(Reading time: 38 - 76 minutes)

ருந்த கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையோடு துஷ்யந்த் கங்காவின் வீட்டு வாசலை அடைந்த போது, அந்த பூட்டி இருந்த வீடே, கங்கா அங்கில்லை என்பாதை சொல்லாமல் சொல்லியது.. “ஒருவேளை இன்ஸ்ட்டியூட்க்கு போயிருப்பாளோ?” என்று மனதை சிறிது ஆறுதல் படுத்திக் கொண்டவன், உடனே இன்ஸ்ட்டியூட்டை நோக்கி காரை இயக்கினான்.

ஏற்கனவே இளங்கோ ரம்யாவிடம் கங்கா பற்றி விசாரித்து இருந்ததால், துஷ்யந்த் அங்கு சென்றதும், “நான் ஊருக்கு போயிட்டு வர வரைக்கும் அக்கா இன்ஸ்டிட்யூட்ட பொறுப்பா நீதான் பார்த்துக்கனும்னு சொன்னாங்க சார்.. நானும் அவங்க இளங்கோ அண்ணா ஊருக்கு தான் போறாங்கன்னு நினைச்சேன்.. ஆனா அக்கா இப்படி செய்வாங்கன்னு என்க்கு தெரியாது சார்.. அக்கா போய் ரெண்டுநாளா ஆச்சு.. எங்கப் போனாங்க, என்னப் பண்றாங்க ஒன்னுமே தெரியாம இருந்திருக்கோம்.. அக்காவை கண்டுப்பிடிச்சிடுவோமா சார்..” என்றுக் கேட்டபோது துஷ்யந்தால் அவளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவனே அந்த கேள்விக்கான விடை தெரியாமல் தான் இருந்தான்.

அங்கிருந்து அவன் அடுத்து சென்றது மதர் ஜெர்மன் அவர்களின் இல்லத்திற்கு தான்.. ஆனால் அங்கேயும் கங்கா வரவில்லை என்று சொல்லியிருந்தார்கள். மதரை பார்க்க வேண்டுமென்று சொன்னதற்கும், அவர் ஊரில் இல்லை என்று கூறினார்கள். கங்கா இங்கேயும் வரலைன்னா, அவ எங்க போயிருப்பா..? அவளுக்கு இவர்களையெல்லாம் தவிர வேறு யாரையும் தெரியாதே!! என்று கவலைக் கொண்டான்.

இல்லத்திலிருந்து திரும்ப கங்காவின் வீட்டுக்கு வந்த போது வாணி அங்கு வந்திருந்தார்.. துஷ்யந்தை பார்த்ததும் கண் கலங்கியவர், “என்னை மன்னிச்சிடுங்க தம்பி.. ரெண்டு நாளா அவ மனசு மாறியிருந்ததால அவ சொன்னதை நம்பிட்டேன்.. அதான் அவளை விட்டுட்டு போனேன்.. அவ இப்படி செய்வான்னு எனக்கு தெரியாம போச்சு தம்பி..” என்று மன்னிப்பு கேட்டார்.

“விடுங்க அக்கா.. யாரையும் குற்றம் சொல்ல முடியாது.. அவ போகனும்னு முடிவு எடுத்துட்டதுக்கு பிறகு நாம எல்லோரும் இருந்திருந்தாலும் கூட அதை செஞ்சிருப்பா..”

“உண்மை தான் தம்பி.. இங்கப்பாருங்க, இந்த லெட்டரை எழுதி வச்சிட்டு போயிருக்கா..” என்று ஒரு கடிதத்தை காண்பித்தார். அதை வாங்கியவன் பிரித்துப் படித்தான்.. அந்த கடிதம் வாணிக்காக மட்டுமே எழுதியிருந்தது..

வாணிம்மா.. இந்த கடிதத்தை நீங்க படிக்கிறப்போ கண்டிப்பா உங்களுக்கு என்மேல கோபம் வரும்.. ஆரம்பத்துல சாதாரணமா அறிமுகம் ஆன நாம், அம்மா பொண்ணாகவே மாறிட்டோம்.. இந்த சமயத்துல உங்களை விட்டுட்டு போறது என்னோட மனசுக்கு உறுத்தலா இருக்கு.. ஆனா நான் போறேன்னு சொன்னா நீங்க கண்டிப்பா ஒத்துக்க மாட்டீங்க.. அதான் எனக்கு வேற வழி தெரியல.. நான் இல்லாம போனாலும் துஷ்யந்தை பார்த்துக்க அவங்க குடும்பம் இருக்கு.. யமுனாக்கு இளங்கோ இருக்கான்.. ஆனா உங்களை அப்படியே விட்டுட்டு போக தான் எனக்கு மனசு வரல.. ஆனா துஷ்யந்தும் இளங்கோவும் உங்களை அப்படியே விட்டுட மாட்டாங்கன்ற நம்பிக்கையில் நான் போகிறேன்..

    

                                         இப்படிக்கு,

                                             கங்கா.

கடிதத்தை படித்தவனோட மனநிலை என்ன? அவனுக்கே புரியவில்லை.. கங்கா அவனோடு இல்லை என்பதை அவனால நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.. இப்படி ஒரு முடிவை அவள் எடுத்து விடக் கூடாதென்று தான், அவன் அவளை விட்டு விலகியே இருந்தான். ஆனால் அவள் மனதில் தான் இருக்கிறோம் என்று தெரிந்ததும் தான், அவள் மனதை மாற்ற முயற்சித்தான். அதற்கு பலனும் கிடைத்துவிட்டது என்று தானே அவன் பிறந்தநாளன்று நினைத்தான்.. அவள் மனதிலும் மாற்றம் வந்து விட்டது என்று தானே மகிழ்ந்திருந்தான்..

