(Reading time: 27 - 53 minutes)

அலைபேசி எண்ணை தேவைப்படும் என்று வாங்கி வைத்திருந்தார். அதை வைத்து இப்போது அவர் அவனை அழைக்க, அவனோ யாதவியை பற்றி விவரம் தெரிந்ததால் காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருக்க, புதிய எண்ணாக தெரிந்தாலும், அந்த அழைப்பை ஏற்றவன், "ஹலோ.." என்றதும்,

"நான் தான் பன்னீர் பேசறேன்.. யாதவியோட அப்பா.." என்றவர்,

"அன்றைக்கு அத்தனை பேர் முன்ன யாதவி என்னோட பொண்டாட்டி, அவ மேல எனக்கு தான் அதிக உரிமை இருக்குன்னு சீன் போட்டு யாதவியை கூட்டிட்டு போன.. அவளை நீ நல்லா பார்த்துக்கிற லட்சணம் இதுதானா? கையில் பணம் கூட இல்லாம, பஸ்க்கு நின்னுக்கிட்டு இருக்கா.. உன்னை வேண்டாம்னு சொல்லிட்டு அவ போனதால அவளை பழிவாங்க தான் உன்னோட கூட்டிக்கிட்டு போனீயா..

இங்கப்பாரு யாதவிக்கு உன்னை பிடிக்கல.. சாத்விக்கை தான் பிடிச்சிருக்கு, அதான் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டு அவ போனா.. அதுக்குப்பிறகு சாத்விக் அவளை ஏத்துக்காத போது கூட அவ உன்கிட்ட திரும்பி வரலன்னா, அதுலயே தெரியலையா? அவளுக்கு உன்னை பிடிக்கலைன்னு, அவளை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போய் அவளை எதுக்கு கஷ்டப்படுத்துற.. அதுக்கு பதிலா என் பொண்ணை நீ விவாகரத்து செஞ்சுடு.. அவளுக்கு பிடிச்ச சாத்விக்கை கல்யாணம் செஞ்சுக்கிட்டு அவ சந்தோஷமா இருப்பா.. புரியுதா?" என்று அவர் சொல்லி முடிக்கவும், அவருக்கு அவன் எந்த பதிலும் கூறாமல் அலைபேசி அழைப்பை அணைத்தவனுக்கு அவன் தங்கை அர்ச்சனா மீது அளவுக்கடந்த கோபம் பெருகியது.

அதே கோபத்தோடு வீட்டை அடைந்தவன், உள்ளே நுழையும்போதே, "அர்ச்சனா.. அர்ச்சனா.." என்று கத்திக் கொண்டே சென்றான்.

அவன் குரல் கேட்டு அர்ச்சனா அறையில் இருந்து வெளியே வர, மஞ்சுளாவும் அங்கு வந்தவர்,

"யாதவி பத்தி தெரிஞ்சுதா விபு.." என்றுக் கேட்டார்.

"ம்ம் அவ ஈஞ்சப்பாக்கம் கோவிலுக்கு தான் போயிருந்தா ம்மா.. இப்போ அவ பாலா வீட்ல இருக்கா.." என்ற விவரத்தை சொன்னவன்,

பின் அர்ச்சனாவை பார்த்து, "உன்னோட மனசுல என்ன நினைச்சிக்கிட்டு இருக்க.. எதுக்கு நீ யாதவிக்கிட்ட அப்படி பேசின, அவ இங்க வந்ததில் இருந்து அவக்கிட்ட மோசமா நடந்திருக்க, இன்னைக்கு அவளை தப்பா பேசியிருக்க, என்ன நீ எது செஞ்சாலும் நான் கேட்க மாட்டேன்னு தைரியமா?" என்றுக் கோபமாக கேட்டான்.

"இங்கப்பாரு ண்ணா.. அத்தனை பேர் முன்ன நீ அவளை உன்னோட மனைவின்னு சொல்லி கூட்டிட்டு வந்ததை என்னால ஏத்துக்க முடியல, அங்க ஏதாவது பேசக் கூடாதுன்னு தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.