(Reading time: 39 - 78 minutes)

ங்களுக்கு வேணா, என்னை எதைச்சையா சந்திச்ச தோழியா தெரியலாம்.. ஆனா எனக்கு நீங்க செல்வாவின் மனைவின்னும், முதன்முதலில் துஷ்யந்துக்கும் உங்களுக்கும் தான் கல்யாண ஏற்பாடு நடந்ததுன்னும் தெரியும்.. இவ்வளவு தூரம் என்னை தேடி வந்திருக்கீங்கன்னா, அது துஷ்யந்த் பத்திப் பேசறதுக்காக தான் இருக்கும்.. நீங்க என்கிட்ட என்ன கேக்க வந்தீங்க..?? வெளிப்படையாகவே கேளுங்க? நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்..”

“இந்த நீங்க, வாங்க, போங்க எல்லாம் வேண்டாமே, எப்படியோ நான் உங்களை விட ஒன்னு ரெண்டு வயசு சின்னவளா தான் இருப்பேன்..”

“சரி சொல்லு நர்மதா.. என்ன பேசனும் என்கிட்ட?”

“உங்களைப் பத்தி என்கிட்ட என்ன சொல்லியிருப்பாங்கன்னு உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்.. நான் அவங்க சொன்னதெல்லாம் சொல்ல போறதில்ல.. நீங்க ஏன் துஷ்யந்தை விட்டு கொடுக்க நினைக்கிறீங்க?? ஏன் அவரை விட்டு விலகனும்னு யோசிக்கிறீங்க..?? உங்களையும் அவரையும் சேர்த்து வச்சு தப்பா பேச ஏன் அனுமதிக்கிறீங்க?? நீங்க நினைச்சா இந்த தவறான பேச்சுக்கள் வராம பார்த்துக்கலாம்..  நீங்களும் அவரும் முறைப்படி கல்யாணம் செஞ்சுக்கலாமே??”

கோமதியும் விஜியும் பேசியதற்கு, நர்மதா மாற்றி பேசியது கங்காவின் மனதிற்கு கொஞ்சம் இதமாக இருந்தது.. முதலில் ஒரு புன்னகையை பதிலாக்கியவள்,

“இதைப்பத்தி நான் நிறையவே பேசியாச்சு நர்மதா.. என்னால துஷ்யந்தை கல்யாணம் செஞ்சுக்க முடியாது.. அதை அவர்க்கிட்டேயே நான் நேரடியா சொல்லியாச்சு.. இனி துஷ்யந்த் தான் அதை புரிஞ்சிக்கிட்டு நல்ல முடிவா எடுக்கனும்.. இந்த குடும்பத்துல எது நடந்தாலும் எனக்கென்னன்னு போகாம, அந்த குடும்பத்து மருமகளா அவங்க மேல அக்கறையா இருக்கறத பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு நர்மதா.. முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் துஷ்யந்த் மனசை மாத்தி, அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய உன்னால ஆனா முயற்சி செஞ்சா நான் இன்னும் ரொம்ப சந்தோஷப்படுவேன்..”

“இருந்தாலும் கங்கா.. நீங்க நல்லா யோசிச்சு..” என்று சொல்ல வந்ததை சொல்லி முடிப்பதற்குள்,

“ப்ளீஸ் நர்மதா.. இதுக்கும் மேல இதைப்பத்தி நாம பேசினா, நான் உன்மேல கோபப்பட்றுவேன், அதனால இதோட இதை விட்டுடலாமே!!”

“ வீட்ல மத்தவங்க மாதிரியே வந்து நானும் உங்களை கஷ்டப்படுத்திட்டேன்.. ஐ அம் ரியலி சாரி கங்கா.. நம்ம இரண்டாவது சந்திப்பு இப்படி இருக்கும்னு நான் எதிர்பார்க்கல..”

“பரவாயில்ல நர்மதா.. இதை நான் பெருசா எடுத்துக்கல.. “

“அப்போ நான் வரேன்.. உங்க ரெண்டுப்பேரையும் பார்த்ததுல சந்தோஷம்..” என்றவள், அவர்களிடம் விடைப்பெற்று சென்றாள்.

அவள் சென்றதும், “கங்கா.. நர்மதா சொன்னதுக்காவது, நீ யோசிக்கக் கூடாதா? அந்த பொண்ணு இவ்வளவு தூரம் வந்து பேசியிருக்குன்னா.. கோமதி அம்மாக்கு தெரியாமலா வந்திருக்கும்..”

“நீங்க எவ்வளவு சொன்னாலும், இதுதான் என் முடிவு.. ப்ளீஸ் வாணிம்மா புரிஞ்சுக்கோங்க..” என்று சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.. கங்காவை நினைத்து வாணியால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.

ன்ன  சொல்ற நர்மதா? உண்மையை தான் சொல்றியா?” ஆரம்பத்துல துஷ்யந்துக்கு கல்யாணத்துல விருப்பம் இருக்காதுன்னு சந்தேகம் இருந்துச்சு.. ஆனா அவரை நேர்ல பார்த்தப்போ என்னால தப்பு கண்டுபிடிக்க முடியல.. அப்புறம் அவரே இந்த கல்யாணம் வேண்டாம்னு நிறுத்தினாரு.. நான் கூட ஏதாச்சும் காதல் தோல்வி இருக்கும்னு தான் நினைச்சேன்.. இப்படி இருக்கும்னு நான் எதிர்பார்க்கல..” ஒரு மாலில் உள்ள உணவகத்தில் உட்கார்ந்தப்படி யமுனா நர்மதாவை கேட்டுக் கொண்டிருந்தாள்..

