(Reading time: 23 - 45 minutes)
Unnodu naanirukkum mani thuligal
Unnodu naanirukkum mani thuligal

ஜீகிட்ட மாட்டிட்டார் உன் அண்ணன் நிலைமையை நினைச்சாசரி சரி முறைக்காத பேபி வா இன்னைக்கு எப்படியும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுவார்னு தோணுது..”,என்று அவளை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றான்.

அதற்குள் அங்கு அனைவருக்குமான அறிமுகத்தை முடித்திருந்தவள் அவனோடு ஏதோ பேசிக் கொண்டிருக்க மற்ற மூவரும் பேய் முழி முழித்துக் கொண்டிருந்தனர்.

சேட்டாக்கு ஏது இஷ்டம் வெஜ்ஜா நான் வெஜ்ஜா?”

நான் இங்க விருந்து சாப்பிட ஒண்ணும் வரலை..என்ன நடக்குது இங்க?”

சேட்டா ரிலாக்ஸ்..இத்தனை சின்ன வயசில இவ்ளோ கோபம் கூடாது..கேட்டோ..ஐயோ சரி சரி டென்ஷன் ஆகாதீங்க..இப்போ எதுக்கு இவ்ளோ கோபம்..நாங்க எல்லாருமே ப்ரெண்ட்ஸ் ரொம்ப நாளுக்கு அப்பறம் மீட் பண்ணலாம்னு ப்ளான் பண்ணிருந்தோம்.”

இவருக்கு இங்க என்ன வேலை?”

அவரும் எங்க ப்ரெண்ட் சொல்ல போனா அவரால தான் ரினியை எங்களுக்குத் தெரியும்.”

“…”

சேட்டா நான் பேசுறதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க ப்ளீஸ்..நானும் உங்களுக்கு ரினி மாதிரி தான..ப்ளீஸ்..”,என்றவளின் முகபாவத்தில் ரேஷ்வா புன்னகைத்துவிட கண்ணாலேயே எரிப்பதைப் போல் பார்த்தாள் ஜீவிகா.

சேட்டா..அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தரை அவ்ளோ லவ் பண்றாங்க.அதே நேரம் உங்களோட விருப்பத்துக்கு மரியாதை கொடுத்து இத்தனை நாள் காத்துட்டு இருக்காங்க..இதுலேயே தெரிலையா ரேஷ் உங்க தங்கச்சி  விருப்பத்துக்கு எவ்ளோ மரியாதை கொடுக்குறார்னு..”

எல்லாம் நடிப்பு..ஒரு ஹீரோவுக்கு நடிக்க சொல்லித் தரனுமா..எத்தனையோ பேரை பார்த்தாச்சு..இதெல்லாம் ஒத்து வராது..எல்லாம் இந்தபேர் புகழ் இருக்குற வரை தான் நாளைக்கே எது வேணாலும் எப்படி வேணாலும் மாறலாம்.என் தங்கச்சி வாழ்க்கையை என்னால ரிஸ்க் எடுக்க வைக்க முடியாது..”

நீங்க பேசுறது உங்களுக்கே அபத்தமா இல்லையா..நீங்க பார்த்து கல்யாணம் பண்ணி வைக்குற மாப்பிள்ளை மட்டும் கடைசி வர மாறமாட்டான்னு என்ன நிச்சயம்..அப்படி நடந்தா பரவாயில்லையா..”

அப்படியெல்லாம் விசரிக்காம முடிவெடுக்க மாட்டேன்..”

இங்க பாருங்க எந்த ஒரு உறவுக்கும் அடிப்படை நம்பிக்கை தான்.நீங்க யாரோ ஒருத்தர் மேல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.