ஆனால் இப்படி விட்டு போக நினைத்தவள், ஏன் அன்று அப்படி நடந்துக் கொண்டாள். ஏன் இவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்து பின் ஏமாற்றத்தை தந்தாள். அதற்கு அப்படியே விட்டுவிட்டு போயிருந்திருக்கலாமே?? என்ற கேள்வியை கேட்டுக் கொண்டான்.

ஒரேடியாக விட்டு விலக போகிறோம் என்ற முடிவில் தான், செல்வதற்கு முன் இவனுக்கு சந்தோஷத்தை அளிப்போம் என்று அன்று அப்படி நடந்துக் கொண்டாளா? ஆனால் அது அனுதினமும் வேண்டும் என்று மனம் எதிர்பார்ப்பது அவளுக்கு புரியவில்லையா? இதற்கு அவள் முன்போல் விலகியிருந்திருந்தால் கூட அது இவனுக்கு பெரிதாக தெரிந்திருக்காது.

ஆனால் அவள் இப்படி ஒரு முடிவெடுக்க காரணம் செல்வா தானே?? ஏற்கனவே ஒருமுறை அவள் என்ன சொல்லியிருந்தாள்? “உங்க வீட்ல இருந்து திரும்ப யாராச்சும் இந்த விஷயமா பேச வந்தா, ஒரேடியா இந்த ஊரை விட்டு போயிடுவேன்..” என்று சொன்னாளே!! இப்போது செல்வா பேசப் போய் தானே அவள் இந்த முடிவை எடுத்தாள் என்று நினைத்தவனுக்கு, இப்போது செல்வா மீது கோபம் வந்தது.. உடனே அங்கிருந்து கோபமாக வீட்டுக்கு புறப்பட்டான்.

வீட்டிற்குள் நுழையும் போதே, “செல்வா செல்வா என்று கோபமாக கத்திக் கொண்டு வந்தான். சத்தம் கேட்டு தன் அறையிலிருந்து செல்வா அங்கு வந்தான்.. மற்றவர்களும் ஏற்கனவே அங்கு இருந்தனர்.

செல்வா படிக்கட்டுகளில் இருந்து இறங்கி வந்ததும், அவன் அருகே சென்றவன், “ கங்காவை எங்க அனுப்பின செல்வா.. அவளை ஏன் அனுப்பின..? அவ எங்க போனா?” என்று கோபமாக கேட்டான்.

“என்னோட அண்ணனை விட்டு போய்டு.. எங்க அண்ணனை விட்டு ஒரேடியா போய்டுன்னு மட்டும் தான் சொன்னேன்.. அவங்க எங்க போனாங்கன்னு எனக்கு தெரியாது.. அவங்க போயாச்சு.. அதோட கங்காங்கிற ஒருத்திய நீ மறந்துடு ண்ணா.. அது தான் உனக்கு நல்லது..” என்று செல்வா சொன்னதும், துஷ்யந்த் ஓங்கி அவனை ஒரு அறை அறைந்தான். துஷ்யந்த் இப்படி செய்வான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

“கங்காவை ஊரை விட்டு அனுப்புற உரிமையை உனக்கு யாருடா கொடுத்தா? என்மேல அக்கறை இருந்தா நீ என்கிட்ட தானே பேசி இருக்கனும்.. அதை விட்டுட்டு கங்காவை போகச் சொல்லியிருக்க.. ஏண்டா இப்படி செஞ்ச.. ஏன் இப்படி செஞ்ச..?? அவ இல்லன்னா நான் இல்லடா” என்றான் பாவமாக,

“நீ என்னை இன்னும் கூட அடிச்சிக்கோ ண்ணா.. எனக்கு அது வலிக்கவும் இல்ல.. அதுக்காக நான் அவமானப்படவுமில்ல.. எனக்கு நீ தான் முக்கியம்.. அன்னைக்கு சாரு போனப்பவும் நீ இப்படி தான் ஆன.. இப்போ கங்காக்காகவும் நீ திரும்ப பழைய மாதிரி ஆகப் போறியா? ஒரு பொண்ணால நீ பலகீனப்பட்றியாண்ணா..”

“ அன்னைக்கு சாரு போனப்போ நான் பலகீனப்பட்டது அவளாலேயோ இல்ல அவ காதலாலேயோ இல்லை.. அன்னைக்கு நான் அடைஞ்ச ஏமாற்றம், தோல்வி, எதிர்காலத்தை நினைச்சு பயம், உங்களையும் பாதாளத்துல தள்ளிட்டேனேங்கிற குற்ற உணர்வு இதுதான் அன்னைக்கு நான் அப்படியாக காரணம்.. இன்னைக்கு கங்கா போனதுக்காக நான் அப்படி ஆகமாட்டேன்.. ஏன்னா அவ எனக்கு இந்த உலகத்தை போராடி வாழ தான் கத்துக் கொடுத்திருக்கா.. நான் எப்பவும் போல எல்லாத்தையும் சிறப்பாவே செய்வேன்.. ஆனா நான் அதை ஒரு நடை பிணமா தான் செய்வேன்.. கங்கா இல்லாத வாழ்க்கையில நான் இருந்தும் இல்லாத மாதிரி தான்.. அவ தான் என்னோட உயுர்ப்பு.. அவ தான் என்னோட சுவாசம்.. அவ இல்லாத வாழ்க்கையில ஜீவனே இருக்காது.. நான் எப்பவும் நடை பிணம் தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.