(Reading time: 17 - 34 minutes)

டாக்சியில் அவளருகே அமர்ந்திருந்தாள் கீதா. பழைய நினைவுகள் அவளுக்குள்ளேயும் ஓடிக்கொண்டேதான் இருந்தன. இப்போது சுவாமிநாதனின் மீது நிறையவே மரியாதை வந்திருந்தது அவளுக்கு. இதை விட கண்ணியமாய் அந்த மனிதரால் நடந்துக்கொண்டிருக்கவே முடியாது என்று தோன்றியது.

ஆயிரம் இருந்தாலும் அவனது தங்கை அவனுக்கு உயிர்தான். ஏதேதோ எண்ணங்களில் பழைய நினைவுகளில் ஷங்கரின் மனதிற்குள் இப்பொது ஆழி பேரலைகள்.

‘ஹரிஷும் கூட முன்பு ஒரு முறை சொன்னான் சுவாமிநாதனிடம். ‘விடுங்கப்பா. அவன் செஞ்சதுக்கு தேவையான தண்டனை அவனுக்கு கிடைக்கும்’.

‘ஆம் கிடைக்கத்தான் போகிறது’ என்பதை மட்டும் அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

ரண்டு மாதங்கள் கடந்திருந்தன. ஐ.பி.எல் போட்டிகளின் அரை இறுதி ஆட்டங்கள் நடந்துக்கொண்டிருந்தன.

டி.வி.யில் பார்வை பதித்திருந்தாள் அனுராதா. ஹரிஷ் ஆட்ட மைதானத்தில் நின்றிருந்தான். பேட்ஸ்மேன் அடிக்க பந்து உயரே எழும்ப அதை நோக்கி ஓடினான் ஹரிஷ். அப்படியே தாவி உருண்டான் ஹரிஷ். .

‘அவுட்’ அத்தனை பேரும் கூவ சந்தோஷ துள்ளலுடன் கையை உதறிக்கொண்டான் அவன் .

‘அய்யோ.. அடிப்பட்டு விட்டதோ. வலிக்கிறதோ? பதறியது. இவள் உள்ளம். அவன் அருகில் இருந்தால் சட்டென அந்த கையில் ஒரு முத்தம் வைத்திருக்கலாம் என்று தோன்றியது.

‘முத்தமிடுவதா? அது எப்படி முடியும்? அதற்கான உரிமை இன்னும் கிடைக்கவில்லையே. உரசிக்காட்டியது அவள் உள்ளம். அவனிடம் அவள் பேசியே இரண்டு மாதங்கள் ஆகின்றனவே!

மறுபடியும் தனது இடத்தை அடைந்திருந்தான் ஹரிஷ். அடுத்த பந்து வீசப்பட இருக்க ஒரு முறை அவசரமாக பார்வையாளர்கள் பக்கம் பார்வையை சுழற்றினான் அவன். ஒரு வேளை அவள் வந்திருப்பாளோ என ஒரு நப்பாசை. அவன் அவளைத்தான் தேடுகிறான் என டி.வி பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு நன்றாக புரிந்தது.

‘அதெல்லாம் வந்திருக்க மாட்டாள். அவள் சொன்னால் சொன்னதுதான். இது வீண் ஆசை’ தனக்குதானே தலை அசைத்துக்கொண்டான் ஹரிஷ். அவன் மனம் படித்ததை போல் மெல்ல சிரித்துக்கொண்டாள் அவள்.

ஆட்டம் தொடர்ந்து அவனது அணி இறுதி போட்டிக்குள் நுழைந்திருந்தது. அடுத்த சில நிமிடங்கள்  கழித்து ஒலித்தது அனுராதாவின் கைப்பேசி. அழைத்தது ரகு.

‘சொல்லுங்க’ என்றாள் இவள் நிதானமாக

‘எப்போ பெங்களுர் கிளம்பறே’ என்றான் நேரடியாக.

‘பெங்களூரா எதுக்கு?’ புரியாததை போல் இவள் கேட்க

‘ம்? ஃபைனலஸ் பார்க்க’ என்றான் ரகு ‘ஸீ ஒருத்தருக்கு ஒருத்தர் நேரா பார்த்துக்க பேசிக்கத்தானே மாட்டீங்க. மேட்ச் பார்க்கலாம் வாம்மா. அவன் தவிக்கிறான் பாவம். தேடறான் உன்னை. இப்போ அவங்க கேப்டனுக்கு ஏதோ ஒரு அவசர வேலை. ஃபைனலஸ் விளையாட முடியாது அதனாலே இவன்தான் கேப்டன் அடுத்த மேட்சுக்கு. முதல் தடவையா ஒரு டீமுக்கு கேப்டனா விளையாட போறான். நீ வந்தா சந்தோஷ படுவான் வா ப்ளீஸ்’

‘இல்ல ப்ளீஸ்... நடந்தது எல்லாம் உங்களுக்கு தெரியும்? இப்போ நான் எப்படி அங்கே’’

‘அதெல்லாம் வரலாம். நானும் போறேன். என்கூட நீயும் வரே’ முடித்துவிட்டான் ரகு.

எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ? நேரம் அதிகாலை மூன்றை தொட்டிருந்தது.

அங்கே படுக்கையில் சாய்ந்திருந்தான் ஹரிஷ் ‘லவ் யூ அனும்மா..’ மெல்ல உச்சரித்தன அவன் இதழ்கள்.

இங்கே சோபாவில் பின்னால் சாய்ந்து கொண்டாள் அனுராதா ‘லவ் யூ ஹரிஷ்’ மெல்ல உச்சரித்தன அவள் இதழ்கள்.

இருவர் இதழ்களிலும் சின்னதாய் திருப்தியாய் ஒரு புன்னகை. அதே நேரத்தில் அவள் கழுத்தில் சிரித்துக்கொண்டிருந்தது அவன் கட்டிய தாலி!

1 or 2 episodes to go.

என்ன நடந்திருக்கும்னு எல்லாரும் கெஸ் பண்ணுங்க பார்க்கலாம் ;-) நான் அடுத்த வாரம் சொல்லிடறேன் அப்புறம் இன்னொரு சீக்ரெட். கடைசி அத்தியாயத்தில் நம்ம விவேக் ஸ்ரீநிவாசனுக்கு பெரிய பெரிய வேலைகள் இருக்கு ;-)

Thanks a lot my dear Friends.

 

தொடரும்...

Episode 15

Episode 17

{kunena_discuss:1147}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.