(Reading time: 25 - 49 minutes)

திடீரென, “தமிழ்.. புகழ் போறான்.. புகழ் போறான்..காரை நிறுத்துங்க”என்றாள் யாழினி. அந்த இரவின் இருளில் இவள் கண்ணுக்குமட்டும் எங்கு அவன் தெரிகிறான்? என்று சந்தேகமாக் காரின் வேகத்தை குறைத்தான் தமிழ்.

யாழினியோ, “என்ன தமிழ்..அவன் போறான் பாருங்க”என்று கார்கதவை திறக்க, தமிழ் காரை உடனே நிறுத்தி “ ஏய்”என்று உரும அதை கேட்கும் முன் யாழினி எதிர்திசையில் தெரிந்த சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

புகழின் சாயலில் இருந்தாலும்,அது புகழ் இல்லை என்று தமிழுக்கு தெரிந்தது. “அது புகழ் இல்லை யாழினி”என்று அவன் கத்தும் சத்தம் சாலையில் பயணித்துகொண்டிருந்த வாகன்ங்களின் ஒலியில் கரைந்திட,

“புகழ்” என்று கத்திக்கொண்டே ஓடிய யாழினி இமைக்கும் நொடியில் ஒரு பேருந்து மோதி எறியப்பட்டிருந்தாள். இது அணைத்துமே இமைக்கும் நொடியில் தமிழின் கண்ணெதிரில் நடந்து முடிந்தது.

டந்ததை தமிழ் முடிந்த அளவிற்கு உணர்ச்சிவசப்படாமல் சொல்லிட, புகழின் விழிகளில் கண்ணீர் அரும்பியது.

“அவளுக்கு கெட்ட பேரு வரகூடாதுனு போனேன் தமிழ்.. அவளை இப்படி ஆட்டிபடைக்கனும்னுநினைச்சதே இல்லை.. என் யாழீ என்னால … இப்படி எல்லாம்??”

“ஷ்ஷ்ஷ்… நடந்து முடிஞ்சிருச்சு புகழ். கண்ட்ரோல் யுவர்செல்ஃப். நம்ம யாழினி நல்லா இருக்கா இப்போ.. நம்ம கூடத்தான் இருக்கா..”

“அவளுக்கு பெருசா ஒன்னும் இல்லைல?ஏதாச்சும் மெடிக்கல் ப்ராப்லம் இருக்கா?”

“ யாழினிக்கு தலையிட பயங்கர அடி.. மூணு மாசம் கண் விழிக்கவே இல்லை.. எப்படித்தான் நான் உயிரோட இருந்தேன்னு தெரியல. இதுக்கு இடையில அப்பா ரொம்ப சண்டை போட ஆரம்பிச்சப்போதான் ரெஜிஸ்டர் மேரேஜ் சர்டிவிகேட் என் கைக்கு வந்துச்சு. நீ, நான், மாமா எல்லாரும் சேர்ந்து அவங்களை ஏமாத்திட்டோம் அது இதுன்னு சண்டை வந்துச்சு. யாழினிக்கு மருமகனு உரிமை கிடைக்கிற வரைக்கும், மகனா அங்க இருக்க கூடாதுனு முடிவு பண்ணி வந்துட்டேன்..”

“யாழினி கோமாவுல இருந்தப்போ நான் உணர்ந்த ஒரு உண்மை என்ன தெரியுமா? அவ லைஃப்ல புகழ் இருந்த இடம் வெற்றிடமா இருக்கு. என்னை அதிகமா காதலிக்கிறனாலயோ  என்னவோ உன்கிட்ட பழகுன மாதிரி அவளால என்னோடு இருக்க முடியல. தமிழ் தமிழ்தான்!புகழ் புகழ்தான்னு புரிஞ்சிச்சு. உன்னை தேட முயற்சி பண்ணிட்டே புகழாகவும் இருக்க ட்ரை பண்ணேன்..”

“..”

“ எப்படி இருந்த தமிழ் இப்படி ஆயிட்டேன்னு லுக்கு விட்டியே அதுக்கு காரணமே நீதான். யாழினி கண் முழிக்கிறப்போ நான் எப்படி இருக்கனும்னு ஓரளவு தயாராத்தான் இருந்தேன்.. உன்னை மாதிரியே அவளை வம்பிழுக்குறது. பேசிட்டே இருக்குறது, நான் அவ லவ்வர் இல்ல ப்ரண்டுனு அவ ஏத்துக்கிட்டே ஆகனும்னு டாச்சர் பண்ணினேன்.. கொஞ்சம் கொஞ்சமா சரியாகினா. உன்னையும் கண்டுபுடிச்சிட்டேன்..”

