(Reading time: 43 - 86 minutes)

அவன் கை தானாக அவளை அணைத்து அவள் முதுகை தடவி கொடுக்க,

“ஹே ரதி.. என்னாச்சு டீ ?? “ என்றான் மெதுவாக அக்கறையுடன்....

அவளோ எதுவும் பேசாமல் அவன் மார்பில் முகம் புதைத்து விசும்பினாள்...

அதை கண்டு பதறியவன்

“என்னாச்சு டா?? கனவு எதுவும் கண்டியா??  “ என்றான்..

அவள் மெதுவாக இல்லை என  தலை அசைத்தவாறு மூக்கை உறிஞ்சி கொண்டே

“என்னை விட்டு போயிட மாட்டீங்க இல்ல..?? “ என்றாள் தான் முன்னால் கண்ட கனவின் தாக்கத்தை இப்பொழுது உணர்ந்து...

“ஹே..  லூசு பொண்டாட்டி... உன்னை விட்டு நான் எங்க போக போறேன்?? எப்பவும் உன் கூடவே தான் இருப்பேன்.. “ என்று அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டினான்..

“ப்ராமிஷ்?? “ என்று அவள் கையை நீட்ட, தன் அன்னையின் நினைவு வந்தது அவனுக்கு...

“ஹ்ம்ம்ம் ம

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்குவதற்கான பெருமையும், கண்ணில் வழக்கமான  குறும்பு சிரிப்புடன் மேடை ஏறியவனை அருகில் இருந்த டீவியில் க்ளோசப்பில் பார்த்து பாரதி மெய் மறந்து ரசித்தாள்...

அவள் அருகில் ஜானகி, சுசிலா, தர்மலிங்கம், லட்சுமி என அனைவரும் முன் வரிசையில் அமர்ந்து இருக்க, அனைவர் முகத்திலும் பெருமையாக இருந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.