(Reading time: 39 - 78 minutes)

ங்காவை பார்த்ததும் யமுனா சென்று அவளை கட்டிக் கொண்டாள்.. “சாரிக்கா, நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. உன்மேல இருந்த கோபத்துல உன்னை விலக்கி வச்சேன்.. ஆனா இப்போ உன்மேல எனக்கு துளி கூட கோபமில்லக்கா.. நான் உனக்கு பாரமா இருக்கக் கூடாதுன்னு தான் அப்படி நடந்துக்கிட்டேன்..”

“ஹே லூசு.. நீ எனக்கு பாரமா? எனக்கு இந்த உலகத்துல உறவுன்னு இருக்கறது நீ மட்டும் தான்.. உனக்காக தான் நான் வாழனும்னே நினைக்கிறேன்.. உன்னை நான் பாரம்னு நினைப்பேனா?”

“நீ நினைக்க மாட்ட, இருந்தும் எனக்கே அப்படி தோனுச்சு.. ஆனா உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணேன்க்கா.. உன்கிட்ட பேசாம இருந்தது நரக வேதனையா இருந்துச்சு..”

“எனக்கு தெரியும்.. என்னோட யமுனாவால என்மேல ரொம்ப நாள் கோபத்தை காட்ட முடியாதுன்னு.. இருந்தும் நீ சமாதானமாகனுமேன்னு நான் கவலையா இருந்தேன்.. இனி எனக்கு கவலையில்ல.. ரொம்ப சந்தோஷமா இருக்கு..” என்று தங்கையை திரும்ப கட்டிக் கொண்டாள்.

“அக்கா.. என்னையும் நீங்க மன்னிக்கனும்.. அத்தை சொன்னத வச்சு உங்களை தப்பாகவும் நான் நினைச்சேன்.. உங்கக்கிட்ட வந்து பேசறேன்னு நான் உங்களை கஷ்டப்படுத்திட்டேன்” என்று நர்மதாவும் கங்காவிடம் மன்னிப்பு கேட்டாள்.

“அய்யோ மன்னிக்கிற அளவுக்கு நீ எந்த தப்பும் செய்யல நர்மதா” என்று கங்கா அவளை சமாதானப்படுத்தினாள்.

துஷ்யந்த் கோவிலுக்குள் வரும்போது, கங்கா கண்களை மூடி,  மனமுருகி கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள்.. துஷ்யந்த் கொஞ்சம் தள்ளி நின்று அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

யமுனா கங்காவிடம் பேசிவிட்டாள் என்பதை வாணி மூலமாக அறிந்தவன், கங்காவை பார்க்க வீட்டிற்குச் சென்றான். ஆனால் கங்கா கோவிலுக்கு சென்றிருப்பதாக வாணி கூறியதும், அவளை தேடி அவன் கோவிலுக்கு வந்தான்..

கண்களை மூடியிருந்த கங்கா, அய்யர் வந்து குங்கும பிரசாதம் தரவும் கண்களை திறந்தாள்.. அவளுக்கு நேராக துஷ்யந்த் நின்றிருந்தான். பிரசாதத்தை வாங்கிக் கொண்டவள், அவன் அருகில் வந்தாள்.. இன்று இருந்த மகிழ்ச்சியான மனநிலையில், அன்று துஷ்யந்தோடு பேசியதை அவள் மறந்து போனாள்.. யமுனா பற்றி தெரிந்து தான் அவன் தன்னை காண வந்திருக்கிறான் என்பதை அறிந்தவள், அவனை பார்த்து புன்னகைத்தாள். கையிலிருந்த குங்குமத்தை அவன் இட்டுக் கொள்ள அவனிடம் கை நீட்டினாள்.. அதை எடுத்து அவனும் இட்டுக் கொண்டான்.

“வாணிம்மா எல்லாம் சொன்னாங்க.. யமுனா உன்னோட பேசிட்டான்னு கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேன்.. அவ உன்னை விட்டு விலகியிருந்தது உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும்.. இப்போ தான் உன் முகத்தில் சந்தோஷத்தை பார்க்கிறேன்..”

“ஆமாம்.. கஷ்டமா தான் இருந்துச்சு.. இருந்தும் அவ என்னை விட்டு விலகியே இருக்கட்டும்னு தான் நானும் அமைதியா இருந்தேன்..” இருவரும் யமுனா பற்றி பேசிக் கொண்டிருந்த போது, “துஷ்யந்த்” என்று யாரோ அவனை அழைத்தார்கள்.

குரல் வந்த திசையை திரும்பி பார்த்தவன் அதிர்ந்தான்.. கங்காவும் அங்கே திரும்பி பார்த்தாள்.. கொஞ்சம் தொலைவில் இருந்து  ஒரு பெண் இவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள்.. “யாரவள்?” என்று கங்கா யோசிக்க,

“சாரு..” என்றப்படி துஷ்யந்த் கங்காவின் கையைப் பற்றிக் கொண்டான்.. அந்த பெயரை காதில் கேட்டதும், கங்காவும் தன்னை மறந்து துஷ்யந்த் விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டாள்.

