(Reading time: 27 - 53 minutes)

"இங்கப்பாரு யாதவி.. நீ சொல்லாம போனதால உன்மேல கோபமோ, இல்லை சாத்விக்கோட வந்ததால சந்தேகமோ, மதுரிமா பேசினதுக்கு வருத்தமோ எனக்கு சுத்தமா இல்ல.. நீ எனக்கு எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம் புரியுதா?

உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.. நம்ம வாழ்க்கையை பத்தி முடிவெடுக்கணும்.."  என்று சொல்லிவிட்டு சிறிது நேரத்திலேயே ஒரு பூங்காவிற்கு அவளை அழைத்துச் சென்றவன்,

சிறிது நேர அமைதிக்கு பின், "யாதவி.. அன்னைக்கு உன்னை பிடிச்சிருக்கான்னு கேட்டு தான் நம்ம கல்யாணம் நடந்துச்சு.. ஆனா அந்த நாளே கல்யாணம் மட்டுமல்ல, என்னையும் பிடிக்கலன்னு நீ விலகிப் போயிட்ட.. அதுக்கு பிறகு நம்ம கல்யாணத்தை பத்தி நான் வெளியவே சொல்லக் கூடாதுன்னு இருந்தேன்.. ஆனா அன்னைக்கு எல்லோருக்கும் முன்ன சொல்றது போல ஆயிடுச்சு.

அதுக்கு காரணம், சாத்விக் உன்னை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்டான்.. அத்தனை பேர் முன்ன அதை உன்கிட்ட சொல்ல தயாரா இருந்தான்.. ஆனா உன் வாழ்க்கையில் என்ன நடந்துச்சுன்னு அவனுக்கு தெரியாது.. அந்த நேரம் நீயும் அவனோட அந்த செயலை உள்வாங்கிக்க முடியாம அதிர்ச்சியில் நின்ன,

ஒருவேளை உனக்கு அது பிடிச்சிருந்தா கூட, நாளைக்கு உன்னைப் பற்றி உண்மை தெரிய வரும்போது, சாத்விக் நீ உண்மையை மறைச்சிட்டேன்னு உன்னை தப்பா நினைக்க கூடாதுன்னு தான் நான் அந்த நேரம் உண்மையை சொல்ல வேண்டியதா போச்சு..

எல்லோருக்கும் உண்மை தெரிஞ்சதால, நான் உன்னை என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்.. உன்னோட மனநிலையை அப்போ கேட்கல, அதுவுமில்லாம உன்மேல காதல் கொண்ட மனசு, உன்னை விட தோனல, அதேசமயம் உன் மனசில் என்ன இருக்குன்னு தெரியாம உன்னை நெருங்கவும் முடியல..

நாம இப்படியே இருக்க முடியாதில்லையா? நம்ம வாழ்க்கையை பத்தி ஏதாவது ஒரு முடிவெடுத்தாகணும், அம்மா என்னை திரும்ப உன் கழுத்தில் தாலிக்கட்ட சொல்றாங்க.. என்னைப் பொறுத்தவரை உன்கூட வாழ்ற வாழ்க்கை தான் எனக்கு சந்தோஷம், அதனால் உன் கழுத்தில் திரும்ப அந்த தாலியை கட்ட எனக்கு விருப்பம் தான், ஆனா இந்த முறை உன்னோட மனப் பூர்வமான சம்மதம் எனக்கு வேணும்..

நமக்கு கல்யாணம் ஆகிட்டதால நீ என்கூட வாழணும்னு கட்டாயம் கிடையாது.. உன்னோட மனசுல என்ன இருக்கோ நீ சொல்லலாம், உனக்கு என்னோட வாழ ஆசையா? இல்லை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.