷ்வர்ன்னு ஏன் வைச்ச? சரித்திரனை நீ ரிதுன்னு கூப்பிடுவீயே அதை நான் மறந்துருப்பேன்னு நினைச்சீயா? உன் பேரும் அவன் பேரும் சேர்ந்து இருக்கணும்னு தானே அந்த பெயரை வைச்ச?” என்று அவன் கேட்கவும், தலை குனிந்து விட்டாள் ஆதர்ஷினி. எல்லாம் அறிந்திருப்பவனிடம் என்னவென்று பொய் சொல்வதாம்?

“ இப்போ நீ என்னதான் சொல்ல வர?” என்று கேட்டாள் தனது வலியை மறைத்தபடி. “உப்ப்..” என்று பெருமூச்சுவிட்டவன்,

“ நான் சராசரி மனுஷன்மா ..மஹாத்மா இல்லை.. உன் மனசாட்சியை ஏமாற்றாமல், உன்னால் அவனை மறக்க முடியும்னா சொல்லு, நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்.. அப்படி மறக்க முடியாதுன்னா ஆளை விடு. ஒரு நண்பனாக என்னால உன்கூட இருக்க முடியும். அந்த லெவல் வரைக்கும்தான் நான் நல்லவன்தான். மத்தபடி என் பொண்டாட்டி இன்னொருத்தனை நினைச்சிட்டு வாழுறதை ஏத்துக்கிட்டு காத்திருக்கும் அளவுக்கு நான் தியாகியும் இல்லை! ஹீரோவும் இல்லை!” என்றுவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தான் ஆகாஷ்.

“ நாளைக்கு பங்கீ ஜம்பிங்க்கு நீ வருவியா? இல்லை நானே போயிக்கவா?” என்று கேட்டாள் ஆதர்ஷினி, அவள் அந்த இடத்திற்கு வந்ததன் காரணமே இதுதான்.

“ இப்போ நான் உனக்கு நண்பன்.. சோ வந்து தொலையுறேன்.. இதுவே புருஷனாய் இருந்திருந்தா பளார்ன்னு ரெண்டு விட்டுருப்பேன்” என்று அவன் கூறவும் ஆதர்ஷினிக்கு சுர்ரென கோபம் வந்துவிட்டது.

“என்னடா ஓவரா பேசிக்கிட்டே போகுற? ஆமா, நான் என் ரிதுவைத்தான் காதலிக்கிறேன்..காதலிப்பேன்.. நீ எனக்கு வாழ்க்கை தந்து தியாகியாக வேண்டாம்..அதே நேரம் என் அப்பா அம்மாவோடு சேர்ந்து ஜால்ரா அடிக்கவும் வேண்டாம். நான் கல்யாணம், பண்ணிக்கிறேனோ இல்லையோ அது என் இஷ்டம்.. அதை இனி நீங்க யாரும் கேள்வி கேட்க கூடாது!” என்று அவள் கத்தவும், மேஜை மீது இருந்த செல்ஃபோனை எடுத்துக் கொண்டான் ஆகாஷ், அவனுக்குத் தேவையான ஆதாரம் கிடைத்துவிட்டது. அவள் அறியாதவண்ணம் வெற்றி புன்னகை ஒன்றை சிந்தியவன், மௌனமாய் அங்கிருந்து கிளம்பினான். மறுநாள் தனக்கென காத்திருக்கும் அதிர்ச்சிகளைப் பற்றி அறியாதவளாய் ஐஸ் க்ரீம் சாப்பிடுவதை தொடர்ந்தாள் ஆதர்ஷினி.

“ரிது.. ரிது.. ரிது..!” அவனை மறக்கத்தான் நினைக்கிறாள் அவள். ஆனால் நினைப்பதோடு சரி! அந்த நினைவிலும் அவனே நிறைந்திருக்கும்போது வேறென்ன செய்வதாம்?

எதை செய்தாலும், அவன் நினைவு, எதை ரசித்தாலும் அதில் அவனது ரசனையும் அடங்கியிருந்தது. அதற்காகவே அவனுக்கு பிடிக்காதவைகளை தேர்ந்தெடுத்து செய்தாள்.

அவனுக்கு தான் விசில் அடித்தால் பிடிக்காது ! ஐஸ் க்ரீம் அதிகம் சாப்பிட்டு காய்ச்சல் வரவழைத்துக் கொண்டால் பிடிக்காது! ஜீன்ஸ் அணிந்து கொண்டால் பிடிக்காது! பிடிவாதம் பிடித்தால் பிடிக்காது! இப்படி அவன் வெறுப்பவைகளை விரும்ப ஆரம்பித்தாள் ஆதர்ஷினி. ஆனால் அதிலும் வென்றவன் சரித்திரன் தான்.

“இது என் ரிதுவுக்கு பிடிக்காது! அதனால் செய்கிறேன்” என்று தன் மனதிற்கு “என் ரிது..என் ரிதுவென” அனுதினமும் தூபம் போட்டு வைத்தாள் அவள். “ எங்க இருக்க ரிது? உன் காதலி, உன்னுடைய காதலை ஏற்றுக்கொண்டிருப்பாளே! எத்தனை குழந்தைகள்? எங்க வேணும்னாலும் இருந்துக்கோ! ஆனா என் கண்முன்னே வந்து நிற்காதே!” என்று வாய்விட்டே கூறினாள் அவள். ஒரு பக்கம் அவன் வா வென்கிறான், மறுபக்கம் இவள் போவென்கிறாள். இவர்களின் கண்ணாமூச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணியது விதி.

றுநாள், தனது கண்காணிப்பு அறையில் இருந்தான் சரித்திரன். பங்கீ ஜம்பிங் நடக்கும் இடங்களில் அங்கங்கு கேமராக்கள் வைத்திருந்தனர். அதில் எல்லா இடங்களும் பாதுகாப்பாக இருக்கிறதா? என்று அவன் சோதனை செய்துவிட்டு, காற்றழுத்தத்தின் நிலையை அவன் பரிசோதிக்க எத்தனிக்கையில் அவனுக்கு அவசர செய்தி ஒன்று வந்தது. 120 அடியிலிருந்து குதிப்பதற்கு ஆயுத்தபணி நடக்க அங்கு சரித்திரனின் உதவி தேவைப்பட்டது. தன் நாட்டிலிருந்து யாரோ வந்திருப்பதாக செய்தி கிடைக்கவும், அவளாக இருக்குமோ என்ற ஆவல் வழக்கம் போலவே அவனுக்குள் எழுந்தது. ஆனால் மறுநொடியே, “ அவ ஏன் இங்க வரப்போறா?அவளே பயந்தாங்கொள்ளி” என்று சொல்லிக் கொண்டவன் வழக்கம்போலவே கருப்பு கண்ணாடியின் மூலம் தனது கள்ளப் பார்வையை மறைத்துக் கொண்டு அங்கு வந்தான்.

இடைவரை வளர்ந்திருந்த கூந்தல், ஆதர்ஷினியின் முகத்தை மறைக்க, அவளோ ஆர்வமாய் இடையில் பெல்ட்டை மாட்டிக் கொண்டிருந்தாள். பலமுறை பஞ்கீ ஜம்பிங் போயிருப்பதால் அவளுக்கு இதெல்லாம் அத்துப்படி! காற்றைக் கிழித்துக்கொண்டு அவள் உடல் காற்றில் மிதக்கும்போதெல்லாம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.