(Reading time: 23 - 45 minutes)
Unnodu naanirukkum mani thuligal
Unnodu naanirukkum mani thuligal

கொண்டு துள்ளிக் குதித்து ஓடினாள்.

என்ன டீ நடக்குது இங்க??”

ஹா ஹா மாம்ஸ் பயந்துட்டீங்களா..எல்லாம் ஒரு சின்ன ட்ராமா தான்..ரேஷ் ரிலாக்ஸ்..”

ஜி நானே உன்னை கொன்னுடுவேன்..என்ன பண்ணி வச்சுருக்க..”

ஹா ஹா நானும் ரினியும் எப்போ பேசினாலும் அவகிட்ட சொல்லுவேன் என்னைக்காவது உன் அண்ணன் என் கண்ல பட்டா என் ஸ்டைல்ல ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விடுறேன் பாருனு.இன்னைக்கு அவரை பார்த்தது ரொம்பவே அன்எக்ஸ்பெக்டட் தான்.

நானும் சாதாரணமா பேசி புரிய வச்சுரலாம்னு பார்த்தா ஒண்ணும் நடக்குற மாதிரி தெரில அதான் கிடைச்ச கேப்ல ரினி செல்லத்துக்கு கண்ஜாடை காட்டிட்டு வாய்க்கு வந்ததை போட்டு தாக்கிட்டேன்..ஆனா ரேஷ் உங்க ஆளு கற்பூரம் அப்படியே சுச்சுவேஷனை பிடிச்சு என்ன ஒரு இமோஷன் குடுத்தா பார்த்தீங்கள..

இனி ஒரு ஏழெட்டு பிட்டு போட்டு எப்படியாவது சமாளிச்சுருவா..சீக்கிரமே உங்களுக்கு கல்யாணம் தான்..ஏலேய் டோண்ட் வொரி பீ ஹேப்பி..”,என்று முடித்தது தான் தாமதம் ஷான்யாவை தவிர மற்ற மூவரும் அவளை அடிக்க ஆரம்பித்திருந்தனர்.

ஆ கொலை கொலை..கொலைகாரப் பாவிங்களா..யோவ் மாம்ஸ் பொண்டாட்டி மேல பாசமே இல்ல..”

பாசம் இருக்குறதுனால தான் வலிக்காம அடிக்குறேன் இல்ல..”

நல்லது பண்ணா ஏன்யா அடிக்குறீங்க..”

நல்லதா..மண்ணாங்கட்டி..ஒரு நிமிஷம் எல்லாருக்கும் உயிரே போய்டுச்சு..ரேஷ் முகத்தை பாரு லூசு..”

ஆத்வி பையா காதல் னா சில பல அதிர்ச்சி வைத்தியங்கள் தேவை தான..”

ஜீ சத்தியமா உன்னை கொல்ல போறேன்..என் வாழ்க்கைல விளக்கேத்தலனா கூடபரவால்ல இப்படி ஒரு கொள்ளி கட்டையை சொருகிருக்கியே..எத்தனை நாள் ஆசை இது உனக்கு..”

ரேஷ் உங்களுக்கு என்னை பத்தியும் தெரில உங்க மச்சானைப் பத்தியும் தெரில..நீங்க வேணா பாருங்க நம்ம புள்ள போடுற சீன்ல நாளைக்கே வந்து ஓகே சொல்றாரா இல்லையானு..நம்பிக்கை அதானே எல்லாம்..”

ஷான்யா இன்னும் நடப்பது ஒன்றும் புரியாதவளாய் பேயறைந்தார் போல் முழித்திருக்க அவள் தோளில் லேசாய் தட்டியவள்,

ரிலாக்ஸ் ஷான் குட்டி..சாப்பாடு ஆறுது பாரு சாப்டு..”,என்றபடி தனக்கான உணவை வாயில் வைக்க ஆண்கள் மூவரும் கொலைவெறியோடு அவளைப் பார்த்திருந்தனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.