“ம்ம் ரேஷ் இப்போ நல்லா தூங்கிருவா நைட் முழுக்க தூங்காம உக்காந்து கதை பேச சொல்லுவா..”
“சுருக்கமா சொல்லணும்னா நம்ம ஜீவியையே ட்ரில் வாங்குற ஒரு ஆள்னா அது என் பொண்ணு தான்..இல்லையா ஜீவிம்மா..”
“என்ன ஒரு சந்தோஷம் பார்த்தீங்களா என் மாமாக்கு..அப்பாவும் பொண்ணும் வச்சு செய்ராங்க..”,என்றவள் உண்மையாகவே சோர்ந்து தான் தெரிந்தாள்.இத்தனை நாட்களில் அவர்கள் யாருமே இப்படி ஒரு ஜீவிகாவை பார்த்திருக்கவில்லை.
“ஜீ ரொம்ப டயர்டா இருக்கியே டா..”,ஆத்விக்கு நிஜமாகவே அவளைப் பார்க்க பாவமாகிவிட்டது.
“ஆமா ஆத்வி அவ தான் ஃபுல்லா குழந்தையோட இருந்தாகனும்.அது மட்டுமில்லாம நைட் எல்லாம் தூங்காம படுத்துறா..அவ தூங்குற நேரத்துக்கு இவளால ஒழுங்கா தூங்க முடில.அம்மாவுக்கு வீட்டு வேலையே சரியா இருக்கு..மதர் பீட் ரொம்ப முக்கியமாச்சே..அதனால ரொம்பவே வீக்கா இருக்கா..”
“என்ன ப்ரோ அப்போ நாங்க வீட்டுக்கே வந்துருப்போம் தான.அவங்களையும் வேற ஏன் இவ்ளோ தூரம் அலைய வச்சுகிட்டு..”
“இல்ல ரினி அவளுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸேஷன் வேணும்னு தான் கூட்டிட்டு வந்ததே..குழந்தை பிறந்தப்பறம் அவ இன்னைக்கு தான் வெளிலேயே வர்றா..”
“ஐயோ ஜீக்கா உங்களைப் பார்த்தா எனக்கு இப்போவே உதறது இன்னும் ஆறு மாசத்துல என் நிலைமையும் இதானா!”
“ச்ச ஷான் குட்டி அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..கஷ்டம் தான் ஆனாலும் நம்ம குழந்தை முகத்தை பார்க்கும் போது எல்லாம் மறந்துரும்.வாழ்க்கையில ஒரு தடவை ஆனா வாழ்நாள் முழுசும் நமக்கு அழகான மெமரீஸ் கிடைக்கும்.”
அதற்குள் தூக்கத்தில் இருந்து விழித்திருந்த மகாலெட்சுமி வீல் என கத்த ஆரம்பித்திருந்தாள்.
“ஜி உருவம் தான் மச்சான் மாதிரி..ஆண்டவன் குரலை உன்னை வீட பல மடங்கு பயங்கரமா படைச்சுருக்கான்..”
உன் மண்டையை உடைக்குறேன் இரு டா..ஓ..ஓ..சரி சரி..”,என்றவள் குழந்தைக்கு பசியாற்றி வருவதாய் கூறி வெளியே செல்ல ரினிஷா அவளுக்குத் துணையாய் அவளோடு சென்றாள்.
சற்று நேரத்தில் வெளியே வந்தவர்களின் மேல் உயரமாய் ஒருவன் வந்து மறித்து நிற்க ஜீ அவனை ஏறிட்டு ஒரு நொடி யோசித்தவள் பின் ரினிஷாவின் ரசிகனாய் இருக்கும் என்ற முடிவிற்கு வந்தவளாய் அங்கிருந்து நகர நினைக்க ரினிஷா வேகமாய் அவள் கைப்பற்றிக்