(Reading time: 25 - 50 minutes)

“நானும் பெங்களூருக்குதா போறேன்... என்னோட வா... இங்க பஸ்ஸுக்காக எத்தனை நேரம் காத்திருப்ப? பாரு...எட்டு மணிக் கூட ஆகலை எல்லாக் கடையையும் அடைச்சிட்டாங்க... இது பெங்களூரு கிடையாது... நீ தனியாளா பத்து மணிக்குக் கூட கடைத்தெருல சுத்துறதுக்கு... வா...வந்து வண்டில ஏறு”

சட்டென கண்கள் சுற்றுபறத்தை அலசுகிறது... அவன் வார்த்தைகளின் சத்தியம் புரிய மறுக்காது காரில் ஏறிவிட்டாள்.

கிரண் எதையும் தோண்டி துருவாத போதும், வலிய வந்து தனக்கு உதவியிருப்பவனுக்கு அவளெப்படி இந்த ஊரில் என்ற கேள்வி இருக்க தானே செய்யும்.

“ஃபைனல் இயர் எக்சாமெல்லா நல்லா முடியவும் கூர்குக்கு ஒரு டிர்ப் போட்டிருந்தோம்.  காலைல இங்கிருந்து கிளம்புறதா ப்ளான்”

“அதான் தெரி....” அதான் தெரியுமே வாய் வரை வந்துவிட்டதை அப்படியே நிறுத்தி கொண்டான்.

“சின்ன சண்டை....அங்கிருக்க பிடிக்கலை...அதான் கிளம்பிட்ட”

“சொல்றனேனு தப்பா நினைக்காத... அந்த சஞ்சய் நல்லவயில்ல! அன்னைக்கு ஏன் அவன் என்னை அடிச்சானு தெரியுமா? ஏன்னா அவன் உன்னை காதலிக்குறா.  நீ அவங்கிட்ட ஃப்ரெண்டாதா பழகுறனு எனக்கு நல்லாவே தெரியும்” என்றவனிடத்தில் அளவிட முடியா கோபமும் வஞ்சமும் கொட்டிக்கிடந்தது.

“......”

“நான் சொல்றதுல நம்பிக்கையில்லனா, நீயே யோசிச்சு பாரு... அப்ப உனக்கே புரியும்!”

இப்போதும் அவளிடம் பதிலில்லாது போக, ரேர் வ்யூ மிரரில் அவளின் யோசனை கவிழ்ந்த முகத்தை பார்க்கவும்... யோசிக்கட்டுமென்று அமைதியாகி போனான்.

கல்லூரி முதல் நாள், இவளருகே உட்கார்ந்து இவள் சொன்னதை கேட்காது தொலைந்திருந்த சஞ்சய்.

இரண்டாம் நாள் இவளுக்காக பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து விட்டு, இவளுக்கு ஏதுமோ என்று பதறிக்கொண்டு வந்த சஞ்சய்.

இஸ்கான் ஃபெஸ்டில் கலந்து கொண்டதால் இவளிடம் பேசாதிருந்து தவிக்க விட்டு பின்பு ஆதர்ஷின் திருமணத்தன்று பேசிய சஞ்சய்.

இவளின் வைரக்கம்மலோடு சிரித்த சஞ்சய்.

இதோ இந்த கிரண் தன்னிடம் காதலை சொல்லி கையை பிடித்த போது, பொங்கி எழுந்து இவளை காத்த சஞ்சய்.

மனோரஞ்சிதத்தை நீட்டி காதல் சொன்ன சஞ்சய்.

கடைசியாக இவளை கைகளில் தாங்கியிருந்த சஞ்சய்.   

இதுவரை இவள் பார்த்திருந்த நண்பன் ஜெய்யை, காதலெனும் கோணத்தில் அலச அலச இருதயம் காணாமல் போய் அவ்விடத்தில் ஒரு புதுவலி இடம் பெயர, இன்றைய மாலையை மீண்டும் அதாக ஓட்டி பார்க்கிறது... இவளை அங்கிருந்து விலக்க அவனெடுத்த முயற்சிகள், முடிவில் அவன் இத்தனை வருடக் காதலின் வெளிபாடான முத்தம்! அந்நேரத்தில் இவளிடமிருந்த தோற்று போன உணர்விர்கான விளக்கம் விரிய, பெண்ணவளின் இரகசியம் புரிகிறது.

‘நான் சஞ்சுவை காதிலிக்கிறனா?!’ அதிர்வும் அதிர்ச்சியும் புயலொன்றை அடிவயிற்றில் கிளப்பி மேலெழுப்புகிறது.

இல்லையென்றால் இந்நேரம் அவனை சும்மா விட்டிருப்பாளா என்ன? அவனுடைய காதலை இவள் முழுதும் உணரும் முன்னே ஜெய் எடுத்துகொண்ட உரிமையில் தள்ளாடிய இவள் மனதின் வெளிபாடுதான் கண்களின் நீரும்... அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறியதின் காரணமும்.

எல்லாம் முழுதாக புரிய மகிழ்ச்சி மொட்டுகள் மணம் கமழ்ந்த மனதின் பூரிப்பில், உடலின் ஒவ்வொரு செல்லையும் சென்றடைந்த சிலிர்ப்பும் அது அறிமுக படுத்திய சிறு வெட்கமும்.

தெரு விளக்கின் வெளிச்சத்தில் அவ்வப்போது இவளை கவனித்த கிரணிடம் அது சீற்றத்தை ஏற்படுத்த, அவன் கைகளில் ஒரு ஆட்டத்தை கண்டு நின்றிருந்தது வண்டி. 

அதில் கலைந்தவள், சுற்றும் முற்றும் பார்க்க... இடதுபுறம் மண்மேட்டின் மீது வளர்ந்து நின்றிருந்த மரங்களும், மறுபுறமோ மலையின் வளைவு பாதையும் (hair-pin curves)... ஏனிங்கு வண்டி நிற்கிறது என்று தோன்றவும்,

“என்னாச்சு கிரண்? வண்டில ஏதாவது பிரச்சனையா?”

“வண்டில பிரச்சனையில்ல... உங்கிட்ட தான்டி பிரச்சனை!” என்ற அவன் சீறலில் திகைத்துபோனாள்.   

கிரண் கல்லூரியின் இறுதி நாட்களில் மன்னிப்பு கேட்டு, நடந்தையெல்லாம் மறந்து நட்பு கரம் நீட்டியிருந்ததின் அடிப்படையில் தானே இன்று பயமேதுமின்றி இவனோடு கிளம்பியிருந்தாள்.

“கடைசியா உனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தா, அந்த சஞ்சய் உங்கிட்ட நடிக்குறுத புரிஞ்சுப்பனு நினைச்ச... நீ என்னடானா கனவு கண்டு வெட்கபட்றீயாடி.....? எனக்கு நீ வேணும்! அது எப்படினாலும் சரிதா...” என்றவனின் கண்கள் முதன்முறையாக கண்ணியக்கரையை கடந்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.