(Reading time: 38 - 76 minutes)

ன்னடா செல்வா.. நர்மதா சொன்னது உண்மையா? உனக்கெப்படி கங்கா விஷயம் தெரியும்?”

“ஆமாம்மா உண்மை தான்.. இளங்கோ, யமுனா கல்யாணத்துலயே அண்ணா நடந்துக்கிட்டதை பார்த்து எனக்கு சந்தேகம் வந்துச்சு.. இதுல வீட்டுக்கு வந்தா, நீங்களும் அத்தையும் கங்கா பத்தி பேசிட்டு இருந்தீங்க.. அதை கேட்டதும் தான், எனக்கு கங்கா பத்தி முழுக்க தெரிஞ்சுது..”

“கங்கா பத்தி தெரிஞ்சதும், அதைப்பத்தி என்கிட்ட பேசி இருக்கனும்.. என்ன பண்ணலாம்னு என்கிட்ட கேட்டு இருக்கனும்.. இல்லை நர்மதாக்கிட்டயேவாது யோசனை கேட்ருக்கனும்.. அதைவிட்டுட்டு இப்படி அவசரப்பட்ருக்கக் கூடாது..

3 வருஷம் முன்னாடி நாங்களும் இதேபோல விஷயத்தை தான் செஞ்சோம்.. இதுக்கும் கங்காவை ராஜாவை விட்டு ஒதுங்கி மட்டும் தான் போகச் சொன்னோம்.. ஆனா அதுக்கு உன்னோட அண்ணனோட உயிரை விலையா கொடுக்க இருந்தோம்டா.. இப்போ நீ செஞ்சிருக்க காரியம் ராஜாக்கு மட்டும் தெரிஞ்சுது, அப்புறம் அவன் என்ன ஆவான்னு நினைச்சாலே பயமா இருக்குடா..”

“அண்ணி.. இப்படி பயந்துக்கிட்டு ஒரு முயற்சியும் எடுக்காம இருக்கறது தான் அண்ணி தப்பு.. இப்போ நம்ம செல்வா செஞ்சது சரி தான்.. நம்ம ராஜா கடைசி வரைக்கும் இப்படியே இருந்துட முடியுமா சொல்லுங்க..??”

“ஆனா ராஜாக்கு இந்த விஷயம் தெரிய வந்தா என்ன செய்யறது விஜி..”

“அம்மா இது அண்ணனுக்கு தெரிஞ்சா தானே! இது நமக்குள்ள தான் இருக்கனும். அண்ணனுக்கு சொல்லக் கூடாது.. யார் மூலமாகவும் அண்ணனுக்கு இது தெரியக் கூடாது.. புரிஞ்சுதா?” என்று நர்மதாவை பார்த்தப்படியே கூறினான். அவளோ பதிலுக்கு அவனை முறைக்க, அவளிடமிருந்து பார்வையை விலக்கி தன் அன்னையை பார்த்தவன், அவரருகே சென்று, அவரின் கைகளை ஆதரவாக பற்றியப்படி,

“அம்மா.. கங்கா அவங்களாகவே அண்ணனை விட்டு போனதா தான் இருக்கனும்.. கொஞ்ச நாள் அண்ணனுக்கு கங்காவோட ஞாபகம் இருக்கும்.. அப்புறம் அதை மறந்து வாழ பழகிடுவார்ம்மா.. இதுல நீங்க பயப்பட ஒன்னுமே இல்லை.. 3 வருஷம் முன்ன நீங்க இந்த விஷயத்தை அண்ணனுக்கு தெரிஞ்சு செஞ்சீங்க. ஆனா நான் அண்ணனுக்கு இது தெரியாதப்படி செஞ்சு முடிச்சிருக்கேன்.. கங்கா அண்ணனோட வாழ்க்கையை விட்டு பிரிஞ்சாச்சு.. இனி அவங்க நம்ம அண்ணனோட வாழ்க்கைக்குள்ள வரமாட்டாங்க.. வந்தாலும் நான் விட..” என்று பேசிக் கொண்டே சென்றவன்,  திடிரென்று ஏதோ சத்தம் கேட்டு வாசல் பக்கம் திரும்பி பார்த்து,அதிர்ச்சியில் பேச்சை நிறுத்தினான்.

