(Reading time: 27 - 53 minutes)

நான் அமைதியா இருந்தேன், ஆனா அதுக்காக அவ இந்த வீட்டுக்குள்ள மருமகன்னு உரிமை எடுத்து செய்றதெல்லாம் என்னால பார்க்க முடியாது.. இந்த வீட்டு மருமகளா இருக்க தகுதியை அவ இழந்துட்டா, அவளை துரத்தி விட்டுட்டு உனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கையை தேர்ந்தெடுக்க பாரு.." என்று அவளும் விடாமல் பதிலுக்கு பேச,

"இங்கப்பாரு அர்ச்சனா, அவளை இங்க கூட்டிட்டு வந்தது நான்.. என்னோட வாழ்க்கையில் அவளை தவிர வேற எந்த பொண்ணுக்கும் இடமில்லைன்னு நான் எப்போதோ முடிவு செஞ்சுட்டேன், அவ விரும்பின சாத்விக்கோட சேர்ந்திருந்தா, அப்போ நான் வேற ஏதாவது முடிவெடுத்திருக்கலாம், ஆனா அவ வாழ்க்கையில் அவ அப்படி எந்தவொரு முடிவும் எடுக்காத நிலையில் அவளை என்னோட மனைவியா ஏத்துக்கிறதில் எனக்கு எந்த தயக்கமும் இல்ல.. உன்னால அவளை உன்னோட அண்ணியா ஏத்துக்க முடியலன்னா அமைதியா இருந்திடு, அதைவிட்டுட்டு அவக்கிட்ட திரும்ப நீ தப்பா பேசற வேலை வச்சிக்காத.." என்றான்.

"நல்லா இருக்கு ண்ணா.. உனக்கு துரோகம் செஞ்சுட்டு போனவளுக்காக உன்னோட தங்கச்சிக்கிட்டேயே இப்படி பேசறல்ல, அவளை நம்பாத ண்ணா.. இதோ இப்போக் கூட அம்மாக்கிட்ட சொல்லாம கொள்ளாம போறா.. அப்படிப்பட்டவ திரும்ப உன்னை விட்டு ஓடிப் போக மாட்டான்னு என்ன நிச்சயம்?" என்றதும்,

"இங்கப்பாரு என் வாழ்க்கையில் இப்படி தான் நடக்கணும்னா அது நடந்து தான் ஆகும், அதுக்கு நீ கவலைப்பட்டுக்கிட்டு இருக்காத.. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுல்ல, விஜய் அங்க தனியா இருந்து கஷ்டப்பட்றான், நீ எதுக்கு இங்க இருக்க, அம்மாக்காக வந்தன்னா, அவங்க எனக்கும் அம்மா தான், அவங்களை என்னாலயும் பார்த்துக்க முடியும்.. ஒழுங்கா நீ மும்பை போகறதுக்கு பாரு.." என்று விடாமல் பேச,

அதற்கு மஞ்சுளாவோ, "விபு.." என்று கொஞ்சம் சத்தமாக குரல் கொடுத்தார்.

"நீங்க சும்மா இருங்கம்மா.. இவளுக்கு நீங்க கொடுக்கிற இடம் தான், இவ இப்படியெல்லாம் பேசறா, முதல் நாள் இவ யாதவிக்கிட்ட பேசும்போதே நீங்க கண்டிச்சிருந்தீங்கன்னா, இவ இன்னைக்கு இப்படி பேசியிருக்க மாட்டா.. அன்னைக்கு நான் என்னம்மா சொன்னேன், யாதவியை நான் தான் இங்க கூட்டிட்டு வந்தேன், அவளுக்கு இங்க ஏதாவது பிரச்சனைன்னா அதுக்கு நான் தான் பொறுப்புன்னு சொன்னேனே இல்லையா? அப்படியிருந்தும் நீங்க அமைதியா இருந்தா என்னம்மா அர்த்தம்? அப்போ யாதவி இங்க இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறீங்களா? அப்படி நீங்க நினைச்சாலும் அதை நான் கேட்க மாட்டேன், முதலில் இவளை மும்பை அனுப்புங்க.." என்று அவன் பிடிவாதமாக கூற,

"என்னை இங்க இருந்து போக சொல்ல உனக்கு எந்த உரிமையும் கிடையாது.. இது என்னோட

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.