அவனும் கண் அடித்து குறும்பாக சிரித்து பின்,
”ஆமா பேபி.. உனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா..?? “ என்றான்
தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த பவித்ராவும் அவன் புறம் திரும்பி படுத்து கொண்டே,
“ஓ.. யெஷ்... சூப்பரா இருக்கு பாஷ்... இந்த தோப்பு.. இந்த வீடு... “என்று கண்கள் விரிய தான் மதியம் பார்த்தவைகளை வர்ணிக்க, அவளின் படபடக்கும் இமைகளையே ரசித்து கொண்டிருந்தவன் அவளின் அந்த ஆர்வமான பேச்சை கேட்டதும்,
“ஹ்ம்ம்ம் அப்ப ஏன் பெரியம்மா கிட்ட இந்த பட்டிகாட்டுக்கு வரமாட்டேனு சொன்ன?? “ என்று கொக்கி போட்டான் இடுங்கிய கண்களுடன்..அதை கேட்டு அதிர்ந்தவள்,
“ஆஹா... ஆர்வ கோளாறுல எல்லாத்தையும் உளறி இப்படி மாட்டிகிட்டியே பவித்ரா... ஹ்ம்ம்ம் எதையாவது சொல்லி சமாளிப்போம்... “என்று அவசரமாக யோசித்தவள்
“
...
This story is now available on Chillzee KiMo.
...
என் தாத்தா இந்த தோப்புல முதல் மரக் கன்னை நட்டார்... அப்ப அவர் சொன்னது இன்னும் நினைவு இருக்கு..
“நிஷாந்த்.. எந்த காரணத்தை கொண்டும் இந்த தோப்பை அழிய விடக்கூடாது... நீதான் இதுக்கு பாதுகாப்பா இருந்து இந்த தோப்பையும் இந்த பண்ணையும் பார்த்துக்கனும் னு என் கையை பிடிச்சுகிட்டு சொன்னார்...