(Reading time: 43 - 86 minutes)

மேடை ஏறியவன் கெஷ்ட் ன்  அருகில் சென்று அந்த விருதை சிரித்து கொண்டே வாங்க, அனைவரும் கை தட்டி ஆரவரிக்க, அவன் இளவரசியும் தன் பிஞ்சு கைகளை தட்டி கொண்டிருந்தாள் தன் தந்தையை பார்த்து சிரித்தவாறு...

அந்த விருதை வாங்கியதும் அவன் கண்கள் தானாக தன் மகளிடம் செல்ல, அவளும் கை தட்டி சிரித்து கொண்டிருப்பதை கண்டவனுக்கு தன் தந்தையே நேரில் வந்து கை தட்டி அவனை வாழ்த்துவதை போல இருந்தது..  அந்த விருதை விட தன் மகளின் உற்சாகம் அவனுக்கு பல விருதை வங்கியதை போல இருந்தது...

மேடையில் ஒரு சில வரிகள் பேசிவிட்டு, ஓடி வந்து தன் மகளை அள்ளி கொண்டான்... அவளும் அவனை கண்டதும் தாவி சென்றாள்... அதற்கு பிறகு முழுவதும் அவளை கீழ  இறக்கவில்லை...

அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையின் மறுபக்கம் இரண்டு வரிசை தள்ளி அந்த ராகுல் அமர்ந்திருந்தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>வந்த இடத்தில் ஆதி விருது வாங்குவதை காணவும், நீண்ட நாட்களுக்கு பிறகு அவனை கண் குளிர கண்டாள்.. அவனின் தோற்றம் இப்பொழுது முற்றிலும் மாறியிருந்தது.. நடையில் ஒரு கம்பீரமும் கண்ணில் ஒரு தீர்க்கமும் உதட்டில் அதே  குறும்பு சிரிப்புமாக பார்ப்பவர்களை ஒரு அடி தள்ளி நிக்க வைக்கும் தோற்றமாக இருந்தான்.. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.