(Reading time: 26 - 52 minutes)

நம்பிக்கையோடு பேசியவளைப் பார்த்ததும் வள்ளியம்மை அவளை பெருமையுடன் பார்த்தார்.

சாப்பாடு தயார் ஆனதும் தென்றல் கூப்பிட அனைவரும் சமையல் மேஜைக்குச் சென்று சாப்பிட ஆரம்பித்தனர்.

சாப்பிட்டு நீண்ட நேரம் ஆகியும் முகிலன் திரும்பி வராததால் வனிதா அவர்களிடம் கிளம்பிவிடுவதாகக் கூறினாள்.

வள்ளியம்மைக்கும் அதுவே சரியெனப்பட்டது.

பத்திரிக்கையில் பெயர் எழுதி வள்ளியம்மையிடம் தாம்பளத்தில் பூ பழம் வைத்து நீட்டினாள்.

வள்ளியம்மை பெற்றுக்கொண்டார்.

“இந்தாங்க அண்ணி.”

ஒரு சிறு துணி முடிச்சை தென்றலிடம் நீட்டினாள்.

“இது என்ன வனிதா?” அதைப் பெறாமலே என்னவென்று கேட்டாள்.

“இது நீங்க அன்னிக்கு எனக்கு கொடுத்த நகைகள். அத்துடன் பணமும் இருக்கு. நான் எத்தனை சிரமம் வந்தாலும் அதை விற்கலை.

...
This story is now available on Chillzee KiMo.
...

ஏன் வீடு வரவில்லை என்ற கவலை தொற்றிக்கொண்டது. ஏற்கனவே அவனது செல்லுக்கு அழைத்துப் பார்த்திருந்தனர். அன்று பார்த்து அவன் தனது செல்லை எடுத்துச் செல்லாமல் சென்றிருந்தான்.

அவன் அவ்வாறு செய்ததற்கு தான்தான் மறைமுகக் காரணம் என்று அவளுக்குப் புரிந்தது.

“இப்பவாவது என் பையனை நீ நம்பறியா?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.