கங்காவை சந்தித்துவிட்டு வந்ததிலிருந்து, நர்மதா குற்ற உணர்வில் தவித்தாள். என்னத்தான் கங்கா நல்லப்படியாக அவளிடம் பேசியிருந்தாலும், இவளது வருகையை குறித்து அவள் என்ன மாதிரி சிந்தித்திருப்பாள் என்று நினைத்து தனக்குள்ளேயே வருத்தப்பட்டாள். அதை பகிர்ந்துக் கொள்ளவே யமுனாவை அழைத்தாள்.. அவளிடம் மேலோட்டமாக விஷயத்தை கூறியிருந்தாள்.. அதை நம்ப முடியாமல் தான் யமுனா அப்படி கேட்டாள்.

“ஆமாம் யமுனா.. உன்னை மாதிரி தான் நானும் நினைச்சிக்கிட்டு இருந்தேன் இத்தனை நாளா.. ஆனா அத்தை சொன்னப்பிறகு தான், துஷ்யந்த் மாமா ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொன்னாருன்னு எனக்கு புரிஞ்சுது..”

“என்ன இருந்தாலும் அந்த பொண்ணை பார்க்க நீ போயிருக்க கூடாது நர்மதா.. அந்த பொண்ணு தப்பானவளாகவே இருந்தாலும், துஷ்யந்த் ஒன்னும் சின்ன குழந்தையில்ல.. ஏற்கனவே ஒரு பொண்ணால ஏமாற்றம் அடைஞ்சவர்னு நீ தானே சொன்ன, அப்படி இருக்க இன்னொரு பொண்ணுக்கிட்டேயும் ஏமாறுவாரா? அதுவும் இப்போ ரொம்ப பெரிய பிஸ்னஸ் மேன் அவர்.. சிக்கலான விஷயங்களை கூட அழகா கையாண்டிருப்பாரு பிஸ்னஸ்ல.. அவர் ஒரு பொண்ணுக்கிட்ட ஏமாந்திருப்பாரா? அது அவங்க தனிப்பட்ட வாழ்க்கை.. ஒருவேளை இது தப்புன்னா, அதை முதலில் துஷ்யந்த் கிட்ட தான் கேட்ருக்கனும், அதை விட்டுட்டு உன்னோட அத்தையும், விஜிம்மாவும் அந்த பொண்ணுக்கிட்ட பேசினது தப்பு..”

“எனக்கும் அதை நினைச்சு தான் வருத்தமா இருக்கு யமுனா.. ஆமாம் தன்னோட பிள்ளையை விட்டுட்டு அவங்கக்கிட்ட போய் ஒதுங்கி போன்னு ரெண்டுப்பேரும் சொன்னது தப்பு தான்.. ஆனா அது எப்பவோ நடந்து முடிஞ்ச போன விஷயம், நான் இப்போ ஏன் அவங்களை போய் பார்த்தேன்னா, ஒருவேளை துஷ்யந்த் மாமாவை அவங்க கல்யாணம் செஞ்சுக்கறத பத்தி பேசினா, துஷ்யந்த் வீட்ல இருந்து வந்து ஒருத்தர் கல்யாணம் பத்தி பேசறாங்களேன்னு அதை நினைச்சு அதுக்கேத்த மாதிரி யோசிப்பாங்கன்னு நினைச்சேன்.. இருந்தாலும் ஒருவேளை அவங்க தப்பானவங்களா இருப்பாங்களோன்னு கூட அங்க போறதுக்கு முன்னாடி எனக்கு தோனுச்சு.. ஆனா அங்க போனதுக்கு பிறகு அவங்களை எனக்கு தப்பாவே நினைக்க தோனல.. அவங்களும் என்கிட்ட நல்ல மாதிரி தான் பேசினாங்க.. ஆனா துஷ்யந்தை கல்யாணம் செஞ்சுக்கற விஷயமா அவங்க நான் நினைச்சதுக்கு சாதகமா எதுவும் சொல்லல.. இருந்தும் அவங்க என்னைப்பத்தி எப்படி நினைச்சிருப்பாங்கன்னு எனக்கு தெரியல, யாரோவா இருந்தா நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன்.. ஆனா அவங்க எனக்கு தெரிஞ்சவங்களா போயிட்டாங்க.. அதான் ஒருமாதிரி கில்ட்டியா இருக்கு..”

“தெரிஞ்சவங்களா? அது யார் நர்மதா?”

“உனக்கு தெரியாது யமுனா.. உனக்கு ஞாபகம் இருக்குமான்னு தெரியல.. நாம என்னோட கல்யாண சாரி எடுக்க போனோமே.. அப்போ என்கூட ஆட்டோல ஒருத்தங்க ஷேர் செஞ்சுக்கிட்டு வந்தாங்க.. அவங்க தான் அது.. பேர் கங்கா, டெய்லரிங் இன்ஸ்டிட்யூட் வச்சிருக்காங்க..” என்று நர்மதா சொல்ல அதைக் கேட்டு யமுனா அதிர்ந்தாள்.

அவளுக்கா தெரியாது, அன்றே நர்மதோவோடு பயணித்தது, தன் சகோதரி தான் என்று யமுனா தெரிந்துக் கொண்டாளே!! இப்போது நர்மதா இத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்தது தன் சகோதரி பற்றி தான், என்பது தெரிந்தபோது யமுனா எப்படி உணர்ந்தாள், என்பதை அவளாலேயே அறிய முடியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.