(Reading time: 30 - 60 minutes)

"அண்ணி சொல்றது உண்மை தான் விபு.. எனக்கே இது யாதவி தானான்னு சந்தேகம் வந்துடுச்சு.. நம்ம யாதவி ரொம்பவே மாறிட்டா.." என்று மஞ்சுளா ஆச்சர்யப்பட்டார்.

"இதெல்லாம் புவனாம்மாவோட ட்ரெயினிங் ம்மா.." என்று விபாகரன் கூற,

புவனாவோ மகிழ்ச்சியோடு, "இதுக்கு நான் மட்டுமில்ல, தனமும் ஒருவகையில் காரணம்.." என்றார்.

"ஆமாம் எனக்கு மொத்தம் 3 அம்மா.. இதை நான் எப்போதும் பெருமையா சொல்லிப்பேன்.." என்று யாதவி மகிழ்ச்சியாக கூற,

"இந்த நேரம் மட்டும் ரத்னா இருந்தா, நீ இத்தனை பொறுப்பா இருக்கிறத பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பா.." என்று மஞ்சுளா நெகிழ்ச்சியோடு கூறினார்.

அதில் அன்னையின் ஞாபகம் வந்து யாதவி முகம் வருத்தத்தில் மாற, அதை கவனித்த விபாகரனோ,

"ஆக மொத்தம் எல்லோரும் சேர்ந்து என்னோட அந்த குழந்தை போல இருந்த யாதவியை மாத்திட்டீங்க.. எனக்கு அந்த பழைய யாதவி தான் வேணும்.." என்று சோகமாக கூற,

"ஒழுங்கு பிள்ளையா இருந்தா உங்களுக்கு பிடிக்காதே.." என்று யாதவி அவனை முறைக்க, அவனோ சிரித்தான்.

அதை அனைவரும் ரசித்துப் பார்க்க, எப்போதும் இறுக்கமாக இருக்கும் தன் மகன் இப்போதெல்லாம் சிரித்த முகமாக இருப்பதை பார்த்து மஞ்சுளா மனம் நிறைவாக உணர்ந்தார்.

அர்ச்சனாவிற்கும் தன் அண்ணனிடம் இந்த மாற்றத்தை பார்த்ததாலோ என்னவோ, யாதவியிடம் முன் போல் கோபம் வருவதில்லை, அதே சமயம் அவளோடு சுமூகமாகவும் இல்லை, யாதவியுமே அர்ச்சனாவின் உடல் நலனை முன்னிட்டு அவளை கோபப்படுத்த விரும்பாமல் ஒதுங்கியே இருந்துக் கொண்டாள்.

ஆனால் இந்த நான்கு மாதங்களில் மஞ்சுளாவிற்கும் யாதவிக்குமிடையே நல்ல புரிதல் வந்திருந்தது. மஞ்சுளாவை இப்போதெல்லாம் அத்தை என்று அழைக்க யாதவி பழகிக் கொண்டாள். வாழ்க்கையும் இனிமையாக சென்றுக் கொண்டிருந்தது.

திடீரென திருமண மண்டபமே பரப்பரப்பாக காணப்பட்டது. பின் இரண்டு திரை நட்சத்திரங்கள் சேர்ந்து வந்தால் சும்மாவா? சாத்விக்கும் மதுரிமாவும் சேர்ந்து திருமணத்திற்கு வந்தனர். அதிலும் சில நாட்களுக்கு முன்பு தான் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள போகும் செய்தியை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருந்தனர்.

இதுவரை இதுப்பற்றி கேட்ட போதெல்லாம் எங்களுக்குள் ஒன்றுமில்லை என்று சொல்லிக்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.