(Reading time: 27 - 53 minutes)

இருப்பாங்களா? இன்னைக்கு அர்ச்சனா, நாளைக்கு விபாகரனே பேசலாம், அதால யாதவிக்கு மனக்கஷ்டம் வரும், அதனால பேசாம தேவி விபாகரனை டைவர்ஸ் பண்ணிட்டு, சாத்விக்கை கல்யாணம் செஞ்சுக்கட்டும்.." என்று மதுரிமா கூறவும், புவனா அதிர்ச்சியடைந்தார் என்றால், யாதவி அவளை யோசனையாக பார்த்தாள்.

அந்த நேரம் "அம்மா.." என்று வீட்டுக்குள் நுழைந்த விபாகரன் புவனாவை கூப்பிட,

"அய்யோ மது பேசினதை விபா கேட்டிருப்பானா?" என்பது போல் புவனா யோசிக்க, யாதவி, மதுரிமாவுக்குமே அதே எண்ணம் தான்,

"அடடே வா விபா.. உட்காரு.." என்று அவனை வரவேற்றவர்,

"இரு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்.." என்று சொல்லி சமையலறைக்குச் செல்ல முயற்சிக்க,

"இருக்கட்டும்மா சாப்பிட்டு விட்டு தான் வந்தேன்.. யாதவியை வீட்டுக்கு கூட்டிட்டு போக தான் இப்போ வந்தேன்.. கூட்டிட்டு போகட்டுமா? என்றுக் கேட்டவன்,

"யாதவி உன்னோட ப்ரண்ட் வந்துருக்காங்க போல.. அதனால இப்போ என்கூட வர்றீயா? இல்ல உன்னோட ப்ரண்ட் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு வர்றீயா?" என்றுக் கேட்கவும்,

"இல்ல இப்பவே வரேன்.." என்றவள்,

"மது இன்னொரு நாள் பார்க்கலாம்.." என்று சொல்லிவிட்டு, "அம்மா போயிட்டு வரட்டுமா.." என்று புவனாவிடமும் கேட்க,

"போயிட்டு வாம்மா.." என்று அவர் அவளை விபாகரனோடு வழி அனுப்பி வைத்தார்.

பின் அவர்கள் சென்றதும், "யாதவி தெளிவா தான் இருக்கா மது.. அவளை குழப்ப பார்க்காத.. யாதவி விபாகரனோட வாழறது தான் நல்லது.." என்று சொல்லிவிட்டு சென்றார்.

காரில் விபாகரன் எதுவும் பேசாமல் ஏதோ தீவிர சிந்தனையில் வரவும், நேற்று அவனிடம் சொல்லாமல் சென்றதற்கும், இப்போது மதுரிமா பேசியதற்கும் கோபமாக இருக்கிறானோ என்று நினைத்தவள்,

"அது நேத்து மஞ்சுளா அம்மாக்கிட்ட சொல்லாம போகணும்னு நான் நினைக்கல.. மறந்து தான் போனேன்,

அதேபோல சாத்விக் அங்க வருவான்னும் நான் எதிர்பார்க்கல.. கார்ல ட்ராப் செய்யவான்னு கேட்டதுக்கு வேணாம்னு தான் சொன்னேன்.. அதுக்குள்ள மழை பெய்யவே தான்.." என்று அவள் இழுக்கவும், அவன் ஒரு பார்வை பார்க்க,

"மது என்மேல இருக்க பாசத்தில் தான் அப்படி பேசிட்டா.." என்று சிறிது நேரத்திற்கு முன்பு நடந்ததை பேசவும்,

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.