(Reading time: 30 - 60 minutes)

தான், இல்ல ஏதாவது ஆசிரமத்துக்கு எழுதி வச்சிடுவேன்.." என்று மதுரிமா மிரட்ட, அவர்களும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டனர்.

இங்கு சாத்விக் வீட்டிலோ, சுமதி தன் சம்மதத்தை தெரிவித்து விட்டார். ஆனால் வசந்தன் மறுக்க, சாத்விக்கோ பிடிவாதமாக இருக்கவே, இனியும் மகன் தன் பேச்சை கேட்க மாட்டான் என்பதை உணர்ந்து, பின் வேறு வழியில்லாமல் அவரும் சம்மதித்தார்.

யாதவி, விபாகரனும் கூட இந்த செய்தியை கேட்டு மகிழ்ந்தனர். அடுத்து தான் பத்திரிக்கையாளர்களிடம் அவர்கள் இருவரும் திருமணத்தைப் பற்றி பேசினர்.

இப்போதும் அவர்கள் திருமணம் எப்போது என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வியெழுப்ப, "நாங்க ரெண்டுப்பேரும் சேர்ந்து நடிக்கும் படம் முடிஞ்சதும், எங்க கல்யாணம் தான்.." என்று இருவரும் சேர்ந்து பேட்டி அளித்தனர்.

இப்போது அர்ச்சனா கருவுற்றிருந்தாள். அதனால் மஞ்சுளா மகளுடன் இருக்க மும்பை சென்றுவிட்டார். யாதவியும் விபாகரனும் மட்டுமே இப்போது வீட்டில் இருக்க, அன்று விபாகரன் அலுவலகம் சென்றிருக்கவே, இரவுக்கான உணவை யாதவி சமைத்துக் கொண்டிருக்க, திடீரென பின்னாலிருந்து அவளை அணைத்த விபாகரன், அவளின் கன்னத்தோடு கன்னம் உரசினான்.

முதலில் அவனது அணைப்பில் எதிர்பாராமல் அதிர்ந்தவள், பின் அவன் தான் என்று அறிந்துக் கொண்டு, "என்ன விபு.. வேலைக்காரம்மா இருக்காங்க.. அவங்க பார்த்தா என்ன ஆகறது?" என்றுக் கேட்டாள்.

"கவலைப்படாத யது.. அவங்களுக்கு லீவ் கொடுத்து அனுப்பிட்டேன்.." என்று அவன் சொல்ல, அவனை முறைக்க முயன்று தோற்றாள்.

"பின்ன என்ன யது.. இப்படி நீ சமைக்கும் போது பின்னாடி வந்து உன்னை அணைக்கணும்னு எனக்கு ஆசை தெரியுமா? அது இன்னைக்கு தான் நிறைவேறியிருக்கு,

முதல்முறை அர்ச்சனா உன்னை இங்க கூட்டிட்டு வந்தப்போ, இந்த இடத்தில் உன்னை பார்த்து, நீ என்னோட மனைவியா வந்துட்டன்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன்.. ஆனா அப்புறம் தான் அர்ச்சனா உன்னை எதுக்காக கூட்டிட்டு வந்தான்னு தெரிஞ்சு கோபப்பட்டேன்.."

"ஆனா நீங்க என்னைப் பார்த்து தான் கோபப்பட்றீங்கன்னு நான் நினைச்சுட்டேன்.."

"உன்மேல எனக்கு கோபம் வருமா?"

"ஆனா அது எனக்கு அப்போ தெரியாதே, ஆனா இப்போ தெரிஞ்சுக்கிட்டேன்.."

"ம்ம் என்ன தெரிஞ்சிக்கிட்டு என்ன? எப்போதும் கிட்சன்ல உன்னோட ஒரு பாடிகாட் இருந்துக்கிட்டே இருக்காங்க.. ரெண்டாவது முறை புவனா ம்மா.. அடுத்து என்னோட அம்மா..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.