(Reading time: 27 - 53 minutes)

அம்மா வீடு, அவங்க கூட தான் நான் இருப்பேன்.." என்று அர்ச்சனாவும் விடாமல் பேசினாள்.

"அப்போ அம்மாவையும் உன்னோட கூட்டிட்டு போ.." என்று சொன்னவன், கோபமாக அங்கிருந்து சென்றுவிட்டான்.

"பாரும்மா யாதவிக்காக நம்மளையே வீட்டை விட்டு போகச் சொல்லி அண்ணன் சொல்லுது.." என்று அர்ச்சனா மஞ்சுளாவை பார்த்து கண்ணீர் சிந்த,

"அவன் இப்படி பேசக் கூடியவனா அர்ச்சனா.. நீதான் அவனை இப்படி பேச வைக்கிற.. இங்கப்பாரு அவனுக்கு யாதவியை தான் பிடிச்சிருக்கு, அவளோட வாழ அவன் முடிவெடுத்துட்டான். அது உனக்கு பிடிக்கலன்னு அவன் முடிவை அவன் மாத்திக்க மாட்டான்.. அதை புரிஞ்சிக்கோ, அவன் சொன்னது போல உன்னால யாதவியை ஏத்துக்க முடியலன்னா, அவங்க ரெண்டுபெரையும் விட்டு விலகி இரு.. அது தான் நல்லதும் கூட.." என்று சொன்னவர், விபாகரனை பார்க்கச் சென்றார்.

அவன் அறையில் கோபத்தில் அவன் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருக்க, அறைக்குள் வந்தவர்,

"விபு என்ன இருந்தாலும் நீ அர்ச்சனாவை வீட்டை விட்டு போன்னு சொல்லியிருக்க கூடாது ப்பா.." என்று கூற,

"பின்ன என்னம்மா.. அவ இப்படி தொடர்ந்து யாதவிக்கிட்ட நடந்துக்கிறது சரின்னு சொல்றீங்களா.. அம்மா அவளை இங்க வீட்ல விட்டுட்டு நான் கிளம்பி போயிட்றேன், இப்படி டெய்லி நடந்தா.. இன்னைக்கு மனசு சரியில்லன்னு கோவிலுக்கு போக நினைச்ச யாதவி, நாளைக்கு மனசு கஷ்டத்தில் வேற ஏதாவது முடிவு எடுத்தா.. என்னம்மா செய்றது?

" ஏன் விபு அப்படியெல்லாம் நினைக்கிற.."

"நினைக்காம எப்படிம்மா.. முதல் நாள் என்கிட்ட நல்லா பேசின யாதவி, அப்புறம் என்கிட்ட சரியா கூட பேசல, பேசலன்னா கூட பரவாயில்லை, என்னைப் பார்த்தாலே நடுங்குறா.. அந்த அளவுக்கு அர்ச்சனா அதிகமா பேசியிருக்கா, அதை புரிஞ்சிக்காம நான் என்னல்லாமோ நினைச்சேன்..

இதுல இன்னைக்கு கையில் பணம் கூட கொண்டு போகாம பஸ்க்காக பஸ் ஸ்டாப்ல நின்னுருக்கா.. அங்க சாத்விக்கும், அவளோட அப்பாவும் பார்த்திருக்காங்க.. சாத்விக் அவளை ட்ராப் செய்றேன்னு சொன்னதுக்கு பாலா வீட்ல விட சொல்லியிருக்கா.. அவளோட அப்பா, இதுதான் என் பொண்ணை பார்த்துக்கும் லட்சணமான்னு கேக்கறான்.. அப்போ கோபம் வராதா?

இங்கப்பாருங்கம்மா.. நான் கோபத்தில் சொன்னாலும், நான் சொன்னது சரி தான், அர்ச்சனா இங்க இருந்தா அவ சும்மா இருக்கமாட்டா.. யாதவிக்கு பிரச்சனை கொடுக்கணும்னு அவ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.