(Reading time: 27 - 53 minutes)

மும்பை போகவும் மாட்டா.. ஏற்கனவே கல்யாணம் ஆகி 7 வருஷம் ஆச்சு, இன்னும் குழந்தை இல்லை, ஆரம்பத்தில் விஜய் வெளிநாட்டுல இருந்ததாலன்னு கொஞ்சம் காலம் போச்சு, அப்புறம் தானா குழந்தை உண்டாகும்னு காத்திருந்தாங்க.. அடுத்து ட்ரீட்மெண்ட் பார்த்து பாதியிலேயே விட்டுட்டாங்க.. அவளை திரும்ப விஜய் கூட டாக்டர்க்கிட்ட போகச் சொல்லுங்க, அவளுக்குன்னு ஒரு குழந்தை இருந்தா, இப்படி மத்த விஷயத்தில் அதிகம் தலையிட மாட்டா.. அதுக்கு தான் சொல்றேன்.." என்று அவன் புரிய வைக்க,

"சரிப்பா நான் அர்ச்சனாக்கிட்ட பேசறேன்.. அப்புறம் உனக்கும் ஒன்னு சொல்லணும், யாதவியை மனைவின்னு கூப்பிட்டிக்கிட்டு வந்து அவளை தனி ரூம்ல வச்சிருந்தா அர்ச்சனா என்னவா நினைப்பா, அதேபோல அவ கழுத்தில் தாலி இல்லாம இருக்கு, இது மத்தவங்க பார்வைக்கு தப்பா படும், அதனால நான் முன்ன சொன்னது போல, கோவிலில் வச்சு அவ கழுத்தில் தாலிக் கட்டி, அவளோட குடும்பம் நடத்துற வழியைப் பாரு.. அப்போ யாரும் உங்களை ஒன்னும் சொல்ல முடியாது.." என்று அவர் சொல்லவும்,

"சரிம்மா.." என்றவன், தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்.

ஒரு வாரமாக படப்பிடிப்பு என வெளிநாடு சென்றிருந்த மதுரிமா, இன்று விடியற்காலையில் தான் சென்னையை வந்து அடைந்தவள், அவள் வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் உறங்கியவள், பின் நேராக கிளம்பி இங்கு புவனாவை பார்க்க வந்தவள், யாதவி அங்கிருப்பதை கண்டதும் மகிழ்ச்சியானாள்,

"தேவி எப்போ வந்த.. உன்னை இங்க பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.." என்றதற்கு யாதவி சாதாரணமாக ஒரு புன்னகையை மட்டும் சிந்த,

"என்ன தேவி.. என்ன நடந்துச்சு, ஏதாவது பிரச்சனையா?" என்று மதுரிமா கேட்கவும்,

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே.." என்று யாதவி பதில் கூறினாள்.

"ம்ம் பார்த்தா அப்படி தெரியலையே.. ஏதோ பிரச்சனை இருககு.." என்று மதுரிமா அதையே திரும்ப சொல்ல,

"ம்ம் ஆமாம் மதும்மா.. நம்ம தேவியை சந்தோஷமா புகுந்த வீடு அனுப்பி வச்சா, அங்க அர்ச்சனாவால் பிரச்சனை.." என்ற புவனா, நடந்ததை அப்படியே சொல்ல,

"பெரியம்மா நீங்க அவசரப்பட்டு தேவியை அங்க அனுப்பிச்சிருக்க கூடாது.. தேவிக்கும் விபாகரனுக்கும் கல்யாணம் நடந்துச்சு தான், ஆனா தேவி சாத்விக்கை தானே நேசிச்சா.. சாத்விக்கிற்கும் இவ மேல ரொம்ப விருப்பம்.. ஆனா கல்யாணம் நடந்துடுச்சுன்னு நீங்க விபாகரனோட அனுப்பி வச்சிட்டீங்க..

என்ன இருந்தாலும் அந்த வீட்ல இருக்கவங்க இவளோட பழைய விஷயத்தை பேசாம

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.