முதலில் அதிர்ச்சியைக் காட்டிய கண்களை காதலைக் காட்டும்முன் மித்ரா மலைகளைப் பார்ப்பதைப்போல் திரும்பி நின்றுகொண்டாள் எங்கே பிரணவ் தன் கண்களில் உள்ள காதலை கண்டுகொண்டு விடுவானோ என்ற பயத்தில்.
"என்ன பிரணவ் திடீர்னு இப்படி" என்றாள் மித்ரா பிரணவ்வின் புறம் திரும்பாமல்.
"திடீர்னு எல்லாம் இல்ல மித்ரா" என்று ஆழ்ந்து மூச்சுவிட்ட பிரணவ் மித்ராவின் பக்கத்தில் வந்து நின்று எதிரே தெரிந்த மலைகளையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.
பக்கவாட்டில் பார்த்த மித்ரா அவனே கூறட்டும் என்று எதுவும் போசாமல் அமைதியாக இருந்தாள்.
"லவ் அட் பஸ்ட் சயிட். இந்த வார்த்தைகள உன்ன பாக்குறதுக்கு முன்னாடி யாராவது என்கிட்ட சொல்லியிருந்தாங்கன்னா நா கண்டிப்பா சிரிச்சிருப்பேன். எனக்கு ... ருக்கு"
This story is now available on Chillzee KiMo.
...
"என்ன முரளி சொல்ற"
"இன்னும் ஒருவாரத்துல தீபாவளி வருதுல"
"ம்ம்..ஆமா"
"நேத்து கௌவுதம் நம்மகிட்ட போன் பேசும்போது ஒருவிசயம் சொன்னான் நியாபகம் இருக்கா தீபாவளி முடிஞ்ச மறுநாள் நயிட் மும்பை போறதா"