“எவ்வளவு பெரிய விஷயத்தை இப்படி ஈசியா சொல்லுறீங்க தமிழ்? நானா அவனானு கேட்டு யாழினியை கஷ்டப்படுத்தாம என்னையும் வெறுக்காம”

“நாமல்லாம் ஒரே ஃபேமிலி புகழ். இதெல்லாம் சகஜம்தான். இதபத்தி அதிகமா யோசிச்சு கஷ்டப்படாதே.. நாளைக்கு நீ என் வீட்டுக்கு போகனும் ரெடியா இரு!”

“என்னது?”

“ ஆமா.. நான் உன்ன மாதிரி இருந்தேன்ல? கொஞ்ச நாள் நீ என்னை மாதிரி என் வீட்டுல இரு. அப்பா கூடவே இருந்தாலும், அம்மா ஒரு மாதிரி தனிமையாவே இருக்காங்க. நீ இருந்தா அவங்களுக்கு மனசு நிம்மதியா இருக்கும். நீயும் இங்க இருக்கும்போது மாமவையும் யாழினியையும் குற்ற உணர்ச்சியோடயே பாத்துட்டு இருப்ப.அதெல்லாம் வேணாம். எங்க வீட்டுல தொலைஞ்சு போன சந்தோஷத்தை கொண்டு வா. அது மட்டும் இல்ல, யாழினி அந்த வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி யாழினி சம்பந்தபட்ட ஒருத்தர் போறது எனக்கு தனிப்பட்ட சந்தோஷம். சோ நீ அதிக…”என்று தமிழ் பேசி முடிக்கும் முன்னரே

“டன்.. நாளைக்கே போகலாம்” என்றான் புகழ். முகத்தில் தேஜசுடன். அதன் காரணம் கொஞ்சமாக தனக்கு புரிவது போல உணர்ந்தான் தமிழ்.

றுநாள், மூன்று ஆண்டுகளுக்கு பின் தமிழின் கார் அந்த வீட்டினுள் நுழைந்தது. வாசலிலேயே காத்திருந்தார் மனோன்மணி. தமிழைக் கண்ட்துமே ஓடி வந்து அவனை அணைத்து உச்சியில் முத்தமிட்டார்.

“உள்ளே வா கண்ணா”

“யாழினியோட வரேன்மா”

“எப்படிப்பா இருக்கா என் மருமக?”

“அவளுக்கென்ன மஹாராணி. நல்லா மிரட்டுறா”என்று சிரித்தான் தமிழ். அவன் அருகில் நின்று கொண்டிருந்த புகழை பாசத்துடன் பார்த்தார் மனோன்மணி.

“அம்மா.. இனி இந்த வீட்டுல தமிழுக்கும் புகழுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இருக்க கூடாது..” என்று தமிழ் சொல்லவும் “ஒரே ஒரு வித்தியாசம் இருக்கு”என்றான் புகழ்.

“என்ன?”என்பது போல இருவருமே பார்க்க,

“உனக்கு இவங்க அம்மா..எனக்கு இவங்க அத்தை.. அம்மா மாதிரியே அத்தை என்கிற உறவும் ரொம்ப ஸ்பெஷல் தெரியும்ல?”என்றான் அவன்.

இருவருமே முகம் மலர்ந்து சிரித்தனர்.

“போதும் அத்தை மடி மெத்தயடினு பாடாதே” – தமிழ்.

“பொறாமை படாதிங்க தமிழ். இனி எனக்கு அத்தைமடி தான் மெத்தை”என்று புகழ் கண்ணடிக்க, தமிழின் மனம் நிறைந்தே போனது.

“போதும் புகழ்.. இனி எல்லாமே தானாகவே நடக்கும்..ஆல் தி பெஸ்ட் டா”என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான் தமிழ். தன் அன்னையிடம் பேசிவிட்டு தமிழின் கார் அந்த வீட்டை விட்டு வெளியேறிய வேளையில், ஜாகிங் சென்றிருந்த சுதாகரன் வீட்டு வளாகத்தினுள் நுழைந்தார். புகழ் என்ன பண்ண போறார்?

தொடரும்

Episode # 23

Episode # 25

{kunena_discuss:994}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.