(Reading time: 30 - 60 minutes)

வாழ்ந்தா, திரும்ப உங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்காதேன்னு தான் சொன்னேன், அதில்லாம முன்ன நடந்ததை வச்சு உன்னோட மனசு கஷ்டப்பட்றது போல பேசறாங்களேன்னு தான் நான் அப்படி சொன்னேன்..

ஆனா நீ தெளிவா இருக்கும்போது, சாத்விக் மேல உனக்கு காதலே இல்லைங்கிற போது, நீ விபாவோட தான் வாழணும், ஏன்னா அவரும் உன்னை தான் நேசிக்கிறாரு.. அப்படியிருக்க அவரோட காதலை புரிஞ்சிக்கிட்டு அவரோட வாழறதைப் பத்தி யோசி,

என்னோட மனசு அவரை நேசிக்க ஆரம்பிச்சுது தான், ஆனா அவருக்கு எப்போ கல்யாணம் ஆச்சுன்னு தெரிஞ்சுதோ, அதுவும் நீ அவரோட மனைவின்னு தெரிஞ்சப்பின்னாடி நான் அதெல்லாம் மறந்துட்டேன்.. அவர் மனசுல நீதான் இருக்கேன்னு தெரிஞ்சப்பிறகும், அவரை என்னால கல்யாணம் செய்துக்க முடியாது.. சினிமால அப்படி ஒரு கேரக்டர் கொடுத்தாலே நான் நடிக்க மாட்டேன்.. இதில் என்னைப் பத்தி தெரிஞ்சும் இப்படி பேசறது சரியில்லை தேவி.. எனக்குன்னு ஒருத்தர் இனி பிறக்க போறதில்லை, ஏற்கனவே பிறந்து இருப்பார்.. சீக்கிரம் என்னை தேடி வருவார்.. அதனால இப்படி உளறாம ஒழுங்கா விபாவை புரிஞ்சிக்கிட்டு வாழப் பாரு.." என்று அவள் பேசி முடிக்கவும், அவளைப் பார்த்து பெருமிதம் கொண்ட புவனா, அவளுக்கு திருஷ்டி கழித்துவிட்டு,

பின், இணைப்பில் இருந்த யாதவியிடம், "தேவி திடீர்னு உனக்கு என்ன ஆச்சு.. உன் வாழ்க்கையில் முன்ன நடந்ததையெல்லாம் மறந்து விபா உன்னை ஏத்துக்கிறது உனக்கு கிடைச்ச வரம், அதை திரும்ப நீ இழக்காத.. அதுவுமில்லாம விபாகரனை உங்கம்மா தான் உனக்காக தேர்ந்தெடுத்தாங்க.. நீ அவனோட வாழறதை பார்த்தா தான் அவங்க ஆத்மா சாந்தியடையும், புரிஞ்சுதா?" என்று அறிவுரை கூறினார்.

அவர்கள் பேசியதை சொல்லிவிட்டு அவனைப் பார்க்க, "இவ்வளவு சொல்லியும் என்கிட்ட வந்து திரும்ப அதைப்பத்தியே கேட்கிறியே, உன்னை என்ன செய்யலாம்.." என்று அவன் கேட்கவும்,

"இல்லை ஒருவேளை உங்களுக்கு சம்மதம்னா அவளை சம்மதிக்க வைக்கலாம்னு தான்.." என்று இழுத்தாள்.

"உன்னோட இந்த குட்டி மூளை இன்னும் வளரவே இல்லை போல.." என்று செல்லமாக தலையில் தட்டி அவன் கூறினான்.

அதில் சிணுங்கியப்படி அவன் மார்பில் சாய்ந்தவள், "என்மேல உங்களுக்கு கோபமே வராதா?" என்றாள்.

"ஒரு சின்னக்குழந்தை தப்பு செஞ்சா அது மேல கோப முடியுமா? அப்படித்தான்,

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.