(Reading time: 25 - 49 minutes)

“சிஸ்டர் உங்ககிட்ட ஒரு உதவி கேக்கலாமா”  அங்கே பொறுப்பில் இருந்த தலைமை செவிலியரிடம் கேட்டாள்.

“சொல்லுங்க டாக்டர்”

“இன்னும் மூன்று நாளைக்கு டாக்டர் ஹர்ஷவர்தன் வர மாட்டார். நான் வந்து அவரோட டியூட்டி எல்லாம் செய்திடறேன். அவருக்கு புட் பாய்சன் ஆகி உடம்பு முடியல. நான் டாக்டர் துரை கிட்ட பேசிக்கிறேன். டாக்டர் ஹர்ஷா லீவ் எடுத்தா எக்ஸ்ட்டன்ஷன் வந்திடும். அதான் ”

அவள் கூறியதும் அந்த தலைமை செவிலியர் பதறிப் போனார்.

“பிரின்ஸ் டாக்டர்க்கு எப்படி இருக்கு. அவர் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். நீங்க அவரோட வேலைகளையும் செய்திடும் போது டாக்டர் துரை ஒகே சொல்லும் போது எங்களுக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை ”

“அப்புறம் இன்னொரு ஹெல்ப் கூட வேணும் சிஸ்டர், உங்க டியூட்டி டைம் ஒரு மணிக்கு முடிந்திடுமே. நீங்க கொஞ்சம் எங்க ஹாஸ்டல் வரைக்கும் போய் ஹர்ஷாவிற்கு ஆண்டிபயாடிக் மட்டும் போட்டு விட முடியுமா” என்று அவள் தயங்கி கேட்க இதில் இவ்வளவு தயக்கம் எதற்கு என்று கடிந்து கொண்டவர் தான் செய்வதாக சம்மதம் சொன்னார்.

வார்டில் இருந்த போனில் ஹர்ஷாவிற்கு தகவல் சொன்னவள் வேலையை முடித்து விட்டு டாக்டர் துரையைத தேடிச் சென்றாள். அங்கே டாக்டர் மீனலோசினியும் உடன் இருந்தார். இருவரையும் நீண்ட நாட்கள் பிறகு சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொண்டாள்.

“ஹவுஸ் சர்ஜன் முடியப் போகுதே. மேற்கொண்டு என்ன ப்ளான்” டாக்டர் மீனலோசினி தான் கேட்டார்.

தான் ஒரு நல்ல வேலை தேடிக் கொண்டு முதுகலை படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்யப் போவதாக கூறியவள் அவர்கள் கேட்காமலே ஹர்ஷவர்தன் யு எஸ் சென்று படிக்க இருப்பதை தெரிவித்தாள்.

“ரொம்ப நல்ல ஸ்கோர் ஆச்சே. எல்லா டாப் யுனிவர்சிடியிலும் இடம் கிடைக்கும்” டாக்டர் துரை சிலாகித்தார்.

அவன் இன்னும் இரண்டு வாரங்களில் இன்டர்வியூ செல்லவிருப்பதை தெரிவித்தவள் தான் வந்த காரணத்தைக் கூறினாள்.

“சார் எனக்கும் ஹர்ஷாவிற்கும் செப்டிக் வார்டு போஸ்டிங். எங்களோட முதல் போஸ்டிங் கடைசி போஸ்டிங் இரண்டுமே உங்கள் தலைமையில் இருப்பது ரொம்ப பெருமையாக உணர்கிறோம்” அவள் உணர்வுபூர்வமாக கூறினாள்.

“எங்க உன் பார்ட்னர் இன் கிரைம் காணோம். அவனுக்கும் சேர்த்து நீயே பேசிகிட்டு இருக்க” விளையாட்டாய் கேட்டார் டாக்டர் துரை.

ஹர்ஷாவின் உடல் நலம் குறித்து கூறியவள் லீவ் எடுக்க முடியாத நிலையையும் எடுத்துச் சொல்லி அவனது அறையிலேயே அவனுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருப்பதை தெரிவித்தாள்.

டாக்டர் துரையும் மீனலோசினியும் ஒருவரை ஒருவர் அர்த்தமுடன் பார்த்துக் கொண்டனர்.

“சார் உங்ககிட்ட ஹெல்ப் கேட்டு வந்திருக்கேன்.ஹர்ஷாவிற்கு குணமாகும் வரை அவன் டியூட்டி நானே சேர்த்து செய்துக் கொள்கிறேன் சார், அதனால ” என்றபடி தயங்கி நின்றாள்.

“அட்டன்டன்ஸ்ல ஆப்சன்ட் போடாம கம்ப்ளீஷன் சர்டிபிகேட்  தரணும் அவ்வளவு தானே” டாக்டர் துரை சொல்ல ஹரிணி முகத்தில் புன்னகை. 

“நான் இது போன்ற பேவர்ஸ் செய்வதில்லைன்னு உனக்கு நல்லாவே தெரியும். அப்படி இருந்தும் நான்  இதற்கு சம்மதிக்கிறேன் என்றால் அது ஹர்ஷவர்தனின் திறமை மற்றும் சின்சியாரிட்டிக்காக மட்டுமல்ல. அவனது பணியையும் சேர்த்து நீ பொறுப்பேற்றுக் கொள்வதனாலும் தான்”

ஹரிணி நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து விடுதி நோக்கி சென்றாள்.

“என் லைப்ல முதல் முறையா டாக்டர் பாண்டிதுரை ஒரு பர்சனல் பேவர் செய்திருப்பதை பார்க்கிறேன்”  மனைவி ஓர் சிரிப்புடன் சொல்ல துரையும் பதிலுக்குப் புன்னகைத்தார்.

“உன் அப்பா உனக்காக முதன்முறையாக பர்சனல் பேவர் செய்தாரே. அது போல என்று வைத்துக் கொள்” என்று அவர் சொன்ன பதில் ஹரிணிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

மாலை விரைந்து வந்தவள் நேராக ஹர்ஷாவின் அறைக்குச் சென்று தான் கதவை தட்டினாள்.

அவன் இன்று சற்று தேறி இருந்தான்.  காய்ச்சலும் வயிற்றுப்போக்கும் குறைந்திருந்தது என்றாலும் மிகவும் சோர்வாகவே இருந்தான்.

டாக்டர் துரை சம்மதம் சொன்னதை மகிழ்ச்சியாக தெரிவித்தாள்.

“சரளா சிஸ்டர் வந்து மருந்தை போட்டு விட்டாங்க. நீ தான் அவங்ககிட்ட சொன்னியாம். இன்னிக்கு பெட்டரா பீல் செய்கிறேன். நாளைக்கு நானே வார்டுக்கு போறேன். இந்த ரெண்டு நாள் லீவ்ல அட்ஜஸ்ட் ஆகிரும்”

“ஹரி அது வேற வார்டா இருந்தா கூட பரவாயில்ல. செப்டிக் வார்ட். நாளைக்கு ஒரு நாள் மட்டுமேனும் ரெஸ்ட் எடு. பத்து நாள் கணக்கு சரியாய் இருக்கும். அப்புறம் வேணுமானால் வார்டில் வந்து நர்சிங் ஸ்டேஷனில் இருந்து கொள். வேலை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” ஹரிணி சொல்ல ஹர்ஷா சம்மதம் சொன்னான்.

அதே போல மறுநாள் ஓய்வு எடுத்துக் கொண்டு அடுத்த நாள் முதல் வார்டுக்கு சென்றான். ஹரிணியின் சொல்படியே நடந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.