(Reading time: 30 - 60 minutes)

முழுதாக பேசும் வரை அமைதியாக கேட்ட சாத்விக்,

பின், "ம்ம் நீ சொல்ல வருவதை என்னால புரிஞ்சிக்க முடியுது யாதவி.. கண்டிப்பா இதில் எனக்கு வருத்தமில்லை, சின்ன பொண்ணான உன்னோட மனசில் தேவையில்லாத சலனத்தை ஏற்படுத்திட்டோமேன்னு எனக்கு எப்போதும் ஒரு குற்ற உணர்வு உண்டு. இப்போ நீ பக்குவப்பட்டிருந்தாலும் தெளிவான முடிவெடுத்தாலும், அப்போ உன் வாழ்க்கையில் நடந்ததுக்கெல்லாம் நான் தானே காரணம்.. அந்தவிதத்தில் நீ நல்லப்படியா வாழறதை பார்க்கும் வரை எனக்கு குற்ற உணர்வு இருக்கும் தான்,

அதேபோல நான் உன்னை காதலிச்சது உண்மை தான், அன்னைக்கு நீ என்னை தேடி வந்தப்போ உன்னோட நலன் கருதி தான் எனக்கு உன்மேல காதல் இல்லைன்னு பொய் சொன்னேன்.. ஆனா அப்போதே என்னோட காதல் மடிஞ்சு போச்சுன்னு தான் சொல்லணும் யாதவி.. அதுக்குப்பிறகு உனக்காக காத்திருந்தது ஒரு குற்ற உணர்வால தான்,

காதலிச்சா போராடி அதில் ஜெயிக்கணும், ஆனா அந்த நேரத்தில் என்னால போராட முடியல.. அதுக்கான வயசும் நமக்கு அப்போ இல்ல, உண்மையை சொல்லப் போனா அது நமக்கு காதலிக்கிற வயசே இல்ல.. என்னால அந்த நேரத்தில் உன்னை தக்க வச்சுக்க முடியல.. அப்போ அந்த காதலுக்கு என்ன அர்த்தம், ஒருவிதத்தில் என்னோட காதல் கூட ஈர்ப்புன்னு தான் சொல்லணும்.. அந்த வயசில் அதுக்கு மேல காதலில் ஜெயிக்க அதிகம் போராட முடியாது. அதனால் அப்படிப்பட்ட காதல் எனக்கு உன்மேல இருந்ததால் அதுக்காக நீ வருத்தப்படணும்னு இல்ல யாதவி..

நீ விபாகரன் கூட வாழறது தான் சரி.. நீ தெளிவா இருக்கல்ல அது போதும், நீ சொன்னது போல மத்தவங்களுக்கு நீ உன்னோட முடிவுக்கான விளக்கம் கொடுக்கணும்னு அவசியம் இல்ல, உன்னோட மனசில் என்ன இருந்துச்சுன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன். அதேபோல் விபாகரனும் புரிஞ்சுப்பார். என்னால இனி உன் வாழ்க்கையில் எந்த தொந்தரவும் இருக்காது சரியா?" என்று தன் பக்க விளக்கங்களை கூறினான்.

 "நீ என்னை சரியா புரிஞ்சிக்கிட்டதுக்கு நன்றி சாத்விக்.. அதேபோல நீ நல்லப் பொண்ணா பார்த்து கல்யாணம் செஞ்சுக்கிட்டா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.."

"கண்டிப்பா நான் கல்யாணம் செய்துப்பேன்.. அதுக்கான நேரம் வரும்போது கண்டிப்பா செய்துப்பேன்.. என்னைப் பத்திய எந்த குற்ற உணர்வும் உனக்கு வேண்டாம் யாதவி.."

"ம்ம் சரி சாத்விக்.. அதேபோல நீயும் நான் இத்தனை வருஷம் ஒதுங்கி வாழ்ந்ததுக்கு நீ காரணம்னு நினைச்சு வருத்தப்படாத.. அந்த பதின் வயதில் ஒவ்வொருத்தருக்கும் இதுபோல அவங்க மனசை சலனப்படுத்தும் விஷயங்கள் நிறைய அவங்க சந்திக்க வேண்டி வரும், ஆனா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.