(Reading time: 31 - 62 minutes)

அதில் குறுகுறுக்க, மெல்ல புன்னகைத்தாள்...

அதன் பின் தனக்கு வேண்டிய பைல்களை எல்லாம் தேடி எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வந்து அவனுடைய ஹேண்ட் சூட்கேஷில் ல் வைத்தான்...

ஒரு வழியாக எல்லாம் எடுத்து முடிக்கவும் மணியை பார்க்க, நேரம் ஆவதை உணர்ந்து

“ஓகே பேபி.. இப்ப கிளம்பினாதான் சரியா இருக்கும்... நீ  ஜாக்கிரதையா இரு.. வேணா நீ போய் உன் அம்மா விட்ல இருந்துட்டு வா... “ என்றான்....

அதை கேட்டதும் இதுவரை தன்னை கட்டு படுத்தி வந்தவள் கண்கள் தானாக கரிக்க ஆரம்பித்தது.. 

அவள் முகத்தில் வந்து போன ஏக்கத்தை கண்டு கொண்டான்...

அவனுக்குமே அவளை பிரிவது  கஷ்டமாகத்தான் இருந்தது...

இந்த  பிராஜெக்ட்டிற்காக அவனுடைய அசிஷ்டன்ட் போவதாக இருந்தது.. திடீரென்று அவர் அன்னை இற

...
This story is now available on Chillzee KiMo.
...

ஏக்கமாக பார்த்துகொண்டு நிற்பவளை மனம் முழுவதும் நிரப்பி கொண்டுஅவளுக்கு கை அசைத்து விடை பெற்று சென்றான்..

தன் கணவனை அனுப்பி விட்டு திரும்ப தங்கள் அறைக்கு வந்தவள் மீண்டும் கண்ணை கரித்து கொண்டு வர, அப்படியே படுக்கையில் பொத்தென்று  விழுந்து குலுங்கி குலுங்கி அழுதாள் பவித்ரா...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.