(Reading time: 38 - 76 minutes)

னக்கென்ன தெரியும் எங்களை பத்தி, எங்க ரெண்டுப்பேருக்குள்ள இருக்க உறவு, பணமும் உடலும் சார்ந்த உறவுன்னு தானே நீ நினைக்கிற.. ஏன் அம்மாவே அப்படித்தான் நினைச்சிக்கிட்டு இருக்காங்க.. ஆனா கங்கா இங்க சென்னைக்கு வந்த நாளில் இருந்து கொஞ்ச நாள் முன்ன வர என்னோட சுண்டு விரல் கூட அவ மேல பட்டதில்ல தெரியுமா?” அவன் அப்படி சொன்னதும் நர்மதாவை தவிர மற்ற மூவரும் அவனை வியப்போடு பார்த்தனர். ஏற்கனவே இளங்கோ தான் நர்மதாவிடம் அவர்களுக்குள் தவறான உறவு இருந்ததில்லை என்று  சொல்லியிருக்கானே!!

“என்னோட பணத்துக்காக தான் அவ என்கிட்ட பழகுறாளா?” என்றவன், தன் பான்ட் பாக்கெட்டிலிருந்து எதையோ எடுத்தான், “இந்தா இந்த சாவி, இது என்னோட வார்ட்ரோப் சாவி, இதை எடுத்துட்டு போய் அதை திறந்துப் பாரு.. பத்து ரூபால இருந்து, லட்ச ரூபா மதிப்புள்ள பொருள் கூட அதுல இருக்கு.. அதெல்லாம் அவளுக்காக வாங்கினது.. ஆனா அதெல்லாம் அவக்கிட்ட நான் கொடுக்க நினைச்சது கூட இல்லை.. ஏன்னா கொடுத்தாலும் அவ வாங்கமாட்டா..அது தெரிஞ்சு தான் நான் கொடுத்ததில்ல.. என்னோட எந்த உதவியும் அவ எதிர்பார்த்ததில்ல.. கடைசி வர கண்ணியமா வாழ தான் அவ ஆசைப்பட்டா, அது புரிஞ்சு தான் நான் அவளை விட்டு விலகியே இருந்தேன்..

இதெல்லாம் உனக்கு சொல்லனும்னு கூட எனக்கு அவசியமில்லை.. இதுவரை அம்மாவுக்கே இதை நான் சொன்னதில்ல.. கங்கா தப்பானவ இல்ல.. எங்களுக்குள்ள தப்பான பழக்கம் இல்லைன்னு சொல்லியிருக்க முடியும்.. ஆனா அது தெரிஞ்சதும் ஒன்னு கங்காக்கிட்ட கல்யாணம் பத்தி பேசுவாங்க.. இல்ல வேறொரு பொண்ணை எனக்கு கட்டி வைக்க நினைப்பாங்க.. அதான் அமைதியா இருந்தேன்.. கங்காக்கூட தன்னை நல்லவன்னு யார்க்கிட்டேயும் சொல்லிக்க நினைச்சதில்ல.. அதனால தான் நீ சொன்னதும் அவ அதை உடனே ஒத்துக்கிட்டா, அப்பக்கூட அவளை உன்னால புரிஞ்சிக்க முடியலல்ல..” என்றவன்,

இன்னும் கூட கங்காவை என்னாலேயே புரிஞ்சிக்க முடியல.. அப்புறம் நீ எங்க புரிஞ்சிக்கிறது.. அவ்வளவு தான், கங்கா என்னை விட்டு போயிட்டா, நீ சொன்னதால அவ போனான்னு நினைச்சியா? அவளே என்னை விட்டு போக முடிவெடுத்துட்டா, திரும்ப வரமாட்டா” என்று புலம்பியபடி அப்படியே சோர்வாக அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தான்.

