(Reading time: 27 - 53 minutes)

இதில் விபாகரனோடு இன்று தான் கொஞ்சம் தயக்கம் நீங்கி பேச ஆரம்பித்தாள். அவனும் அவளிடம் மனம் விட்டு பேச வேண்டுமென்று கூறியிருந்தான். உண்மையிலேயே அவனுக்கு தான் அவள் தீங்கிழைத்தாள். ஆனால் அதைப்பற்றி இதுவரையில் ஒரு வார்த்தை கூட மனது வருத்தப்படும்படி பேசாத அவனது முகத்தை நினைத்துப் பார்த்தவளுக்கு, இப்படி வீட்டை விட்டு சென்று இன்னும் வருத்தத்தை கொடுக்க விரும்பாதவளாக வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தாள். ஆனால் சிறிது நேரம் கடற்கரையில் அமர்ந்து மன அலைப்புறுதல் நீங்கவும் செல்ல தான் முடிவெடுத்திருந்தாள்.

அப்படியிருக்க தன்னை மஞ்சுளா தேடுவார் என்றெல்லாம் அவள் எதிர்பார்க்கவில்லை, உண்மையில் வருத்தத்தோடு கிளம்பி வந்தவளுக்கு அவரிடம் சொல்லாமல் வந்துவிட்டது கூட ஞாபகமில்லை, எப்போதும் வரும் நேரத்திற்கு வராதவளை வீட்டில் தேடுவார்களே என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை, அந்த அளவுக்கு இப்போதும் இன்னும் அந்த குடும்பத்துடன் நெருக்கம் வரவில்லையே, விபாகரனும் இரவு தான் வருவான், அதனால் வீட்டிற்கு அழைத்து சொல்ல வேண்டுமென்று அவள் நினைக்கவில்லை, அப்படியே சொல்ல வேண்டுமென நினைத்தாலும், அவள் அலைபேசியில் தான் சார்ஜ் சுத்தமாக தீர்ந்து போய் அணைக்கப்பட்டு இருந்ததே,

அது கூட அவளுக்கு தெரியாது, அவளாக கிளம்பலாம் என நினைத்து, பேருந்து நிலையத்திற்கு வந்த போது தான், அந்த இடமே ஆட்கள் இல்லாமல், வெறும் வாகனங்கள் மட்டும் சாலையில் போக வர இருக்கவும், இந்த பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்குமா? என்பது தெரியாமல், பேசாமல் வாடகை காரில் சென்று விடலாம் என்று அலைபேசியில் புக் செய்வதற்காக பார்த்த போது தான், அது அணைக்கப்பட்டிருந்ததே தெரிய வந்தது.

வாடகை காரில் போக முடியவில்லையென்றாலும் பரவாயில்லை, ஒரு ஆட்டோ பிடித்து சென்று வீட்டில் போய் பணம் கொடுத்து கொள்ளலாம் என்று நினைத்தாள். ஆனால் வழியில் ஏதாவது பிரச்சனை என்று பாதியில் இறங்கும் நிலை வந்தால், பின் என்ன செய்வது? பணத்திற்கு எங்கே செல்வது? வாடகை காரில் சென்றாலும், கிட்டத்தட்ட இந்த நிலை தானே, என்று தனக்குள்ளேயே குழம்பிக் கொண்டிருந்தாள்.

பணம் மட்டுமல்ல, அவள் பேரில் கொஞ்சம் பணம் போட்டு டெபிட் கார்டெல்லாம் அவளுக்கு பாலா வாங்கிக் கொடுத்திருந்தான். அதை கூட வீட்டிலேயே வைத்து விட்டு வந்த தன் முட்டாள்தனத்தை நினைத்து நொந்துக் கொண்டவள், சிறிது நேரம் நின்று ஏதாவது பேருந்து வருகிறதா என்று பார்ப்போம், இல்லையென்றால் பின் என்னவென்று யோசிக்கலாம் என்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.