நீ என்னை எந்த மாதிரி நிலைமையில் விட்டுவிட்டு சென்றாய்.. நான் அழிவுப்பாதையில் செல்ல வேண்டும் என்று நினைத்தாய்.. ஆனால் நான் இப்போது வெற்றிப்பாதையில் பயணிக்கிறேன்.. அதற்கு ஆணிவேராய் இருந்தவள் இவள் தான்.. என்று கங்காவை சாருக்கு காட்டிடவே துஷ்யந்த் கங்காவின் கையை பற்றினான். அதை புரிந்துக் கொண்டதால் தான் கங்காவும் அவன் கைகளை இறுக பிடித்துக் கொண்டாள். உன் அனுமதியில்லாமல் உன்னை தொடமாட்டேன் என்று சத்தியம் செய்தவன், ஏற்கனவே அவள் காய்ச்சலின் தாக்கத்தில் இருந்த போது அவளை தொட்டு, அவளின் தலையை கோதியிருக்கிறான்.. இருந்தும் அன்று அவள் அதை உணர்ந்தாலும், அது கனவென்றே நினைத்தாள். துஷ்யந்த் அன்று வந்தது நிஜமென்று அறிந்தாலும், அவன் தொடுகையை நினைவில் வைத்துக் கொண்டாளா? என்று தெரியவில்லை, இன்று அவள் சுயநினைவில் இருக்கும்போதே அவள் கையைப் பற்றியிருக்கிறான்.. இருந்தும் இப்போது அதை அவள் பெரிதாக கருதவில்லை.

சாரு இவர்களை நோக்கி எதற்கு வருகிறாள் என்ற கேள்விப் பார்வையோடு இருவரும் அவளை பார்த்திருக்க, அவளோ புன்னகையோடு இவர்கள் அருகில் வந்தாள்.

“நான் கூப்பிட்டதும் கோபப்பட்டு போகாம நிக்கறீங்களே, ரொம்ப சந்தோஷமா இருக்கு துஷ்யந்த்..” என்றவள், அருகிலிருந்த கங்காவையும், அவர்கள் இருவரும் கைகோர்த்து இருந்ததையும் பார்த்தவள்,

“உங்க வைஃப் அழகா இருக்காங்க துஷ்யந்த்.. உங்களுக்கு நல்ல ஜோடிப்பொருத்தம்..” என்று பாராட்டினாள். அதை கேட்டு துஷ்யந்த் மறுப்பு சொல்வான் என்று கங்கா எதிர்பார்க்க, அவனோ அமைதியாக நின்றிருந்தான்.

“நான் யாருன்னு இவங்களுக்கு தெரியுமா?” சாரு கேட்டதும், “ம்ம் தெரியும்..” என்று கங்காவே பதிலளித்தாள்.

“துஷ்யந்தை நான் எந்த நிலைமைக்கு தள்ளினேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. இப்போ துஷ்யந்த் எந்த நிலைமைல இருக்கார்னும் தெரியும்.. கண்டிப்பா அதுக்கு முழுக்க முழுக்க நீங்க தான் காரணமா இருப்பீங்க.. உங்க பேரு?”

“கங்கா..”

“நைஸ் நேம்.. உங்க குடும்பத்துல எல்லாரும் அன்பானவங்க துஷ்யந்த்.. அதை நான் பயன்படுத்திக்கிட்டேன்.. வெளிநாட்டுல செட்டில் ஆகனும்ங்கிற ஆசை என்ன என்னென்னவோ செய்ய சொல்லிடுச்சு, மேலும் அம்மா, அப்பாவும் பணத்துக்காக என்னை பயன்படுத்திக்கிட்டாங்க.. ஆனா அதுக்கு பலனை நான் இப்போ அனுபவிக்கிறேன்..” அவள் அப்படி சொல்லும் போதுதான் அவளை துஷ்யந்த் கவனித்தான்.

மிகவும் மெலிந்து போய், கண்ணில் கருவளையம் வந்து, அடர்த்தியாய் இருந்த அவள் முடியெல்லாம் கொட்டி மெலிந்த கூந்தாலாக இருந்தது.

“என்னோட ஹஸ்பண்ட்க்கு அவரோட தேவையை தீர்த்து வைக்கிற ஒரு பொருளா மட்டும் தான் நான் தெரியுறேன்.. அதுக்காக மட்டும் தான் என்னை மனைவியா வச்சிருக்கார்.. ஒரு சம்பளம் இல்லாத வேலைக்காரி நான்.. அவ்வளவு பெரிய நாடு, ஆனா அங்க வீட்டுக்குள்ளேயே அடைஞ்சுக் கிடக்கிறேன், எனக்குன்னு தனிப்பட்ட சுதந்திரம் இல்ல.. அவர் சொல்றதை மட்டும் தான் நான் கேட்கனும்.. இத்தனை வருஷத்துல ஒருமுறை கூட என்னை இங்க அவர் கூட்டிட்டு வந்ததில்ல.. இப்போக்கூட அவரோட தம்பி கல்யாணம், கூடமாட உதவிக்கு நான் தேவைப்பட்றேன், அதான் என்னை இங்க அனுப்பி வச்சிருக்காரு.. இருந்தும் என்னவோ இங்க வந்தது ஒரு பெரிய நிம்மதியா இருக்கு.. அம்மா, அப்பாக்கு என்னோட நிலை புரியல, வெளிநாட்ல இருந்தாலே நான் சந்தோஷமா இருப்பன்னு அவங்க நினைக்கிறாங்க.. ஆனா சந்தோஷம் அதுல மட்டும் கிடைக்காதுன்னு நான் இப்ப தான் புரிஞ்சிக்கிட்டேன்.. ஒரு குடும்பத்தோட நிம்மதியை அழிச்சேன் இல்ல, அதான் எனக்கு இந்த நிலை..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.