(Reading time: 23 - 45 minutes)
Unnodu naanirukkum mani thuligal
Unnodu naanirukkum mani thuligal

விடிந்தும் விடியாத காலைப் பொழுதிலேயே தங்கையைத் தேடி வந்தவனை கண்டு அதிர்ந்து நின்றாள் ரினிஷா.

அண்ணா நீ ஊருக்கு போலையா?”

ஐ அம் சாரி டா ரினி..”

அண்ணா!!”

இல்ல டா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.இந்த கல்யாண விஷயத்துல முதல்ல இருந்தே எதோ பிடிவாதம் எனக்கு. அப்பா அம்மா கூட எவ்வளவோ சொன்னாங்க நான் தான் புரிஞ்சுக்காம போய்ட்டேன்..இன்னைக்கே ரேஷ்வாவைப் பார்த்து பேசுறேன் டா..”

அண்ணா..ஆனா அவரு என்ன சொல்லுவாறோ தெரிலேயே ணா..”

நேத்து நடந்ததை சொல்றியா கவலைப்படாத ரினி..இன்னைக்கு அவரைப் பார்த்து பேசி கல்யாண தேதி குறிச்சுட்டு தான் ஊருக்கு போவேன் சரியா..”

ம்ம் ண்ணா..தேங்க்ஸ் அ லாட்..”,என்றவள் கவலையோடு சேர்ந்த நிம்மதி உணர்வோடு மெதுவாய் தனதறறைக்குச் சென்று கதவை தாழிட்டாள்.

யாஹு..ஜீவிக்குட்டி..”,என்றவள் உல்லாசமாய் ஜீவிகாவிற்கும் ரேஷ்வாவிற்கும் கான்பரன்ஸ் கால் போட்டுவிட்டு அமைதியாய் இருந்தாள்.

ஹே ரினி ஆர் யூ ஓ.கே பேபி..”,என ரேஷ்வா பதட்டமாய் ஆரம்பிக்க அப்போதும் அமைதியாகவே இருந்தாள்.

அடியே ரினி நைட் புல்லா என் அரும மக என்னைத் தூங்க விடாம இப்போதான் டீ கண்ணை மூடினேன்..பொறுக்காதே என்ன டீ பிச்சனை உனக்கு..”

ஜீவிக்குட்டி..லவ் யூ லவ் யூ..”

ஆஆ கத்தாத இங்க தான இருக்கேன்..பத்தாததுக்கு உன் ஆளோட வயிறு எரியுற ஸ்மெல் இங்க வரை வருது பாரு..”

ஜீ!!”

சரி சரி ரேஷ் ஜி..ரினி தயவுசெஞ்சு என்ன விஷயம்னு சொல்லிட்டு போனை வை இல்ல உன் நொண்ணன் மேல இருக்குற கடுப்பையும் சேர்த்து உன்னை போட்டுத் தள்ளிருவேன்.”

ஜீக்குட்டிஅண்ணா வழிக்கு வந்துட்டார்.இன்னைக்கு வந்து ரேஷ்ஷை மீட் பண்றேன்னு சொல்லிருக்கார்..ரேஷ்..ஐ அம் சோ ஹேப்பி..”

அப்படி போடு அருவாள..ஜீவியா கொக்கா..ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது உன் அக்டிங் ஆசம் ஆசம்..அப்பறம் என்ன ரெண்டு பேரும் ஜாலியா போய் டூயட் பாடுங்க..நான் போய்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.