(Reading time: 21 - 42 minutes)

I'd like to see you, thought I'd let you know

I wanna be with you everyday, hey

'Cause I've got a feeling that's beginning to grow

And there's only one thing I can say, yeah

I'm ready, to love you

I'm ready, to hold you

Don't you know

I'm ready to love you

I'm ready, I'm ready

As ready as I'm gonna be, oh yeah

She left me a long note when she left me here

She told me that love was hard to find, yeah

But baby it's easy and I'll make it clear, oh yeah

That there's only one thing on my mind, oh yeah

Yeah I'm ready to love you

Oh yeah I'm ready to hold you

Don't you know, I'm ready

To love you, yeah

I'm ready to hold you

Yeah don't you know

I'm ready, to love you, come now on

I'm ready, to hold you, yeah

I'm ready, to love you, sweet thing

I'm ready, to hold you, oh yeah

I'm ready, to love you

I'm ready, to hold you

ஒவ்வொரு வரியையும் உணர்ந்து பாடியவனின் வசீகரிக்கும் குரலில் கரைந்து போயிருந்தாள் மைத்ரீ.  கொஞ்சம் பழைய பாடலானாலும் அவளுக்கு மிகவும் பிடித்த பாடல்.  அதை இவ்வளவு அழகாக அவன் பாடி முடிக்கவும்

“மார்வலஸ்! ரொம்ப அருமையா பாடுறீங்க.  எனக்கு பிடிச்ச பாட்டை அதோட ஃபீல் குறையாம அப்படியே பாடி அசத்திட்டீங்க” என்று அவனிடம் சொல்லிவிட்டு, “இந்த கட்டை அவிழ்த்து விடுங்கடி! எனக்கு அவரை பார்க்கனும்” அங்கில்லாத தோழிகளை இருப்பதாக எண்ணி பேசினாள்.

தன் பாடலை அவள் புகழ்ந்ததில் மகிழ்ந்தவனாக, “உனக்காகதா, ஆறு மாசமா கத்துக்கிட்டது.  நீ அதை நல்லாயிருக்குனு சொன்னது, ரொம்ப சந்தோஷமா இருக்கு”

நடப்பவையனைத்தையும் தன் தோழிகளின் ஏற்பாடு என்று நினைத்திருந்தவளுக்கு அவனுடைய பேச்சு அதிர்ச்சியாக இருந்தது. 

“ஹே.. நீ யாரு? என்ன சொல்ற?” பதட்டத்தோடு தலையை அங்குமிங்குமாக திருப்பியவள் “சாரா... ரோஷினி... எங்கடி இருக்கீங்க? இவன் என்னென்னவோ பேசிக்கிட்டிருக்கான்”

“உன்னோட ஃப்ரெண்ட்ஸுக்கு நீ பேசுறது கேட்காது மையூ! இங்க நம்ம ரெண்டு பேரையும் தவிர வேற யாருமில்லை.  முதல்ல பதட்டபடாம, இவ்வளவு நேரம் இருந்த மாதிரி சமத்தா இரு.. நான் ஒன்னும் பிசாசோ பூதமோ இல்ல... உன்னை கடிச்சு சாப்பிட்டிருவேன்னு நீ பயப்படவே வேணாம்”

பதட்டத்தை குறைத்து அவளை இயல்பாக்க வேண்டி இவன் பேச...

பதட்டத்தில் அவன் சொன்னவை புரிய, அவளுக்கு சிறிது நேரம் தேவைபட்டது. 

‘என்னது?! தனியா இவனும் நானும் மட்டுமா?’

புரிந்த நொடி காலையிலிருந்து மனதிலிருந்த நெருடலோடு இதை ஒப்பிட்டு பார்த்தவளின் எண்ணத்தில் ஏதேதோ கொடுரூமான கற்பனைகள் தோன்றி மறையவும், பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது.

‘கடவுளே, என்னை காப்பாத்து! இந்த தடிமாடுங்கதா சர்ப்ரைஸ் ரெடி பண்ணியிருக்குங்கனு நினைச்சு இப்படி தனியா வந்து மாட்டிக்கிட்டனே! இந்த லட்சணத்துல அவன் பாட்டு வேற நால்லயிருக்குனு சொல்லி தொலைச்சிட்ட.  யாரு, எப்படி இருப்பானு கூட பார்க்க முடியல.  ஒருவேளை அவனை அடையாளம் கண்டுபிடிக்க கூடாதுனுதா கண்ணை கட்டி வச்சிருக்கானா? இதுக்கப்பறம் அது நடக்காது’

நடுங்கும் கைகள் அவசரமாக, கண்ணை கட்டியிருந்த துணியிடம் செல்ல... அவைகளை சிறை செய்தான்.

“மையூ! ப்ளீஸ்... பயப்படாதடா! நானிருக்கும் போது நீ எதுக்குமே பயப்பட கூடாது.  அதிலும் நீ, என்னை பார்த்து பயப்பட்றது வலிக்குதுடா! எனக்கு வலிக்குது” வலிநிறைந்த குரலில் சொன்னவனின் இரண்டு கைகளிலும் அவளுடைய கைவிரல்களை சேர்த்து பிடித்திருந்தான்.

அவனிடமிருந்து கைகளை விடுவித்து கொள்ள போராடிக் கொண்டிருந்தவளின் செயலை நிறுத்தியது அவனுடைய வருந்திய குரல்.

ஆனாலும் மனதிலிருந்த பயம் மட்டும் குறைந்திருக்கவில்லை.  நடுங்கும் கைகளில் அதை உணர்ந்து கொண்டவன், நிலையை புரிந்து அவளுடைய கைகளை வருடியபடி அமைதி காத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.