(Reading time: 26 - 51 minutes)

ன்னடா சொல்லுற?” என்று ஆதர்ஷினி கத்திட, அவள் சொல்வது அவனுக்கு கேட்கவில்லை! அடைமழையின் சத்தத்தில் செவிகள் நிறைந்திட மழைத்துளிகளும் இருவரின் விழிப்பார்வையை மறைத்திட, மீண்டும் ஒரு பிரிவா? என்று இருவரின் மனங்களும் வெகுண்டெழ பேச்சை நிறுத்திவிட்டு செயலில் இறங்கினர். தன்னெதிரில் நின்றவளை இறுக அணைத்துக் கொண்டான் சரித்திரன். மழையில் மொத்தமாய் நனைந்திருந்தவள் இப்போது அவனது முத்தமழையிலும் நனைந்தாள். இந்த முறையும் அவன் “ஐ லவ் யூ” என்று சொல்லவில்லை! ஆனால் அவனது வாய்மொழிக்கு ஈடாக செயல்மொழிகள் பேசிட, காதலி என்ற சாபத்தை விரும்பியே பெற்றுக் கொண்டாள் ஆதர்ஷினி.

ரண்டு நாட்களுக்குப் பின்!

“ரிஷி ரெடியா?”. தனது கைகளை பிடித்திருந்தவளை பார்த்துக் கேட்டான் சரித்திரன். 200 அடி தூரத்தில் இருந்து விழுவதற்கு ஆதர்ஷினியும் தயாராய் அவனருகில் நின்று கொண்டிருந்தாள். அவனைப் பார்த்து கெகெபிகெ என்று சிரிக்க ஆரம்பித்தாள் அவள்.

“ என்னடீ சிரிக்கிற?”

“ஒரு விஷயம் நினைச்சு பார்த்தேன் சிரிப்பு வந்துருச்சு !”என்று பீடிகை போட்டவளை கேள்வியுடன் அவன் பார்க்க, அவளே பதில் கூறினாள்.

“அதாவது மை டியர் ரிது மாம்ஸ், அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீ என் முன்னாடி மண்டி போட்டு உட்கார்ந்தியே! அப்போவே ஐ லவ் யூன்னு ஒரே செகன்ட்ல சொல்லியிருந்தால் லைஃப்ல அஞ்சு வருஷம் வேஸ்ட் ஆகிருக்காதுல ? “

“..”

“எனக்கு நீ எப்பவுமே கேடிதான் .. காமிடியன்தான் .. லூசுதான்.. நண்பன்தான்.. என்னவன் தான் ! அப்பறம் எதுக்கு நீ திடீர் ஹீரோ கெட் அப் போடணும்னு நினைச்ச? டக்குனு என்னைப் பார்த்து , ரிஷி நமக்கு நாளைக்கு கல்யாணம் அப்படின்னு நீ சொல்லியிருந்தாலே நான் சரின்னு தலை ஆட்டியிருப்பேன். அதை விட்டுட்டு இப்படி பெரிய பல்ப் வாங்கிட்டோம் பார்த்தியா?” என்று சிரிக்கும் விழிகளுடன் அவள் கேட்க, அவனுக்குமே அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. அவள் சொன்னதற்கு பதில் சொல்லாமல், மீண்டும்

“ரெடியா?” என்று சரித்திரன் கேட்க,

“லெட்ஸ் ஃபால் இன் லவ் ஃபோரெவர் (LET’S FALL IN LOVE FOREVER).. 3.2..1” என்றபடி அவனுடன் குதித்தாள் ஆதர்ஷினி. காதலில் வீழ்வதும் வெற்றித்தான் என்ற மனநிறைவில் இருவரும் காற்றில் மிதக்க, நாமும் விடைபெருவோமே!

ஹாய் ப்ரண்ட்ஸ்! சரித்திரன்- ஆதர்ஷினி மாதிரி, மனசுல தோணுறதை சுற்றி வளைச்சி சொல்லி காலத்தை கடத்தாமல் மனதினுள் எழும் நேசத்தை மறைக்காமல் சொல்லிடுங்க. நட்பின்மூலம் ஆரம்பிக்கும் எல்லா உறவுகளும் புனிதமானது என்றால் காதலும் சில நேரங்களில் நட்பின்மூலம் மலர்வது தவறில்லையே! பரபரப்பான உலகத்தில் உண்மையான காதலுக்கு அதிக நேரம் செலுத்துவது தப்பில்லை.. காதலியுங்கள் உறுதியாக இறுதிவரை!

பின்குறிப்பு : கருத்து ஏதும் சொல்ல வேணாம்னு நினைச்சேன்..ஆனால் பழக்க தோஷம்.. ஹா ஹா பாய் ! நன்றி :) 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.