அதே நேரம் மற்றவர்களும் அந்த சத்தத்தை கேட்டு வாசல் பக்கம் பார்க்க, அங்கே துஷ்யந்த் நின்றிருந்தான். அவன் உள்ளே நுழையும் போது, அவன் வருகையை கூட கவனிக்காமல் மற்றவர்கள் கங்காவைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, புரியாமல் அப்படியே நின்றவன், கடைசியாக செல்வா பேசியதில் அதிர்ந்தான்.. அவன் கையில் இருந்த பெட்டியை கீழே தவறவிட்டிருந்தான்.. அந்த சத்தத்தில் தான் அனைவரும் அவனை திரும்பி பார்த்தனர்.

“கங்காவுக்கு என்ன? என்னாச்சு அவளுக்கு?” என்றப்படி அவர்கள் அருகில் வந்தான். துஷ்யந்திற்கு கூட கோபம் வருமா? அவன் கேள்வியில் கோபத்தின் வெளிப்பாடு நன்றாகவே தெரிந்தது.

“ராஜா..” கோமதிக்கு அதிர்ச்சியில் பேச்சு வர மறுத்தது.. விஜியின் நிலைமை அதைவிட மோசமாக இருந்தது.. செல்வாவோ, தான் செய்த செயலுக்கு, இப்படி ஒரு விளைவை கண்டிப்பாக அவன் எதிர்பார்க்கவே இல்லை.

“மாமா.. கங்கா.. கங்கா அக்கா, ஊரை விட்டு போயிட்டாங்க போல..” என்று கையில் இருந்த அலைபேசியை எடுத்து அந்த குறுஞ்செய்தியை நர்மதா அவனுக்கு காட்டினாள். அதில் எழுதியிருந்ததை பார்த்தவனின் இதயம் ஒரு நொடி நின்றாலும், அவன் கங்கா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க மாட்டாள் என்ற நம்பிக்கையை இன்னும் அவன் கைவிடவில்லை.. அருகில் நின்றிருந்த செல்வாவின் சட்டையை பிடித்தவன்,

“இப்படி ஒரு விஷயம் மட்டும் நடந்திருந்தது.. அப்புறம் என்னை மனுஷனா பார்க்க மாட்ட..” என்று எச்சரித்தவன், உடனே அங்கிருந்து சென்று, தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

“அய்யோ.. ரெண்டு நாள் முன்ன தான், என் பிள்ளையை சந்தோஷமா பார்த்தேன்.. எப்பவும் அந்த சந்தோஷம் நீடிச்சு இருக்கனும்னு கடவுள்கிட்ட கூட வேண்டினேனே!! ஆனால் அந்த கடவுள் என் ராஜா விஷயத்துல ஏன் இப்படி கல் மனசா இருக்கார்..” என்று புலம்பியப்படி, அப்படியே அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தார். விஜியோ அவருக்கு ஆறுதலாக உடன் அமர்ந்தார்.

“அம்மா இப்போக் கூட நான் செஞ்சது எனக்கு தப்பா தெரியல.. அண்ணன் இப்போ கோபப்படலாம், வருத்தப்படலாம், ஆனா அதுக்கெல்லாம் பார்த்துக்கிட்டு இதை அப்படியே விடக் கூடாதும்மா.. கங்கா அண்ணனை விட்டுப் போனது சரிதான்ம்மா.. அண்ணன் கொஞ்ச நாளில் பழைய மாதிரி ஆயிடும்மா.. கவலைப்படாதீங்க..” என்று செல்வா தேற்றினான்.

இப்போது கூட இப்படி பேசுபவனை பார்த்து நர்மதாவிற்கு செல்வா மீது கோபம் அதிகமானது.. ஆனால் பெரியவர்கள் முன்னிலையில் ஏதும் பேசிவிடக் கூடாதென்று, அவனை முறைத்துவிட்டு, தன் அறைக்குச் சென்றாள்.

“பழையப்படின்னா, குன்னூர்க்கு போகும் போது என் பையன் இருந்தது போலயா? திரும்ப என் பிள்ளைக்கு அப்படி ஒரு நிலைமை வந்தா, அப்புறம் என்னை உயிரோட பார்க்கவே முடியாது” என்று கோமதி அழுதார்.

“ஏன் அண்ணி இப்படி பேசறீங்க.. நம்ம ராஜாக்கு அப்படியெல்லாம் ஆகாது அண்ணி..” என்று விஜி சமாதானப்படுத்த, செல்வாவோ என்ன சொல்லி தன் அன்னையை தேற்றுவது என தெரியாமல் விழித்தவன், கோபமாக சென்ற நர்மதாவை சமாதானப்படுத்த மாடிக்குச் சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.