(Reading time: 30 - 60 minutes)

என்று அவள் சொல்லவும், வசந்தனும் அவளது பேச்சை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்.

"சாத்விக் உனக்கே இப்ப தெரிஞ்ச விஷயம் தான், உன்மேல காதல்னு சொல்லி எனக்கு நடந்த கல்யாணத்தை கூட புறக்கணிச்சிட்டு, என் கழுத்தில் விபு கட்டின தாலியை கழட்டி அவர்க்கிட்ட கொடுத்துட்டு தான் உன்னை தேடி வந்தேன்..

அப்போ உன்மேல எனக்கு இருந்தது அளவில்லாத காவிய காதல், அப்படியிருக்கும் போது உன்னைவிட்டுட்டு இன்னொருத்தரோடு எப்படி வாழ முடியும்? அது தப்பில்லையா? கல்யாணம் நடந்திட்டதால மனசில் உன்னை வச்சிக்கிட்டு விபு கூட வாழ்றது தப்பு தானே.. அப்படி தான் அன்றைக்கு எனக்கு தோனுச்சு.. அதான் உன்னை தேடி வந்தேன், ஆனா நீ என்னை காதலிக்கவே இல்லைன்னு சொல்லிட்ட.. என்னைப்பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம என்னை அனுப்பிவிட்டுட்டன்னு அப்போ எனக்கு உன்மேல அளவுக்கதிகமா கோபம் வந்துச்சு.. நீ என்ன ஏமாத்திட்டதா தான் நினைச்சேன்.. என்னோட வாழ்க்கையையே அழிச்சிட்டன்னு கூட நினைச்சேன்..

ஆனா அதெல்லாம் அப்போ தோன்றியது தான், அதன்பிறகு என்னோட வயசும் பக்குவமும் அதிகமாக அதிகமாக, நான் எவ்வளவு முட்டாள்தனமா இருந்திருக்கேன்னு தெரிஞ்சுது.. ஏன்னா அப்போ எனக்கு உன்மேல இருந்தது காதலே இல்ல சாத்விக்.. நீயில்லேன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை அப்படியெல்லாம் எனக்கு இல்ல..

உன்மேல அப்போ எனக்கு இருந்ததெல்லாம் ஒருவித மயக்கம் தான், உன்னோட அழகு, அந்தஸ்து, சமுதாயத்தில் நடிகனா உனக்கு இருந்த மதிப்பு இதெல்லாம் தான் என்னை ஈர்த்தது.. உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டா சமூகத்தில் எனக்குன்னு கிடைக்கும் அந்தஸ்து தான் அப்போ எனக்கு பெருசா தெரிஞ்சது.. அதையெல்லாம் தான் நான் காதல்னு தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.. ஆனா அது காதல் இல்ல, ஒருவித மயக்கம்னு எனக்கு அப்போ தெரியாம, அதில் என் மனம் சாய ஆரம்பிச்சதால என்னோட அம்மாவை இழந்தேன், விபுவோட வாழ இருந்த நல்ல வாழ்க்கையை இழந்தேன், என்னை நல்லாப் புரிஞ்சிக்கிட்டு என்னை ஏத்துக்க இருந்த விபுவை இழந்தேன்..

இத்தனை இழந்து தான் இந்த உண்மையை நான் புரிஞ்சிக்கிட்டேன் சாத்விக்.. ஆனா இந்த உண்மை எனக்கு புரிஞ்சப்ப, நான் செஞ்ச தப்பை நினைச்சு நான் வருந்தாத நாளில்லை, ஆனா அப்போக் கூட மனசுக்கு ஒரு நிம்மதி கிடைச்சுது எதனால தெரியுமா? நான் விபுக்கு துரோகம் பண்ணிட்டேன், அநியாயம் செய்துட்டேன்னு தினம் தினம் வருத்தப்பட்ட நான், நல்லவேளை சாத்விக்கிற்கும் அநியாயம் செய்யல, அவனை ஏமாத்தல.. ஏன்னா அவன் தான் என்னை காதலிக்கவேயில்லையே, அவன் நம்மக் கூட பழகினதை நாம தானே காதல்னு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.