(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

வேல இருக்கு டேக் கேர் பை பை! என்று கூறி கை அசைத்து இருவரையும் அனுப்பி வைத்தான். மன்வீர் காரை ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பித்தான் கூகுள் மேப்பின் டிரைவிங் டேரக்க்ஷன்ஸ் மூலம் காரை ஓட்டி கொண்டு சென்றான் சிறிது நேரம் காரில் இருவரும் மௌனமாகவே இருந்தனர்.சாரா மன்வீரையே கவனித்து கொண்டிருந்தாள் அவன் காரை நிதானமாகவும் கவனமாகவும் டிராஃபிக் ரூல்ஸ்சை பாலோ செய்வதையும் பார்த்தால் ஹலோ…..எஸ்கியூஸ் மி உங்களதான் என மன்வீரை அழைத்தாள் சொல்லுங்க மேடம்……என்று அவன் கேட்க எனக்கு ரொம்ப போர் அடிக்குது என்னோட மூவி சாங்ஸ் அந்த சி.டி ல இருக்கும் அத கொஞ்சம் பிலே பண்ணு என்ற கூற மன்வீரும் சாங்க்ஸை பிலே செய்ய பாட்டுக்கு அவளும் சேர்ந்து வாய் அசைத்து பாடி கொண்டிருந்தாள் என்னோட பேவரட் சாங் இது ரொம்ப ஹிட்டான பாட்டு இந்த பாட்டு மட்டுமல்ல படமும் சூப்பர் ஹிட் கேட்டுறுக்கிய ?? இல்ல மேடம் நான் கேட்டதுல நான் ரொம்ப மூவிஸ்லாம் பாக்க மாட்டேன் அப்படியே கேட்டாலும் ஹிந்தி பாட்டு தான் கேப்பன் அதுவும் டைம் இருந்தா என்று கூறிய மன்வீரை சரியான சிடுமூஞ்சி ரொம்ப சீன் போடுறான் சும்மா ஒரு பேச்சுகாவுது எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் உங்க மூவிஸ் சாங்ஸ்லாம் பாதுர்க்கேன் சொல்றானா இப்படி இன்சல்ட் பண்ணிட்டானே என்று மன்வீரை மனதிற்குள் திட்டினாள் சாரா.

தேவஸ்வரின் பார்ட்டி அவரின் மிக பெரிய பண்ணை வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது அந்த பண்ணைக்கு செல்லும் வழியில் சிறிய காடு நீர் குளங்கள் மலை குன்றுகலென இயற்கையாக காணப்படும். சாரா தன் பாடலுக்கு தலையசைத்து ஆடி கொண்டிருக்க திடீரென ஒரு சிறிய வேன் ஒன்று காரின் பின் பகுதியை தாக்கியது மரஞ்செடிகளுக்கு பின்னே மறைந்திருந்து வந்த அந்த வேன் சாரவின் காரை குறி வைத்து தாக்கியதை அறிந்தான் மன்வீர்.பயத்தின் உச்சக்கட்டத்தில் சாரா அலற ஆரம்பித்தாள் ஓ மை காட் இங்க என்ன நடக்குது என்று அவள் பதற காரை வேகமாக வளைத்து வளைத்து ஓட்டினான் மன்வீர். நீங்க டென்ஷன் ஆகதீங்க மேடம் உங்கள நான் எப்படியும் சேவ் பண்ணுவேன் என்று கூற அது இல்ல மன்வீர் அந்த வேன பின்னால காணுமென்று அவள் கூற மன்வீர் திரும்பி பார்த்த போது கண்ணு கெட்டும் தூரம் வரை வேனை காணவில்லை ஏய் …….மன்வீர் முன்னாடி பாரு என்று சாரா கூற மன்வீர் பார்த்த போது அந்த வேன் வழியை மறைத்து நடுவில் நின்று கொண்டிருந்தது உடனே மன்வீர் ஸ்டெரிங்கை வேகமாக திருப்பி ரைட் டர்ன் செய்தான் கார் சடனாகா திரும்பிய வேகத்தினால் அங்கிருந்த பெரிய பள்ளத்தில் இடிப்பட்டு அதின் அருகே இருந்த சிறிய குளத்தை நோக்கி சென்றது. கட்டுப்பாட்டை இழந்து கார் குளத்தில் உள்ள தண்ணீரில் மூழ்க தொடங்கியது உடனே மன்வீர் தனது சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு காரின் வின்டோவின் வெளியே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.