அவன் மூளையே ஸ்தம்பித்திருந்தது.. எப்படி? எங்கே சென்று கங்காவை தேடுவது என்று புரியாமல் அப்படியே அமர்ந்திருந்தான், நொடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணிக்கணக்காய் ஆனது.. யாருக்கும் அவனை சமாதானப்படுத்தும் தைரியம் இல்லை.. இளங்கோவோ தான் தவறு செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வில் இருந்தான். கோமதியோ தன் மகனின் நிலையை பார்த்து மௌனமாக கண்ணீர் விடுத்தார். விஜியும் நர்மதாவும் தான் அவரை சமாதானப்படுத்த முயன்றார்கள்.. அந்த நேரம் ஒரு அவசரத்தோடு, “துஷ்யந்த் தம்பி..” என்றப்படி வாணி அங்கு வந்தார்.

வாணியின் வரவை கண்டதும் கங்கா இருக்கும் இடம் தெரிந்து விட்டதோ என்று எதிர்பார்ப்போடு துஷ்யந்த் எழுந்தான்.

“என்ன அக்கா.. கங்கா வந்துட்டாளா?”

“இல்லை தம்பி.. இளங்கோவும் தேடப் போயிருக்கான்.. இருந்தாலும் நீங்களும் உங்களுக்கு தெரிஞ்ச ஆளுங்க மூலம் தேடுங்க தம்பி.. அவளா உங்களை விட்டு விலகிட்டாளேன்னு அவளை விட்டுடாதீங்க தம்பி.. “

“என்னக்கா.. நான் கங்காவை தேடாம விட்டுடுவேனா? கொஞ்சம் அதிர்ச்சியில் அப்படியே உக்கார்ந்துட்டேன்.. கண்டிப்பா நான் கங்காவை கண்டு பிடிப்பேன்..’

“எனக்கு தெரியும் தம்பி.. இருந்தாலும் நம்மல அவ வேண்டாம்னு ஒதுக்கிட்டு போயிட்டாளேன்னு நீங்க விட்டுடீங்கன்னா.. அதுக்கு தான் சொல்றேன்.. ஏன்னா அவளை நீங்க யாரோன்னு நினைச்சிடக் கூடாது.. அவ மேல உங்களுக்கு தான் உரிமை இருக்கு தம்பி.. ஏன்னா அவ உங்க பொண்டாட்டி, நீங்க கட்டின தாலி தான் அவ கழுத்துல இருக்கு..”

“வாணி அக்கா.. என்ன சொல்றீங்க?” நம்ப முடியாமல் அவன் அதிர்ச்சியாக கேட்க, அங்கிருந்த மற்றவர்களுக்கும் அந்த செய்தி அதிர்ச்சியை தான் கொடுத்தது.

“ஆமாம் தம்பி.. கங்காவோட புருஷன் நீங்க தான், நீங்க தான் அவ கழுத்துல தாலி கட்னீங்க.. அது உங்களுக்கு ஞாபகம் இல்ல.. கங்காவும் அதை வெளிய சொல்ல மாட்டா.. ஏன்னா உங்களோட மனைவின்னு உரிமை கொண்டாட மாட்டேன்னு, உங்க மாமாவுக்கு அவ சத்தியம் செஞ்சு கொடுத்திருக்கா..” என்று அவர் குன்னூரில் நடந்தவற்றை சொல்ல, சொல்ல.. அதையெல்லாம் கேட்ட துஷ்யந்த் மீண்டும் தளர்ந்து போய் அங்கிருந்த சோஃபாவில் வேகமாக அமர்ந்தான்.

ப்ரண்ட்ஸ் நீங்க எதிர்பார்த்த ஃப்ளாஷ்பேக் அடுத்த அத்தியாயத்தில் இருந்து ஆரம்பிக்க போகுது.. அப்புறம் ஃப்ளாஷ்பேக் முடிஞ்சதும் கிளைமாக்ஸ் தான்.. சரி இப்போ இந்த அத்தியாயம் எப்படி இருந்ததுன்னு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.. அடுத்த அத்தியாயம் ஃப்ளாஷ்பேக்கில் சந்திப்போம்.. நன்றி.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 32

Episode # 34

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.